காசு இல்லாமல் தவிக்கும் ஜீவா.. பணத்துக்காக கையேந்தும் மீனா... கடைசியில் ஏற்பட்ட எதிர்பாராத நிலை
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா தன்னிடம் கையில் பணம் இல்லாததால் மீனா கேட்கும் பொருள்கள் வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறுகிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன பொருட்கள் வாங்குவதற்கும் தனத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஜீவா வருத்தப்படுகிறார்.
குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியவில்லை என்னிடம் பணம் இல்லையே என்று ஜீவா முதல் முறையாக ஃபீல் பண்ணுகிறார்.
கண்ணனின் சம்பள விஷயத்தை வீட்டுக்கு தெரியுமா என்று ஜீவா கேட்க அதற்கு மீனா நான் சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

பணத்துக்காக கையேந்தும் மீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் மீனா காய்கறி வாங்க வேண்டும் என்று தனத்திடம் படம் கேட்கிறார். அதற்கு தனம் பணத்தை கொடுத்துவிட்டு சொல்லுற விலைக்கு எல்லாம் வாங்கிடாத, பேரம் பேசி வாங்கு என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதன் படியே மீனாவும் ஒவ்வொன்றாக வாங்கி வைத்துக்கொண்டு இன்னும் ஒரு 30 ரூபாய் தாங்க என்று கேட்க, இது பத்தலையா என தனம் கேட்டபடி கையில் பரிசை கொடுத்து இதை உள்ளே வைத்து விடு என்று சொல்கிறார். இதை ஜீவா பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

யோசித்துப் பார்க்கும் ஜீவா
அடுத்ததாக மீனா பூக்கார அம்மாவுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று சொல்ல, நான் எடுத்து வைத்து விடுகிறேன் என்று தனம் சொல்கிறார். பிறகு நான் வேலையை பார்க்க போகிறேன் என்று மீனா கிளம்பி செல்ல ஜீவா, கண்ணன் தான் பணம் பாதி எடுத்து வைத்துவிட்டு அண்ணனிடம் கொடுப்பதற்கு சொன்ன காரணத்தை நினைத்து பார்க்கிறார். மீனாவிடம் எந்த பணமும் இல்லாததால் தான் மீனா எந்த முடிவும் செய்ய முடியவில்லை என்று ஐஸ்வர்யா சொன்னதையும் ஜீவா நினைத்து பார்க்கிறார். பிறகு கடைக்கு செல்கின்ற ஜீவாவிற்கு மீனா போன் செய்து இன்னைக்கு கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கப் போகிறோம் தானே? என்று கேட்க அதற்கு ஆமாம் என்று சொல்கிறார்.

பணத்துக்காக தவிக்கும் ஜீவா
மீனா கயலுக்கு டயபர் வாங்கி வர ஜீவாவிடம் கூறுகிறார். கடையில் இருப்பது வேண்டாம் அது சின்ன சைஸ் ஆக இருக்கிறது. வேற வாங்கி வா என்று சொல்கிறார். அதற்கு சரி என்று ஜீவா சொல்லி அண்ணனிடம் பணம் கேட்க அவர் 200 ரூபாய் கொடுக்க, சொன்ன பொருள் வாங்க இந்த பணம் போதாது என்று யோசித்து கொண்டு இருக்க மூர்த்தி வேலை முடிந்து சீக்கிரமா வா என்று கூறி அனுப்புகிறார்.

யோசித்துப் பார்க்கும் ஜீவா
அடுத்தது ஜீவா வீட்டுக்கு வந்ததும் மீனாவோடு கிளம்பி வெளியே செல்ல தயாராக வெளியே செல்வதற்கு பணம் இருக்கிறதா? என்று மீனா கேட்க இருக்கிறது என்று கூறிவிட்டு கையில் இருக்கும் 50 ரூபாயை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்திலும் கண்ணன் சொன்னது மீண்டும் நினைவிற்கு வருகிறது. பிறகு தனம் பத்திரமா போயிட்டு வாங்க என்று வழி அனுப்பி வைக்கிறார். பிறகு நீங்கள் எதுல போக போறீங்க என்று கேட்க பைக்ல தான் என்று ஜீவா சொல்ல அதற்கு தனம் அதை கண்ணன் எடுத்துட்டு போயிட்டான் என கூறுகிறார். அப்போ காரை எடுத்துட்டு போங்கலேன் என்று தனம் சொல்ல, மீனா வேண்டாம் நாங்க வேற எங்கேயாவது இடிச்சிடுவோம் நீங்க எங்களை திட்டுறதுக்கா? அது என்று கேட்கிறார். பிறகு பழைய மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர்.

மீனாவின் பெருந்தன்மை
அதற்குப் பிறகு கண்ணனின் சம்பளம் பற்றி யார்கிட்டயும் சொன்னியா என்று ஜீவா பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது மீனாவிடம் கேட்க, நான் ஏன் சொல்லப் போகிறேன் என்று கூறுகிறார். பிறகு முல்லைக்கு கதிர் வாங்கிய கம்மலை பற்றி மீனா பேசுகிறார். அதற்கு ஜீவா எனக்கு தான் ஏற்கனவே தெரியுமே, என்கிட்ட சொன்னான் கதிர் என்று சொல்கிறார். பிறகு மீனா அவங்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications