பாண்டியன் ஸ்டோரிலிருந்து கதாநாயகியாக மாறும் நடிகை.. வாய்ப்பிற்கு காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் லாவண்யாவிற்கு புது வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சீரியல்களில் நடித்து வந்த நடிகை லாவண்யாவிற்கு தற்போது முதல் முறையாக திரை படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறிமுகமாகி சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது லாவண்யாவிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

அண்ணன் தம்பி கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு வரும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டிருந்ததாக இருந்தாலும் தற்போது அடுத்தடுத்து அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக இந்த சீரியலில் விறுவிறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரியும் குடும்பம்
சில வாரங்களுக்கு முன்பு இதே சீரியல் ஒரே கர்ப்ப காட்சிகளை மட்டுமே மையமாகக் கொண்டு ஜவ்வாக இழுத்துக் கொண்டு இருந்த நிலையில், தற்போது குடும்பம் பிரிபடுவதை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

இவருக்கு பதில் இவர்
இது ஒரு பக்கம் இருக்க இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த சீரியலில் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே நடித்து வந்தாலும் அவர்கள் அதிக நாட்கள் நடிக்காமல் இவருக்கு பதில் இவர் என்று மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தவர்கள் அதே கேரக்டரில் அப்படியே இருக்கிறார்கள். குறிப்பாக முல்லை கேரக்டர் ஐஸ்வர்யா கேரக்டர் போன்றவைகள் அடிக்கடி மாற்றப்படும் கேரக்டராக மாறி இருக்கிறது.

இனி வெள்ளித்திரை கதாநாயகி
இந்த நிலையில் தற்போது மூன்றாவது முல்லை கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான். ஆனால் அந்த சீரியல் ஒளிபரப்பாகிய தொடங்கி சில மாதங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தற்போது முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் மனதில் பதிந்திருக்கும் நேரத்தில் இவருக்கு வெள்ளி திரையில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். ரேசர் என்னும் திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications