பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கேரக்டர்...கெட்டப்பை பார்க்கும்போது...அப்படி ஏதாவது இருக்குமோ??
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது முகமாக நடிகை ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார்.
அவருடைய லேட்டஸ்ட் கெட்டப் பார்த்து ரசிகர்கள் முல்லை கேரக்டரில் நடிக்கிறாரா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

குடும்ப கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலின் கதை பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்ததாக இருந்துவருகிறது. குடும்பத் தலைவியாக சுஜிதா, தனம் கேரக்டரில் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். அவருக்கு பிறகு இந்த சீரியலில் அதிகமான ரசிகர்கள் விரும்புவது கதிர் முல்லை கேரக்டர்தான்.

ரசிகர்களை கவர்ந்த முல்லை கேரக்டர்
ஆரம்பத்தில் இருந்து முல்லை கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் முல்லையாக நடிகை விஜே சித்ரா இந்த கேரக்டருக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கி விட்டார். அதற்குப் பிறகு அவருடைய மறைவுக்குப் பிறகு அவரைத் தொடர்ந்து காவியா அறிவுமணி ஒரு வருடங்களுக்கு மேலாக இப்போது அந்த சீரியலில் நடித்து வருகிறார். முதலில் இவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் நாள்கள் போகப்போக இவரை ஏற்றுக்கொண்டனர்.

சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தி
தற்போது சமூக வலைத்தளத்தில் காவியா அறிவுமணி இந்த சீரியலை விட்டு விலக போகிறார் என்று செய்திகள் வைரலாக பரவி வருகிறது. இந்த வருடத்தின் முதல் நாளில் இவர் ஒளிமயமான மாற்றம் ஏற்படும் என்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போஸ்ட் காரணமாக ரசிகர்களின் மத்தியில் இந்த ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அதற்கு பிறகு அவர் அப்படி எல்லாம் இந்த சீரியலை விட்டு போற ஐடியா இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

கெட்டப் வேற மாதிரி இருக்கு
தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு நடிகை பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்குள் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ரசிகர்கள் அப்போ காவியா அறிவுமணி விலகப் போகிறாரா??அவருக்கு பதிலாக தான் இவர் வருகிறாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ரசிகர்களுக்கு சந்தேகம் வரும் விதமாகத்தான் அந்த நடிகையின் மேக்கப் இருந்துள்ளது. அப்படியே முல்லை கேரக்டருக்கு தகுந்த மாதிரி ஹேர் ஸ்டைல், உடை, நகைகள் என அனைத்தும் பக்காவாக மாற்றியுள்ளார்.

கேள்விக்கு பதில் வரவில்லையே
அந்த புதுமுக நடிகையின் பெயர் அபிநயா என்பதாம். அவர் மக்கள் தொலைக்காட்சியில நியூஸ் ரீடர் ஆக இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஸ்கூல் சீனில் பேட்டி எடுக்கும் செய்தியாளராக அறிமுகம் ஆகியிருந்தார். அப்போது பாக்கியலட்சுமி சீரியலில் அவருடன் நடித்த மீனா சோலைமுத்து மற்றும் எழியன் என பலருடன் போட்டோஸ்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் முல்லையின் தோழியாக நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது .ஆனால் எதற்காக முல்லையின் கெட்டப்பில் இவர் வந்திருக்கிறார் என்பதுதான் ரசிகர்கள் எழுப்பும் கேள்வியாக இருந்துவருகிறது. தன்னிடம் இன்ஸ்டாகிராமில் நீங்கள் தான் அடுத்த முல்லையா?? என்று கேள்வி கேட்கும் ரசிகர்களுக்கு சிரிப்பு ஒன்றை மட்டுமே இவர் பதிலாக அளித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications