நீ பைத்தியமா? அடிக்க கை ஓங்கிய முல்லை.. கையெடுத்து கும்பிட்ட தனம்..திட்டிய ஐஸ்வர்யா..கண்ணனின் முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனை மண்டபத்தில் அடித்ததை வைத்து ஐஸ்வர்யா அனைவரிடமும் சண்டை இடுகிறார்.
மூர்த்தி பேசிய வார்த்தையால் ஐஸ்வர்யா பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்ப போகிறார்.
கண்ணன் ஐஸ்வர்யாவோடு சேர்ந்து வெளியே போகவா வேண்டாமா என்று தவித்துக் கொண்டிருக்கிறார்.

தனத்தை கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 27ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கண்ணனுக்கு சப்போர்ட்டாக அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தனத்தை பார்த்து நீங்களும் இந்த வீட்டுக்கு வாழ வந்தவங்க தானே ஆனால் மாமியார் மாதிரி நடத்துறீங்க. நீங்க சொல்றதை மட்டும் தான் நாங்க செய்யணுமா? நீங்க சொல்றதுதான் நாங்க சமைக்கணும் ஒரு நல்ல நாள் வந்தாலும் நீங்க சொல்றதுதான் சமைக்கிறோம். நீங்க சொல்றது தான் சாப்பிடணும், நீங்க வாங்கி தர துணியை தான் போடனுமா என்று நிறைய அடுக்கி கொண்டே போகிறார்.

கை ஓங்கிய முல்லை
ஐஸ்வர்யா பேசுவதை கேட்டு கோபமான முல்லை உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? என்று அடிக்க கை ஓங்கி, உங்க சித்தி மாதிரி உங்க அம்மா மாதிரி நீயும் பண்ணிக்கிட்டு இருக்கிற என்று திட்டுகிறார். நான் என் பக்கத்தில் நியாயம் இருக்கிறது என்று நம்புகிறேன். அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன் என்று ஐஸ்வர்யா பதில் கூற, இதில் ஏதோ ஒரு முடிவு ஐஸ்வர்யா இப்படி பேசிக்கிட்டு இருக்குது என்று சொல்ல, இந்த வீட்டில் சந்தோஷமாக இல்லை கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன் இங்கே ஒரு பிரைவசி இல்லை என்று அடுத்து மூர்த்தியிடம் பல விஷயங்களை ஐஸ்வர்யா அடுக்கிக் கொண்டே போகிறார்.

வீட்டை விட்டு கிளம்பிய ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா பேசுவதை கேட்டு கோபமான மூர்த்தி கஷ்டப்பட்டு எல்லாம் இங்கு யாரும் இருக்க வேண்டாம் என்று திட்டுகிறார். அதனால் மேலும் கோபம் ஆன ஐஸ்வர்யா அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க? என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்ல போறீங்களா? அப்படித்தானே அப்ப நானே வெளியில் போயவிடுறேன் என்று பேக்கை தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். எல்லோரும் தடுத்து பார்த்தாலும் யார் பேச்சையும் கேட்காமல் ஐஸ்வர்யா கிளம்புகிறார். அப்போது கதிர் கண்ணனிடம் இது எல்லாம் நல்லதுக்கு கிடையாது கொஞ்சம் சொல்லி புரிய வை கண்ணா என்று சொல்கிறார்.

கண்ணனின் முடிவு என்ன
கண்ணன் தடுத்தாலும் ஐஸ்வர்யா நிறுத்தாமல் வெளியே வந்து விட்டு கண்ணனை பார்த்து உனக்கு நல்லது நடக்கணும் என்று நினைக்கிற நான் வேணுமா? இல்லை இவங்க தான் வேணுமா என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்று சொல்ல, கண்ணன் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications