அவமானத்தால் மண்டபத்தை விட்டு வெளியேறும் குடும்பம்..மண்டியிட்டு கதறிய ஜீவா.. தனம் செய்த செயல்

முல்லையின் அம்மா கேட்ட கேள்வியால் ஜீவா மேலும் கோபப்பட்டு கதறி அழுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் முல்லையின் அம்மா எகத்தாளமாக பேசி மேலும் பிரச்சனையை பெரிது பண்ணுகிறார்.

ஜனார்த்தனன் ஒரு பக்கம் ஜீவாவிற்கு ஆறுதலாக பேசுவது போல பேசி தன் பக்கம் இழுக்கப்பாக்கிறார்.

தனம் பிரச்சனையை சமாதானம் செய்ய பார்க்க அது மேலும் பிரச்சனையாக முடிகிறது.

ஜீவாவின் கேள்வி

ஜீவாவின் கேள்வி

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 23ஆம் தேதி காண எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜீவா மூர்த்தியிடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறார். இதுவரைக்கும் நாம் எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிட்டால் யாருடைய மனசிற்குள் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று சொல்விங்களே? நான் எத்தனை நாளா மனதுக்குள்ளே இவ்வளவு விஷயங்களை வைத்து, அழுது கொண்டிருக்கிறேன். உங்களுக்கு என்னைக்காவது புரிஞ்சு இருக்கா? அதைப் பற்றி ஒரு நாளாவது நீங்க பேசி இருக்கீங்களா? என்று கேட்கிறார்.

சண்டையிடும் முல்லை அம்மா

சண்டையிடும் முல்லை அம்மா

பிறகு தனம் நாங்க அப்படி எல்லாம் ஒரு நாளும் நினைச்சதே இல்லை. நீ இப்படி எல்லாம் யோசிப்பானு கூட நாங்க நினைக்கலை என்று பேச, அப்போ உங்களுக்கு எல்லாம் என் மாப்பிள்ளை கார் வாங்கி சொந்தமா ஹோட்டல் வச்சதுதான் பொறாமையா? என்று முல்லையின் அம்மா என்று கேள்வி கேட்க, உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்க போட்டியில் கலந்து கொண்டு ஜெயிச்சி கார் வாங்க வேண்டும். அந்த ஹோட்டல் ஒன்னும் பாண்டியன் ஸ்டோருக்கு கிடையாது. அது என்னுடைய மகளுடைய நகையை வைத்து வாங்கிய ஹோட்டல். அதில் வர லாபத்தையும் உங்களுக்கு தான் மொத்தமா தூக்கி தரணுமா? இது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்க மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக முல்லை தடுக்கிறார்.

ஜனார்த்தனனிடம் பதில் இல்லை

ஜனார்த்தனனிடம் பதில் இல்லை

முல்லையின் அம்மா கேள்வி கேட்பதை பார்த்து ஜனார்த்தனன் என் பொண்ணும், மருமகனும் கார் வாங்க வேண்டும் என்றால் போட்டியில் கலந்து கொண்டு தான் வாங்க வேண்டும் என்று இல்லை. நான் அவர் உம் என்று சொன்னால் நான் பத்து காரு கூட இப்ப கூட நிறுத்துவேன். நான் கொடுத்த காரையும் உங்க குடும்பத்தினர் சொல்லி தான் அவர் வேண்டாம் என்று என்னிடம் கொடுத்து விட்டார் என்று சொல்ல, அதற்கு முல்லையின் அம்மா அப்போ எதுக்கு என் மருமகன் வாங்குன வீட்டுக்கு உங்க மகளும் மருமகனும் வந்து தங்குனாங்க? நீங்க ராத்திரியோட வீட்டை விட்டு விரட்டியதால் தானே எங்க வீட்டில் வந்து தங்குனாங்க என்று முல்லையின் அம்மா கேட்க? ஜனார்த்தனால் பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சியாக நிற்கிறார்.

எல்லாத்தையும் சொல்லும் ஜீவா

எல்லாத்தையும் சொல்லும் ஜீவா

இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க, ஜீவா அத்தையும் சொல்லட்டும் இன்னும் யாரு யாருக்கெல்லாம் என்னை திட்டனுமோ அவங்களும் சொல்லிடுங்க என்ன சொல்கிறார். தயவுசெய்து நீங்க யாரும் பேசாதீங்க என்று தனம் கூறி, வீட்டுக்கு வா போகலாம் ஜீவா என்று சொல்ல. நான் எதுக்கு வரணும் அது கதிரோடு வீடு இனி உங்களுக்கு கதிரும் கண்ணனும் தான் தம்பிகள். நான் இல்லை என்று நான் ஒதுங்கிகுறேன் என்று கூறுகிறார். நான் என் பிள்ளைக்கு டைபர் வாங்கணும் என்றால் கூட உங்ககிட்ட தான் வந்து நிக்கணும். நான் சம்பாதிக்க தெரியாதவன் தானே? என் பொண்டாட்டி பிள்ளைங்க கேக்குறதை என்னால வாங்கி கொடுக்க முடியாது, என்று டயபர் வாங்குவதற்கு மூர்த்தி 200 ரூபாய் கொடுத்ததை சொல்லி காண்பிக்கிறார்.

கேப்பில் பற்ற வைக்கும் ஐஸ்வர்யா

கேப்பில் பற்ற வைக்கும் ஐஸ்வர்யா

இதே நேரத்தில் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காத அடிச்சு பல்லை உதிர்த்திடுவேன் என்று மூர்த்தி ஜீவாவை பார்த்து சொல்ல, அதற்கு கடுப்பான ஜனார்த்தனன் எப்படி மூர்த்தி நீங்க இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம். அவர் என்னுடைய மருமகன். இனி இப்படி எல்லாம் பேசுற வேலை வச்சிக்க கூடாது என்று சொல்ல, அதற்கு மூர்த்தி அப்போ இனி எனக்கு என் தம்பியை அடிக்கிற உரிமை கூட இல்லையா என்று கேட்க? யாரு உங்க தம்பி? இனி நான் உங்க தம்பி கிடையாது. கதிரும் கண்ணனும் மட்டும்தான் உங்க தம்பி என்று சொல்கிறார். ஜனார்த்தனன் பேசியதை கேட்டு ஐஸ்வர்யா பார்த்தியா கண்ணா உன்னை அடிச்சதுக்கு யாருமே எதுவும் சொல்லலை. ஜீவா மாமாவை அடிப்பேன் என்று சொன்னதுக்கே அவங்க மாமா கோவிச்சுட்டு வராரு என்று சொல்ல கண்ணன் ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.

விரட்டும் ஜீவா

விரட்டும் ஜீவா

இதை கேட்டு கதிர் அண்ணா நீ இன்னைக்கும் குடிச்சிருக்கியா? நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே என்று கேட்க, ஜீவா அப்போ நான் குடிச்சா தான் தைரியமா பேசுவேனா? தைரியம் இல்லாதவன் என்று சொல்றியா? என்று கேட்டதோடு இனி நான் வரப்போவதில்லை. எல்லாரும் இங்கு இருந்து கிளம்புங்க என்று கூறுகிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+