இப்படியா தப்பான உதாரணத்தை காட்டுவீங்க?நம்புற மாதிரியா இருக்கு?பாண்டியன் ஸ்டோரை கலாய்க்கும் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கர்ப்பமாக இருந்தால் வேலை செய்ய வேண்டாம் என்கிற ஒரு தப்பான ஒரு உதாரணத்தை காட்டி வருவதாக ரசிகர்கள் அனைத்து வருகிறார்கள்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏற்கனவே மூன்று மருமகள்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் மூன்று மருமகள்களையும் மீனா ஒரே ஆளாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.
கர்ப்பமாக இருந்தால் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அண்ணன் தம்பி கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தொடர்ந்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குடும்ப கதையை மையமாகக் கொண்டு இருந்து வருவதால் அதிகமான குடும்ப பெண்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில் இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு ஒரு வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை பற்றியே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் கதை வேறு விதமாக பயணிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடரும் வாந்தி
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் ஏற்பட்டு வந்தாலும் அதில் எல்லாம் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்து அந்த பிரச்சனைகளை தாண்டி சாதித்து வந்து கொண்டிருந்த காலம் இப்போது போய், தொடர்ந்து கர்ப்பமாகும் சீன்கள் மட்டும் தான் இருந்து வருகிறது. வீட்டில் மூன்று மருமகள்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த சீன்களை பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. அதுவும் வீட்டிற்கு வரும் ஆண்கள் சாப்பிட உட்காரும் நேரத்தில் தான் இவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கொட்டி வருகிறார்கள்.

தப்பான உதாரணம்
இந்த நிலையில் அடுத்தடுத்து கர்ப்பமாக இருக்கும் மூன்று மருமகள்களும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். அதுவும் ஏற்கனவே தனத்திற்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அந்த குழந்தையை கூட கவனித்துக் கொள்ளாமல் அதையும் மீனாதான் கவனித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு தப்பான உதாரணமாக இருக்கிறது. வேலைக்கு போகும் பெண்கள் குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்புவரைக்கும் வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் வீட்டில் எப்போதும் ஃபுல் மேக்கப்பில் உட்கார்ந்து கொண்டு மீனாவை ஆப்பிள் கட் பண்ணி தரச் சொல்லியும், தண்ணீர் தரச் சொல்லியும் வேலை வாங்கி கொண்டிருக்கின்றதை பலர் பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த மாதிரி சீன்கள் வேண்டவே வேண்டாம் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விடை தெரியாத கேள்வி
இந்த நிலையில் மீனா மற்றும் ஜீவாவிற்கு இடையே இப்போது ரொமான்ஸ் அதிகரித்திருப்பதை பார்த்து அடுத்து மீனாவும் கர்ப்பமாக போகிறாரா? என்று ரசிகர்கள் பயப்படத் தொடங்கி விட்டார்கள். அனைவரும் ஒரே ஹாலில் படுத்து தூங்கும் போது இவர்களால் மட்டும் எப்படி தான் கர்ப்பமாக முடிந்ததோ என்று ஏற்கனவே விடை தெரியாத கேள்வி ரசிகர்களின் மனதில் எழும்பி இருக்கும் நிலையில், அடுத்தடுத்து கர்ப்பமாக இருக்கிறோம் என்று இவர்கள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்து இப்போது ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications