6 மாதம் மட்டும் என் கூட.!? பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை இடம் டீலிங் பேசி இயக்குனர்.. வெளிவந்த உண்மை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் விஜய் டிவியில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் ஆரம்பகாலத்தில் தன்னிடம் ஒரு இயக்குனர் தவறாக பேசியதை குறித்து பேசி இருக்கிறார்.

பல திருப்பங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியல் ஆக இருக்கிறது. இந்த சீரியல் சமீப காலமாக கதை இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களாக இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்பங்களும் அதிரடி சுவாரசியங்களும் நடந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் இதற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் ட்ரெண்டிங்கில் வந்து கொண்டிருக்கிறது.

மூன்றாவது முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிகமான கேரக்டர்களின் நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்று பலர் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் முல்லை கேரக்டரில் தற்போது மூன்றாவதாக முல்லையாக நடிகை லாவண்யா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்றும் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான். தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சீரியலுக்கு ஆரம்பம் ஆகும் போது இவரிடம் இயக்குனர் ஒருவர் தவறாக பேசியிருக்கிறார்.

இயக்குனர் பேசிய டீலிங்
அதில் நான் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் எனக்கு ஒரு இயக்குனரை தெரியும். அவர் என்கிட்ட நீ என் கூட ஆறு மாதம் போன்ல பேசிக்கிட்டு மட்டும் இருந்தால் போதும். ஆறு மாதத்திற்கு பிறகு என்னுடைய கேரியர் வேற லெவலில் மாத்திடுவேன் என்று சொன்னாரு. நான் அப்படி கேட்டபோது அமைதி ஆகிட்டேன். இதை நாம இப்ப பெருசா எடுத்தால் இப்போதான் நம்முடைய கேரியர் ஆரம்பித்து இருக்கிறோம். அதனால நம்முடைய கேரியரை முடித்துவிடுவார்கள் என்று பயந்ததால அமைதியாக இருந்துட்டேன் என்று கூறியிருக்கிறார்.

எதிர்த்து பேசும் முல்லை
அது மட்டுமல்லாமல் பிறகு அவர்கிட்ட இருந்தும் விலகிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அந்த இயக்குனர் யார் என்ற விபரத்தை பற்றி கூறாமல் இருந்தாலும் இயக்குனர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி லாவண்யா பேசிய கருத்துக்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பொம்மை போல லாவண்யா இருக்கிறார் என்றும், இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது நடந்து வரும் சண்டையில் தான் இவருக்கு ஐஸ்வர்யாவை எதிர்த்து பேசும் வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications