குடித்துவிட்டு மன கஷ்டத்தை மாமனாரிடம் கொட்டும் ஜீவா.. இனி அடுத்தடுத்து நடக்க போகும் அதிரடி..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடைய வீட்டில் நடக்கும் கஷ்டங்களை ஜீவா குடித்துவிட்டு உளறி இருக்கிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜீவா மாமனார் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ஜீவாவை அடிக்கடி அழைத்து மூர்த்தி தொந்தரவு செய்து கொண்டிருக்க ஜீவாவின் மாமியார் கோபப்படுகிறார்.
இரவில் மாமனார் வீட்டில் குடித்துவிட்டு ஜீவா தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் அனைவர் முன்னாடியும் கொட்டி இருக்கிறார்.

அவமானப்படுத்தும் மீனாவின் அப்பா
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 8ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜீவா, மீனா குழந்தையோடு அப்பாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் சின்ன பைக்கில் வந்ததால் அவருடைய அம்மா எதற்காக இந்த பைக்கில் வந்தீங்க என்று கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க, காரை எடுத்துக் கொண்டு கதிர் சென்றிருக்கிறார் என்று சொல்ல, கதிர் வாங்கிய காரை அவர் தானே எடுத்துச் செல்வார் என்று மீனாவின் அப்பா குத்தலாக பேசுகிறார். பிறகு மீனாவின் தங்கையும் அவருடைய வருங்கால கணவரும் வருகின்றனர். அவர்களுடன் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மீனா எப்பவும் குழந்தைதான்
அடுத்ததாக மீனாவின் அப்பாவும் ஜீவாவும் பத்திரிக்கை வைக்க வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மீனாவிற்கு அவருடைய அம்மா சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க, மீனா சந்தோஷமாக இருப்பதை பார்த்து அவருடைய அப்பா இங்க பார்க்க மாப்பிள்ளை என் பொண்ணு மீனாவுக்கு குழந்தை பிறந்த பிறகும் எங்க வீட்டுல நாங்க அவல குழந்தையாக தான் பார்த்துக்கிட்டு இருக்கோம் என்று சொல்கிறார். அப்போது ஜீவா தன்னுடைய வீட்டில் மீனா கீழே படுத்து தூங்கியது மற்றும் அனைவருக்கும் தொடர்ந்து வேலைகளை செய்து கொண்டிருப்பதை நினைத்து பார்க்கிறார்.

தொந்தரவு செய்யும் மூர்த்தி
அடுத்ததாக ஜீவா, மீனா மற்றும் மீனாவின் அம்மா மூவரும் திருமண பத்திரிக்கை வைக்க காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி போன் செய்து எங்க இருக்க என்று கேட்க, நான் இங்க பக்கத்துல பத்திரிகை வைக்க போய்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு மூர்த்தி கடையில் ஆள் இல்லை. சீக்கிரம் முடிச்சிட்டு வந்துரு என்று சொல்கிறார். இன்னும் ஒரு சில வீடுகளுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நேரம் இருக்குமா? என்று மாமியார் ஜீவாவிடம் கேட்க அதெல்லாம் வச்சு விடலாம் என்று ஜீவா கூறுகிறார். பிறகு அடிக்கடி மூர்த்தி போன் பண்ணி கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். அதற்கு ஜீவாவின் மாமியார் ஒரு நாள் கூட நீங்க எங்களுக்காக எதுவும் செய்யக்கூடாதா? இப்ப மீனாவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியா இருந்தா நாங்களே எல்லாம் பார்த்திருப்போம் என்று கூறுகிறார். அதற்கு ஜீவா பீல் பண்ணுகிறார்.

புலம்பும் ஜீவா
மீனாவின் வீட்டில் மீனாவின் சகோதரியின் வருங்கால கணவர் மது அருந்தி கொண்டிருக்கின்றனர். அவர் ஜீவாவை வற்புறுத்தி குடிக்க வைக்கிறார். ஜீவா போதையில், கூட்டுக் குடும்பம் தான் பேரு ஆனா எல்லாமே வெளிய தான் உள்ளுக்குள்ள ஒண்ணுமே இல்லை என்று சொல்ல, அதற்கு பிரசாந்த் என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்க அண்ணன் தம்பி பாசத்தை பார்த்து ஊரே பெருமையாக பேசுது என்று சொல்ல, அது வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு தான் அப்படி உள்ள இருக்கவங்களுக்கு தான் தெரியும் நான் எவ்வளவு நொந்து போய் இருக்கேன்னு தெரியுமா என்று சொல்கிறார்.

இது வருத்தமாகத்தான் இருக்கிறது
அதற்கு என்ன நொந்து போய் இருக்கீங்க என்று பிரசாந்த் கேட்க? ஆமா இங்க பாக்கெட்டுக்குள்ள பாருங்க ஒரு ஒரு பைசா கூட இல்லை. எல்லாத்துக்கும் நான் வீட்டுல போயி நிக்கணும். எங்க வீட்டுல குட்டி பையன் கண்ணன் அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான், அவன் இஷ்டத்துக்கு செலவழிக்கிறான். கதிர் தனியா ஹோட்டல் வச்சுட்டான் அவனும் இஷ்டத்துக்கு செலவழிக்கிறான். ஆனா நான் அவங்க எல்லாத்தையும் விட ரெண்டு மடங்கு சம்பாதிக்கிறேன். ஆனால் என் கையில ஒன்னு கூட இல்லை. எல்லாத்துக்கும் அண்ணன் கிட்ட தான் போய் நிக்கணும். முடி வெட்டணும்னாலும் சரி, ஒரு செருப்பு வாங்கினாலும் சரி, எல்லாத்துக்கும் அண்ணன் கிட்ட தான் நிக்கணும் என்று பேசிக் கொண்டிருக்க, அதை கேட்டு மீனாவின் அப்பா சந்தோஷப்பட்டு மனதிற்குள்ளே யோசிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications