பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அரசி மீது சந்தேகப்படும் பாண்டியன்.. கோமதி உடைத்த ரகசியம்! சுகன்யாவால் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சீரியலில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரைக்கும் ஆன எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரசியின் செயல்பாடுகள் குறித்து பாண்டியனுக்கு சந்தேகம் வருகிறது. அப்போது கோமதி அரசி பற்றி சில விஷயங்களை சொல்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் உடனே தொடங்கப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் சீரியல் தொடங்கிய முதல் ஒரு சில வாரங்களிலேயே சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறத் தொடங்கிவிட்டது.

பழனியின் கல்யாணம்
அதிலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே கோமதியின் தம்பி பழனியின் கல்யாணம் பெரிய போராட்டத்திற்கு மத்தியில்தான் நடைபெற்றது. பழனி கல்யாணம் செய்திருக்கும் சுகன்யா யார் என்ற உண்மைகள் இதுவரைக்கும் தெரியவில்லை.
பழிவாங்கும் சுகன்யா
ஆனால் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்குவதற்காகவோ சுகன்யா வந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. பாண்டியனுக்கு எதிராக இருக்கும் கோமதியின் அண்ணன்களிடம் நான் பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்கு உங்களுக்கு உதவுகிறேன் என்று நேரடியாகவே பேசி இருக்கிறார். அவர்களும் அதற்கு சரி என்று சொல்லி இருக்கிறார்கள்.

கோமதி அண்ணன் பிளான்
ஆனால் சுகன்யாவை பழனிக்கு திடீர் திருமணம் செய்து வைத்ததும் கோமதியின் அண்ணன்கள் தான். இதனால் இவர்கள் பிளான் போட்டு சுகன்யாவை இங்த குடும்பத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது அதுபோல கோமதியின் அண்ணன் மகன் அரசியை காதலிப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை தெரியாத அரசியும் இப்போது குமாரவேலை காதலிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த வார ப்ரோமோ
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குடும்பத்தினர் எல்லோரும் சுற்றி நின்று பேசிக் கொண்டிருக்கும் போது அதை எதுவும் கவனிக்காமல் படித்துக் கொண்டிருப்பது போல அரசி உட்கார்ந்து இருக்கிறார்.

பாண்டியன் சந்தேகம்
அதைப் பார்த்து பாண்டியன் என்னுடைய மகளை பார்த்தியா இத்தனை பேர் இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கோம் ஆனால் எதையும் காதில் வாங்காம அரசி படிச்சிட்டு இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு கோமதி இல்லங்க இவ படிச்சிட்டு இல்ல, இவா எப்போதும் போனை பார்த்து கொண்டு இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு அரசி இல்லப்பா நான் படிப்பு சம்பந்தமாக தான் பேசுவேன் என்று சொல்கிறார்.
சமாளிக்கும் அரசி
அதற்கு சுகன்யா அத்தாச்சி அரசியை சந்தேகப்படாதீங்க என்று அரசிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். பிறகு அரசி தனியாக ரூமில் உட்கார்ந்து இருக்கும் போது அங்கு வரும் சுகன்யா அரசியிடம் பேசுகிறார். அப்போது அரசி தான் நிஜமாகவே படிப்பு சம்பந்தமாக பேசினேன் அம்மா தான் நம்ப மாட்டேங்கிறாங்க என்று சொல்கிறார்.

சுகன்யாவின் சதித்திட்டம்
அதற்கு சுகன்யா என்கிட்டயே நடிக்கிற பாத்தியா... உன் மொரப்பையன் கிட்ட தானே பேசுற. அதெல்லாம் தாராளமா பேசலாம். குமார் ரொம்ப நல்லவன் அரசி. அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். உன்ன கல்யாணம் பண்ணிக்கனம்னு ஆசைப்படுறான் என்று அரசியை நம்ப வைக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைகிறது.
போகிற போக்கை பார்த்தா இனி குமார் அரசியின் கல்யாணத்தை சுகன்யா தான் நடத்தி வைப்பார் என்று தெரிகிறது. அதற்குப் பிறகுதான் அரசிக்கு குமாரின் பிளான் தெரியவரும். அதுபோல சுகன்யா பற்றி பிளாஷ்பேக் தெரியவரும். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications