நான் பக்கா “தமிழச்சி”, சொந்த ஊரு இதுதான்! பெயரில் “துராடி”க்கு அர்த்தம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில் நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா துராடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய சொந்த ஊர் பற்றி பேசி இருக்கிறார். தான் வெளி மாநிலத்தவர் என்று பலர் கூறிவரும் நிலையில் அது உண்மை இல்லை நான் பக்கா தமிழச்சி தான் என்று கூறி இருக்கிறார். அதோடு தன்னுடைய பெயருக்கு பின்னால் வரும் துராடி என்ற பெயரின் அர்த்தம் குறித்தும் சரண்யா பேசியிருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றிய சரண்யா துராடி பிறகு விஜய் டிவியில் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியல் மூலமாகத்தான் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. முதல் சீரியல் ஒரு சில வருடங்களாக ஒளிபரப்பானது. பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சரண்யாவையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

நடிகை சரண்யா துராடி நடித்த சீரியல்
அதற்கு பிறகு அடுத்ததாக விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலும், சன் டிவியில் ரன் சீரியலிலும் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியல்களும் அடுத்தடுத்து முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் சீரியலை விட்டு விலகி இருந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலாக அறிமுகமானார். இந்த சீரியலில் இப்போது இவருடைய கதாபாத்திரத்தை பலரும் பாவம் என்று ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
தமிழ் பொண்ணு
ஆரம்பத்தில் இவரை திட்டி தீர்த்தவர்கள் கூட இப்போது இவருடைய கேரக்டரை பார்த்து அனுதாபம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தான் சமீபத்தில் சரண்யா துராடி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை பார்த்ததும் பலரும் இவர் பிற மாநிலத்தவர் என்று கூறி வருவதாகவும், ஆனால் தான் பக்கா தமிழச்சி என்று சரண்யா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், "நான் பக்கா தமிழச்சி தாங்க, என்னுடைய அப்பாவின் சொந்த ஊரு பாண்டிச்சேரி. என்னுடைய அம்மா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். நான் பாண்டிச்சேரியிலும் சென்னையிலும் வளர்ந்தேன்.
தெய்வத்தின் பெயர்
என்னுடைய பெயருக்கு பின்னாடி இருக்கும் "துராடி" என்ற பெயர் ஊரில் வணங்கப்படும் சிறு தெய்வத்தின் பெயர். பொதுவாக இப்போது உள்ள சூழ்நிலையில் பலர் தங்களுடைய குலதெய்வங்களை மறந்து ஒரு ட்ரெண்டுக்காகவும், பெயருக்காகவும் தெய்வங்களின் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய குலதெய்வத்தின் பெயரை நம்மோடு அடையாளமாக வைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் தான் சரண்யா என்ற என்னுடைய பெயருக்கு பின்னாடி என்னுடைய துராடி என்று தெய்வத்தின் பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

துராடி பெயருக்கு விளக்கம்
துராடி என்பது பாண்டிச்சேரியில் குலதெய்வம். அய்யனார் போல துராடி தெய்வமும் பலராலும் வணங்கப்பட்டு வருகிறது. "தமிழை பேசுவதற்கு தமிழச்சியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று இல்லை". ஆனால் நான் தமிழச்சி தான். செய்தி வாசிப்பாளராக நான் சின்ன வயதிலேயே வந்துவிட்டேன். அப்போது தமிழைப் பற்றி நான் படிக்க தொடங்கிய போது என்னுடைய குலதெய்வத்தின் பெயரை என்னுடைய பெயரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசை வந்தது. அப்போதுதான் நான் சரண்யா துராடி என்ற பெயரை மாற்றினேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications