வீடியோ போடுவதை நிறுத்த சொல்லும் மூர்த்தி..ஐஸ்வர்யா கொடுத்த பதிலடி..கண்ணன் எடுக்கும் முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா youtube சேனல் நடத்தி வருவதை குறித்து மூர்த்தி திட்டுகிறார்.
இனி வீட்டில் நடப்பதை வீடியோவாக வெளியிடக்கூடாது என்று கண்ணனிடம் சொல்லும்படி கதிருக்கு மூர்த்தி சொல்கிறார்.
கதிர் வந்து சொல்லும் வார்த்தைக்கு ஐஸ்வர்யா முடியாது என்று பதில் கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தில் கண்ணன் ஐஸ்வர்யா மற்றும் மூர்த்தி இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்க இருக்கிறது. ஏற்கனவே கண்ணனுக்கு நம்முடைய அண்ணன் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வந்து இருக்கிறது.
அடுத்தடுத்து கடனில் ஐஸ்வர்யாவால் சிக்கிக் கொண்டிருக்கும் கண்ணன் இனி என்ன செய்ய என்று முடிவு எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதில் மேலும் மேலும் ஐஸ்வர்யா கண்ணனை பணம் இல்லாததால் அவமானப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து கண்ணனுக்கு வேலை செய்ய சொல்லிக்கொண்டே இருக்க கண்ணன் கடுப்பாகிறார்.

யூடியூப் சேனல் தொடங்கி தங்களுடைய வீட்டில் நடப்பதை வீடியோவாக வெளியிட்டு வருவதை குறித்து இன்றைய எபிசோடில் ஏற்கனவே மூர்த்தி திட்டி இருந்தார். இந்த நிலையில் இனி வரும் எபிசோடில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் இனி வீடியோ வெளியிடக் கூடாது என்று சொல்ல சொல்லி கதிரிடம் மூர்த்தி சொல்கிறார்.
இந்த நிலையில் இனி வரும் எபிசோடில் கதிர் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனிடம் சென்று இனி வீட்டில் நடப்பதை எல்லாம் இப்படி வீடியோவாக வெளியிடாதீங்க என்று சொல்ல இருக்கிறாராம். அதற்கு ஐஸ்வர்யா அதுவெல்லாம் முடியாது. நான் எங்களுக்கு இனி youtube மூலமாக பணம் வரும் நேரம் ஆகிவிட்டது. அதனால் நிறுத்த முடியாது என்று சொல்ல இருக்கிறதாம். உங்க வீட்டில் இருக்கும்போது தான் இப்படி எங்கள அதிகாரம் பண்ணுனீங்க. இப்ப நாங்க தனியா இருக்கும்போதும் எங்ககிட்ட வந்து நீங்க இப்படி அதிகாரம் பண்ணுறீங்களே என்று கதிரை அவமானம் படுத்த இருக்கிறாராம்.

ஐஸ்வர்யா கதிரை அவமானப்படுத்தியதை கேட்ட கண்ணன் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பான தருணம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. ஒரு பக்கம் ஜீவா மற்றும் அவருடைய மாமியாருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஐஸ்வர்யாவும் புது பிரச்சனை கிளப்ப இருப்பதால் இந்த வாரம் பரபரப்பாக இருக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications