பாண்டியன் ஸ்டோரில் நடப்பது இதுதான்.. வீடியோ வெளியிட்டு கூறிய ஹேமா.. இத்தனை விஷயங்கள் இருக்காம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை ஹேமா மீனா கேரக்டரில் நடித்து வருகிறார்.
தன்னுடைய youtube பக்கத்தில் அவர் தன்னுடைய சீரியல் சூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிகளை பகிர்ந்து இருக்கிறார்.
காலையிலிருந்து மாலை வரைக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மீனா பகிர்ந்ததை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிரியும் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது அடுத்தடுத்து அண்ணன் தம்பிகள் பிரிந்து கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த கூட்டு குடும்பத்தில் தற்போது ஜீவா மற்றும் மீனா குடும்பத்தை விட்டு பிரிய அதை தொடர்ந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் பிரிய இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனாலே ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சின்னத்திரையில் அறிமுகம்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். இவரை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் ஜீவா மீனாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். மீனா செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் கூட அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் மீனாவாக நடிக்கும் ஹேமா முதல் முதலில் அறிமுகமானது ஆபீஸ் சீரியல் மூலமாகத் தான் சின்ன திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நான்கு நாட்கள் லீவு
ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனியாக youtube சேனல் ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் அடிக்கடி தான் வெளியே செல்லும் இடங்களையும் தன்னுடைய சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்து கொண்ட வீடியோவில் மார்ச் மாதத்திற்க்கான ஷெட்யூல் ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஒரு சில உடல் நல காரணங்களால் நான் முதல் 4 நாள் சூட் போகல. எல்லா சீன்லையும் நான் இருக்கிறதனால எனக்கு லீவு கிடைக்கிறது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அதுவும் இப்ப ரொம்ப வேகமாக போறதால கண்டிப்பா நமக்கு லீவு கிடைக்காது என்று கூறியிருக்கிறார்.

லொகேஷன் வந்தாச்சு
அதைத்தொடர்ந்து இன்னையில இருந்து எனக்கு நிறைய வேலை இருக்கும். இதுக்கு நடுவுல நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் என்னென்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும்ன்னு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்க போறேன் என்று அந்த வீடியோவில் கூறி, லொகேஷன் வந்து இருக்கிறார். இப்போது தான் யூனிட் வண்டியில் இருந்து இதையெல்லாம் இறங்கிட்டு இருக்காங்க. இதுல இருக்கிறது எல்லாமே நம்ம சூட்டிங் யூஸ் பண்ற திங்ஸ். இது எல்லாமே அவ்வளவு கனமா இருக்கும். அதையெல்லாம் தூக்கிக்கிட்டு போவாங்க என்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை காட்டுகிறார்.

அவ்ளோ நல்ல பிள்ளை
இது அல்லாமல் நாங்க உழைக்கிறது எல்லாம் டிவியில தெரியும். ஆனா எங்களுக்கு பின்னாடி நிறைய பேரு உழைச்சிட்டு இருக்காங்க. அது யாருக்கும் தெரியாது. இதுதான் நமக்கான கேரவன். ஒரு சில கேரவன்ட்ல மூணு பார்ட் இருக்கும் இந்த கேரவன்ல ரெண்டு பார்ட் இருக்கிறது என்றும் இன்னைக்கு நடுவுல இட்லி, தோசை, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, உப்புமா இருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆரம்பமான புதுசுல காலையில 7.30 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லுவாங்க. நான் கரெக்டா வந்துடுவேன் ஆனா இங்க யாருமே இருக்க மாட்டாங்க.

போட்டி அதிகமாம்
என்னுடைய குழந்தை பிறந்த நேரத்தில் சரியா தூக்கம் இல்லை. அதனால லொகேஷனுக்கு வர்ற கொஞ்சம் லேட் ஆகும். ஆனா இப்ப எல்லாம் சீக்கிரமா வந்துடுவேன். அப்பதான் பொறுமையா ரெடி ஆக முடியும். சீரியல்ல நிறைய லேடிஸ் ஆர்டிஸ்ட் இருப்பாங்க. ஆனா ஒரே ஒரு ஹேர் டிரெஸ்ஸர் தான் இருப்பாங்க. நிறைய போட்டி போட வேண்டியிருக்கும். அதனால நம்ம சீக்கிரம் வந்துட்டா சீக்கிரம் ரெடி ஆயிடலாம் என்று அந்த வீடியோவில் ஹேமா பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ அதிகமான வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications