குடும்பமே பிரிஞ்சி இருக்கும் நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் "தனம்” செய்த செயல்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதா சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சுஜிதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்ன பங்க்ஷன் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார்.
சுஜிதாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதையோடு கம்பேர் பண்ணி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வீட்டில் பங்க்ஷன்
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் அண்ணி தனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு மாலையோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்ன பங்க்ஷன் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று கருத்து பதிவு வெளியிட, அது புது வீட்டின் கிரகப்பிரவேசம் என்பது ரசிகர்கள் கண்டுபிடித்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பிகள் எல்லாம் பிரிந்து போய் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எப்போது புது வீடு கட்டி எல்லோரும் செட்டில் ஆவார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது நீங்கள் எப்படியோ போங்க நாங்க புது வீட்டிற்கு வந்து விட்டோம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கும் தனம் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அழகு மாறலையே
சுஜிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நடிப்பு என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே இவர் நடிப்பதற்கு வந்துவிட்டார். 1983ஆம் ஆண்டு இவர் பிறந்து அதே வருடத்தில் அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி என்ற மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார்.

பாக்கியராஜின் பையன்
அதில் வாஷி மட்டும் மலையாள திரைப்படம். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தெரியவில்லை என்றாலும் இவர்தான் அந்த படத்தில் நடித்தார் என்று பலருக்கும் தெரியாது. இவருடைய அழகான முட்டைக்கண்ணும் பலருடைய பார்வைகளை ஈர்த்து விட்டது. அதற்கடுத்த வருடங்களும் தொடர்ந்து இவர் பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதிலும் ரோஜா, தேவர்மகன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய சிறுவயது நடிப்பின் மைல்கல் தான்.

அப்பவே அப்படி
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சீரியலிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக மட்டும் அல்லாமல் குமரி பெண்ணாகவும் சைடு ரோல்களில் பல திரைப்படங்களில் நடித்து விட்டார். ஆனால் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் கவர்ச்சி மட்டும் இல்லவே இல்லையாம். குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். முதல் முதலில் தமிழில் தூர்தர்ஷன் டிவியில் ஒரு பெண்ணின் கதை எனும் சீரியல் மூலமாக சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

திருவிளையாடல் பார்வதி
அதற்குப் பிறகு உறவுகள் என்னும் சீரியலில் விஜய் டிவியிலும்,சன் டிவியில் திருவிளையாடல் சீரியலில் பார்வதியாகவும் நடித்திருக்கிறார். சாமி வேடங்கள் எல்லாம் ஒரு சிலருக்குத் தான் செட் ஆகும் அதில் இவரும் குறிப்பிடத்தக்கவர். அப்படியே அந்த பார்வதியையே நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது என்று பல ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கு பிறகு பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனலட்சுமி என்ற தனம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications