பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : 10 லட்சம் விஷயத்தை சொன்ன மீனா அப்பா.. வசமாக சிக்கிய செந்தில்.. பாண்டியன் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செந்தில் 10 லட்சம் லஞ்சம் கொடுத்து தான் வேலைக்கு சேர்ந்தார் என்ற உண்மை மீனாவின் அப்பா மூலமாக பாண்டியனுக்கு தெரிய வருகிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் தான் இனி நடக்கப்போகிறது.. அதாவது செந்தில் 10 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த பணம் பாண்டியன் பேங்கில் போட சொன்ன பணம்தான். ஆனால் அது குடும்பத்திற்கு தெரியாமல் தன்னுடைய மாமனாரிடம் கொண்டு சென்று கொடுத்திருந்தார். அப்போது கூட மீனாவின் அப்பா செந்திலிடம் இந்த பணம் விஷயம் உங்க அப்பாவுக்கு தெரியுமா? என்று கேட்க, அவர்தான் எனக்கு பணம் தந்தார் என்று செந்தில் ஏமாற்றி இருந்தார்.

Pandian Stores Vijay TV

அதுபோல பாண்டியனுக்கு 10 லட்சம் பணம் தேவை வந்தபோது இந்த பணத்தை எடுத்துட்டு வர பாண்டியன் சொல்லி இருந்தார். ஆனால் செந்தில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக மீனா தன்னுடைய ஆபீஸில் லோன் போட்டு பணத்தை எடுத்து வந்து பாண்டியனிடம் கொடுத்து அப்போதைக்கு செந்திலை காப்பாற்றி இருந்தார். இந்த நிலையில் இப்போது செந்திலுக்கு வேலையும் கிடைத்துவிட்டது, இதனால் இந்த சந்தோஷமான விஷயத்தை மீனாவின் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று பாண்டியன் முடிவெடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீனாவின் அப்பா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது பாண்டியன் பெருமையாக தன்னுடைய மகனுக்கு வேலை கிடைத்த கிடைத்த விஷயத்தை சொல்லி அதற்கு நன்றியும் சொல்கிறார். அதற்கு மீனாவின் அப்பா இந்த வேலை கிடைத்ததற்கு காரணம் நீங்கதான். நீங்க கொடுத்த பத்து லட்சத்தை வைத்து தானே இந்த வேலை வாங்கி இருந்தது. நீங்க பணம் கொடுக்கலைன்னா நானே கொடுத்திருப்பேன் என்று சொன்னதும் பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார்.

பணம் கொடுத்து வேலைக்கு வாங்கி இருக்கிறது என்ற உண்மையையும் இப்போது அவருக்கு தெரிகிறது. அதேபோல இந்த பணத்திற்கு என்ன செஞ்சீங்க என்று செந்திலிடம் கேட்க, அதற்கு மீனா நான் தான் ஆபீஸில் லோன் போட்டு பணம் கொடுத்தேன் என்று சொன்னதும் இவ்வளவுபெரிய முடிவு நீங்களே எடுத்த அப்புறம் நாங்க எதுக்கு என்று கோபப்படுகிறார். ஏற்கனவே அரசி திடீரென கல்யாணம் செய்ததால் பாண்டியன் கடும் கோபத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது செந்திலும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார் என்ற உண்மைகளும் தெரிய வந்திருக்கிறது. இனி பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. செந்தில் மற்றும் மீனாவை வீட்டை விட்டு துரத்த போகிறாரா? அல்லது பாண்டியன் வீட்டை விட்டுப் போகப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+