பணத்தை கொடுத்து அழகு பார்க்கும் மாமனார்.. நடுத்தெருவில் மீனா.. ஜீவாவால் அதிர்ச்சியாகும் மூர்த்தி
ஜீவா கடையிலிருந்து கிளம்பி சென்றதால் மூர்த்தி அதிர்ச்சி ஆகிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் செலவுக்கு ஜீவாவிற்கு மாமனார் பணம் கொடுத்து இருக்கிறார்.
ஜீவா பணத்தை கையில் வைத்து செலவு செய்வதை பார்த்து மாமனார் பெருமையாக ரசிக்கிறார்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மீனா நடுத்தெருவில் நின்று கொண்டு கூற ஜீவா கடையை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகிறார்.
கடைக்கு வந்த மூர்த்தி ஜீவாவின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பணத்தை வாங்கிய ஜீவா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் மீனா அவருடைய அம்மா வீட்டில் இருக்க, மீனாவை கூப்பிடுவதற்காக அங்கே ஜீவா செல்கிறார். ஜீவாவிடம் பேசிக் கொண்டிருக்கும் அவருடைய மாமனார் ஜீவாவிற்கு ஒரு கட்டு பணத்தை கொடுத்து இதை செலவுக்கு வைத்துக் கொள்ள சொல்கிறார். அதற்கு அவர் எனக்கு பணம் தேவையில்லை. நான் தான் செலவு செய்ய வேண்டும் இது வேண்டாம் என்று மறுத்து பேச, நீங்கள் தான் என்னுடைய மூத்த மருமகன் நீங்கள் எந்த இடத்திலும் குறைவாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார். பிறகு ஜீவாவும் சரி என்று ஜீவாவும் பணத்தை வாங்கி வைத்துக் கொள்கிறார்.

பெருமையாக பேசும் மாமனார்
அடுத்த நாள் பிரசாந்த் மற்றும் மாமனாரோடு ஜீவா பத்திரிக்கை வைப்பதற்காக கிளம்பி செல்கிறார். வெளியே செல்லும் இடம் எல்லாம் செலவாகும் பணத்திற்கு தன்னிடம் இருந்த கட்டு பணத்திலிருந்து 500 ரூபாய் நோட்டு தாள்களை எடுத்து ஒவ்வொன்றிற்காக கொடுத்துக் கொண்டிருக்க, அதை பார்த்து பிரசாந்த் என்ன ப்ரோ நேத்து பாக்கெட்டில் பைசா இல்லை என்று கிண்டல் பண்ணதற்காக இன்னைக்கு கட்டா பணத்தை எடுத்துட்டு வந்து இருக்கீங்களா? என்று கிண்டல் செய்கிறார். பிறகு ஜனார்த்தனன் என்னுடைய மூத்த மருமகன் எனக்கு செலவு செய்யும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அவர் எனக்கு மகனுக்கு மேலே என்று பிரசாந்த் இடம் பெருமையாக பேசுகிறார்.

ரோட்டில் தவிக்கும் மீனா
அடுத்ததாக கடையில் இருந்து மூர்த்தி ஒரு நபர் பணம் தர வேண்டியது இருக்கு நான் அவரிடம் சென்று பணத்தை வாங்கிவிட்டு வந்துவிடுகிறேன் என்று கடையில் இருக்கும் நபரிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அவர் சென்று சிறிது நேரத்திற்குள் ஜீவா கடைக்கு வர, கடையில் இருக்கும் வேலையால் ஜீவாவை கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மோர் குடித்து வருகிறேன் என்று அவரும் கிளம்பி போய்விடுகிறார். அப்போது மீனா வீட்டில் அம்மாவும் அப்பாவும் இல்லை கயல் அழுதுகிட்டே இருந்தா உடல் சரியில்ல அதனால நானும் கிளம்பி வந்துட்டேன். கையில் காசு இல்ல இப்போ ரோட்டில் நிற்கிறேன் என்று கூறுகிறார்.

அதிர்ச்சியாகும் மூர்த்தி
பிறகு ஆட்டோ அனுப்பலாம் என்று ஜீவா பார்க்க ஆட்டோக்காரர் பணம் கேட்க, கையில் பணம் இல்லாமல் கல்லாப்பெட்டியை பார்க்க கல்லாப்பெட்டி சாவியை மூர்த்தி வேறு இடத்தில் வைத்துவிட்டு சென்றதை வேலையாள் ஜீவாவிடம் சொல்லவில்லை. இதனால் கடையை பாதிவரைக்கும் சாத்திவிட்டு ஜீவா மீனாவை கூப்பிடுவதற்கு பைக்கை எடுத்து வந்து விடுகிறார். பிறகு கடைக்கு வரும் மூர்த்தி அங்கே கடையில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டு கடையை சாத்திக் கொண்டு எல்லாரும் எங்க போனாங்கன்னு தெரியலையேன்னு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications