பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் அடுத்து நடப்பது இதுதான்.. ரகசியத்தை உடைத்த கதிர்..இப்படி ஒரு முடிவா?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற ரகசியத்தை அந்த சீரியலின் கதிரவன் கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது ஜீவா பண விஷயத்தில் மனஸ்தாபத்தில் இருந்து வருகிறார்.
அடுத்தடுத்து கண்ணன் மற்றும் கதிர் செய்யும் நடவடிக்கையால் ஜீவாவின் மனம் மாறிக் கொண்டிருக்கிற நிலையில் இனி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்பத்திற்குள் பிரச்சனை வர இருக்கிறது.
அந்த சீரயலில் கதிராக நடிக்கும் குமரன் அந்த சீரியலை பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

கூட்டுக் குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு வருடம் ஆக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. ஆரம்பத்தில் இருந்து கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மூர்த்தி மற்றும் தனம் குடும்ப தலைவர்கள் ஆக இருந்து கொண்டு தன்னுடைய தம்பிகளை பாதுகாத்து வளர்த்து வந்தனர். இதன் நிலையில் தற்போது அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் கதிர் மற்றும் கண்ணன் இருவரும் தனித்தனியாக வேலையை தொடங்கி விட்டனர். ஜீவா மட்டும் தான் மூர்த்தியோடு சேர்ந்து ஒன்றாக கடையில் வேலை செய்து வருகிறார்.

பணம் முக்கியம் தான்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒரு சில வாரங்களாகவே அடுத்தடுத்து மருமகள்கள் கர்ப்பமாக ஆகி கொண்டிருந்தனர். இதனால் ரசிகர்கள் பலர் திட்டிக் கொண்டிருந்தனர். இந்த கதையில் வேற திருப்பங்களே இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டிருந்த நிலையில் தற்போது புது திருப்பம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. கதிரும் ஜீவாவும் தனித்தனியாக வேலை பார்த்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் தனத்திடம் பாதி தொகையை கொடுத்துவிட்டு தங்களுக்கு என்று சேமித்து வைத்து வருகின்றனர். ஆனால் ஜீவாவிடம் எந்த ஒரு பணமும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் தனம் மற்றும் மூர்த்தி இடம் கேட்டு வாங்கும் நிலையில் இருக்கிறார்.

குமரன் சொன்ன தகவல்
இந்த நிலையில் தற்போது ஜீவா தன்னுடைய நிலையையும் தன் மனைவி மீனாவின் நிலையையும் பார்த்து சில நாட்களாகவே ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய மாமனார் வீட்டில் குடித்துவிட்டு தன்னுடைய மனதில் இருக்கும் அனைத்து கவலைகளையும் கொட்டி தீர்த்து இருக்கிறார். இனி அடுத்து இந்த குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இந்த சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் சில தகவல்களை கூறியிருக்கிறார். இன்னும் இந்த சீரியலில் வரவர இதைவிட பிரச்சனை வேகமாக நடக்க இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இனி தான் பிரச்சனையே இருக்கிறது
பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிவதற்கு இப்போது ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் நாட்கள் போகப்போக இதைவிட பெரிய பிரச்சனைகள் வந்து அங்கே பல ட்விஸ்ட் ஏற்பட்டு பிறகு மீண்டும் சேர்வதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. இதுவரைக்கும் எங்களுக்கு எடுத்த எபிசோடுகள் வரைக்கும் பிரச்சனை வேகமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கடைசி முடிவு என்ன மாதிரி வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்று குமரன் கூறியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications