தப்பை புரிஞ்சுக்காத மூர்த்தி.. கதிர் பதிலடி.. மீனாவை திட்டும் அப்பா.. வீட்டிலிருந்து போக ஜீவா முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி கதிர் வீட்டில் இருந்து கிளம்பி போவதாக கூறுகிறார்.
மீனாவை அவருடைய அப்பா ஜீவாவிற்கு ஆதரவாக திட்டுகிறார்.
மீனாவின் வீட்டில் இருந்து புது வீட்டிற்கு வாடகைக்கு சென்று விடலாம் என ஜீவா கூறுகிறார்.

மூர்த்தியின் விதண்டாவாதம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 29ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் மூர்த்தியை சாப்பிட சொன்ன கதிரிடம் மூர்த்தி கத்திக் கொண்டிருக்கிறார். பிறகு நாமதான் இந்த வீட்டில் வந்து இருக்கோம் அதனால நாம தான் இந்த வீட்டை விட்டு போகணும் வா வெளியே போகலாம் என்று தனத்திடம் கூப்பிட்டுக் கொண்டிருக்க, கதிர் நீங்க எப்படி உடைஞ்சு போய் இருக்கீங்களோ அந்த மாதிரி தான் நாங்களும் உடைந்து போய் இருக்கோம். நீங்க இந்த மாதிரி பேசி எங்க மனசை காயப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் வேணா இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்று சொல்கிறார்.

தப்பு இவங்க செய்யலையாம்
பிறகு பிரிந்து போன ஜீவாவும் கண்ணனும் சீக்கிரமாக வந்துருவாங்க. அதுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்று கூறி மூர்த்தியை சமாதானம் செய்கிறார். தனமும் அது போலவே போனவங்க எல்லாரும் வந்துருவாங்க நீங்க கோபப்படாதீங்க என்று சொல்ல, கதிர் அவங்க பண்ண தப்புக்கு எங்களை தண்டிக்காதீங்க என்று கதிர் மூர்த்தியிடம் பேசி சமாதானப்படுத்துகிறார். எல்லோரும் அழுது கொண்டிருக்கின்றனர்.

சந்தோஷத்தில் ஜனார்த்தனன்
அடுத்து மீனாவின் வீட்டில் ஜனார்த்தனன் மனைவியிடம் நான் மாப்பிள்ளை சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்துருவாருன்னு சொன்ன மாதிரி நடந்துச்சா என்று கேட்க? ஆனா அந்த குடும்ப மாதிரி சுயநலமா யாரும் கிடையாது என்று அவருடைய மனைவி பேசிக் கொண்டிருக்க, யாரெல்லாம் நாங்க தியாகம் பண்றோம் என்று சொல்றாங்களோ? அவங்க உள்ள போய் பார்த்தோம்னா அங்க துரோகம் மட்டும்தான் இருக்கும் என்று ஜனார்த்தனன் கூறிக்கொண்டு, இதையே நாம சொல்லி இருந்தா உன் மாப்பிள்ளை கேட்டுருப்பாரா? இப்ப அவரா புரிஞ்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்து இருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மீனாவை திட்டும் அப்பா
அப்போது மீனா நேற்று இரவு ஜீவாவிடம் அந்த வீட்டிற்கு போவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததை பற்றி அவருடைய அம்மா ஜனார்த்தனனிடம் போட்டுக் கொடுக்க, மீனாவை கூட்டிக் கொண்டு வா என்று ஜனார்த்தனன் கூறுகிறார். மீனா வந்ததும் அதற்கு மீனா ஜீவா ரொம்ப பட்டு பட்டுன்னு பேசிட்டான். என்னாலயே அதை தாங்க முடியல என்று சொல்ல, அதற்கு ஜனார்த்தனன் எவ்வளவு வலி இருந்திருந்தால் அப்படி பட்டு பட்டுன்னு பேசியிருப்பாரு என்று மீனாவிற்கு பதிலடி கொடுக்கிறார்.

இதுவும் உண்மைதானே மீனா
அதுக்கு மீனா அவங்களால இதை தாங்க முடியல என்று சொல்ல. அப்போ தாங்க முடியலன்னா போகட்டும் என்று ஜனார்த்தனன் கூறி பத்திரிக்கை வைக்கும் போது பிரசாந்த் எடுத்து எடுத்து பணத்தை செலவழித்துக் கொண்டிருக்க இவர் பையைத் தொட்டு கொண்டு நின்று கொண்டிருந்ததை பார்க்கும்போது எப்படி இருந்தது தெரியுமா? என்று பழைய கதைகளை எல்லாம் பேசி அவர் இப்பதான் நம்ம வழிக்கு வந்திருக்காரு, நீ அமைதியா இருக்க மாட்டியா? என்று மீனாவை திட்டுகின்றனர்.

ஏத்தி விடும் ஐஸ்வர்யா
மீனா இப்படி பேசுவதற்கு காரணம் அந்த குடும்பம் அவளுக்கு இப்படி வசியம் பண்ணி வைத்து இருக்கிறது என்று அவருடைய அப்பா கூறிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஐஸ்வர்யாவின் வீட்டில் கண்ணன் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க, ஏன் இப்படி இருக்க என்று ஐஸ்வர்யா கேட்க எல்லோரும் தனித்தனியாக கவர் கொடுக்கும் போது அவர் கொடுத்த பணத்துக்கு அவர் பெயரை எழுதிவிட்டேன் ஆனா அதுக்கு இவ்வளவு பிரச்சனையா? என்று கண்ணன் சொல்ல, ஆமா கதிர் மாமா தான் தனியா கவர் கொடுத்தாரு ஆனா யாராவது அவரை ஏதாவது கேட்டாங்களா? உன்ன தான் எல்லாம் கேக்குறாங்க என்று ஐஸ்வர்யாவும் ஏத்தி விடுகிறார். கண்ணன் தான் செய்த தவறுகளே இல்லை என்று கூறி மூர்த்தி தன்னை அடித்தது தவறுதான் என்று ஐஸ்வர்யாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆறுதல் கூறும் மாமனார்
அடுத்ததாக மீனா ஜீவாவிடம் நாம மாமா அக்கா கிட்ட மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு போயிறலாம் என்று சொல்ல, என்னை அந்த வீட்டுக்கு நீ போக சொல்றியா? என்று ஜீவா மீனாவை திட்டிக்கொண்டு, நான் இனி அங்க போக மாட்டேன். ஆனால் வேற எங்கேயாவது வீடு வாடகைக்கு பார்த்துட்டு போயிடலாம் என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருப்பதை ஜனார்த்தனன் கேட்டு, எதற்காக மாப்பிள்ளை நீங்க இந்த வீட்டை விட்டு போகணும் இந்த சொத்து பத்து பணம் எல்லாமே மீனாவிற்கு தான். நீங்க இங்க தான் இருக்கணும். உங்களுக்கு இங்கு இருக்க பிடிக்கலைன்னா நானே புது வீடு கட்டி தரேன் என்று சொல்கிறார். நீங்க எதுக்கும் கலங்க கூடாது நான் இருக்கேன் என்று ஜீவராவிற்கு ஜனார்த்தனன் ஆறுதல் கூறுகிறார்.

இப்படி பேசலாமா மூர்த்தி
அடுத்த நாள் காலையில் மூர்த்தி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க கதிர் அவரிடம் வந்து அண்ணா நல்லா தானே இருக்கீங்க என்று கேட்க, மூர்த்தி அதற்கு கோபப்பட்டு நான் என்ன செத்தா போயிட்டேன் என்று கேட்க? அதற்கு தனம் அவன் உங்ககிட்ட நல்லா இருக்கீங்களா என்று ஆறுதலா தானே கேட்டான். அதுக்கு எதுக்கு இப்படி பேசணும் என்று சொல்ல, தனத்தை மூர்த்தி திட்டுகிறார். இனி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்று தனம் கூறியதும் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications