பிரிந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது... ஐஸ்வர்யாவா இது இப்படி மாறிவிட்டாரே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மார்ச் 23ஆம் தேதி காண ப்ரமோ யாரும் எதிர்பார்க்காத அளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது.
இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் விஜே தீபிகா தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இத்தனை பிரச்சனைக்கும் காரணமாக இருந்த ஐஸ்வர்யா எதுவும் கவலை இல்லாமல் வெளியிட்ட வீடியோவிற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

குடும்பம் உடைஞ்சிடுச்சி
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோரின் அண்ணன் தம்பி கதைகளுக்குள் பெரும் பஞ்சாயத்தும், கருத்து வேறுபாடும் இருக்கிறது. இத்தனை நாட்களாக கூட்டு குடும்பம் தான் எங்களுடைய சொத்து, எங்கள் அண்ணன் தம்பிகளை யாராலும் பிரிக்க முடியாது என்று மார்தட்டி கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இன்று ஒரே திருமணத்தில் ஒரு மொய் வைக்காத காரணத்தால் சில்லி சில்லியாக நொறுங்கி இருக்கிறது. ஆளுக்கு ஒரு பக்கமாக குடும்பம் பிரச்சனை இழுத்துக் கொண்டு பிரிய இருக்கின்றனர்.

கொளுத்தி போடும் ஐஸ்வர்யா
ஏற்கனவே ஜீவா வீட்டை விட்டு கிளம்பி மீனாவோடு அவருடைய அப்பா வீட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா கண்ணனை கேள்வி கேட்பதால் நானும் வீட்டை விட்டு கிளம்ப போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா வெளியே செல்லும்போது முல்லை மட்டும் சரியா? முல்லையும் கதிரும் தனியாக கம்மல் வாங்கியது, அவர்கள் மொய் எழுதியதை மட்டும் கேள்வி கேட்கவில்லையே என்று கொளுத்தி போட்டு போக இருக்கிறார்.

முதலிடம் வந்தது
மூர்த்தி இனி எந்த தம்பிகளும் எனக்கு தேவையில்லை நானும் தனியாக போகப்போகிறேன் என்று சொல்ல இருக்கிறார். ஏற்கனவே இப்போது மூர்த்தி, கண்ணன் எல்லாம் இருப்பது இப்போது கதிர் உடைய வீட்டில் தான். இனி ஆளாளுக்கு தனித்தனியாக குடும்பத்தினர் எப்படி வாழ போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான ப்ரோமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் டிஆர்பி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இப்படி மாறிட்டாங்களே
இந்த நிலையில் இந்த குடும்பம் பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தற்போது லேட்டஸ்ட் ஆக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் விஜே தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் போல இவர் வீடியோ வெளியிட்டு இருந்தாலும், இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. இவர் அந்த வீடியோவில் எப்படி இருந்த நான் எப்படி மாறிவிட்டேன் என்று சொல்கிற மாதிரி டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ ஒன்று போட்டு இருக்கிறார். மார்டன் உடையில் இருக்கும் விஜே தீபிகா டக்கென்று ட்ரடிஷனலாக பாவாடை தாவணியில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபடியும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திலிருந்து வெளியே போயிட்டீங்களே கண்ணன் ஐஸ்வர்யா என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். இனி மீண்டும் இட்லி கடை தொடங்குகிறார்களா? என்று இன்னும் சில நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications