குடும்பமே பிரிஞ்சு போச்சு! ஜீவா மனைவியோடு போட்ட ஆட்டம்.. குவியும் கருத்து.. ட்ரெண்டிங் இவங்க தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிகர் வெங்கட் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய வெங்கட் தற்போது தன்னுடைய மனைவியோடு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட நிலையில் அது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் ஜீவா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோரில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டனர். அதுவும் தற்போது சில வாரங்களாக ஜீவாவிற்கு அதிகமான பாசிட்டிவ் கருத்துக்கள் குவிந்து வருகிறது. இந்த சீரியலில் ஜீவாவிற்கு என்று அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் சமூக வலைத்தளத்தில் ஓபன் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜீவா தன்னுடைய மனைவியோடு டான்ஸ் ஆடி வீடியோ பகிர்ந்து இருக்கிறார். அது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

ஆரம்ப காலம்
நடிகர் வெங்கட் பழனியில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். இவர் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்து சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். முதல் முதலாக கனா காணும் காலங்கள் என்கிற சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பின்பு ஆண்பாவம், மாயா, புகுந்த வீடு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்னும் சீரியல் தான் இந்த சீரியலில் இவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்த வாய்ப்பு
அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய அவர் நினைக்கத் தெரிந்த மனமே என்கிற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஜோடி நம்பர் 1 சீச் 10இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு இவருக்கு 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா என்கிற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் தொடர்ந்து ஜீவாவாக இவரை நடித்து வருகிறார்.

திரைப்படங்களிலும் நடிப்பு
சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலிலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அந்த சீரியலில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மட்டும் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது கூட அவருடைய பெயர் வெங்கட் என்கிற பெயரையே மறந்து ஜீவா என்று அழைத்து வருகின்றனர். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

செம டான்ஸ் தான்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதைப்படி இவர் தன்னுடைய அண்ணன் தம்பிகளோடு சண்டையிட்டு பிரிந்து இருக்கிறார். ஜீவா கேரக்டரோடு பொருந்தி போன வெங்கட்க்கு நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு அஜந்தா என்கிற மனைவியும் தேஜஸ்வினி என்கிற மகளும் இருக்கின்றனர். தேஜஸ்வினிக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. நண்பர்கள் மற்றும் நெருங்கிய நட்புகளை மட்டுமே பிறந்த நாளை கூப்பிட்டு சிறப்பாக கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய மனைவியோடு மால டும்டும் பாடலுக்கு இவர் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் குடும்பமே இரண்டாக பிரிந்து கிடக்கு,நீங்க ஜாலியா ஆடிட்டு இருக்கீங்களா? என கமெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications