பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியனிடம் சுகன்யா சொன்ன விஷயம்! கோபத்தில் கோமதி.. பழனி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 21ஆம் தேதிக்கான எபிசோடில் குமரவேல் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று பாண்டியன் சொல்கிறார். அதற்கு குடும்பத்தினர் என்ன சொல்கின்றனர் என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் குமரவேலை என்ன செய்யலாம் என்று செந்தில் மற்றும் கதிர் கேட்கும்போது, கையை உடைக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால் பாண்டியன் கோபமடைகிறார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் காவல்துறையினரிடம் தான் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வெட்டுவேன், குத்துவேன் என்று நீங்கள் செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என பாண்டியன் திட்டுகிறார். மேலும், அரசியின் நிலை குறித்து பயத்துடன் கவலை கொள்கிறார்.

பாண்டியன் வருத்தம்
அப்போது அங்கு வரும் கோமதி, என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், "ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அரசிக்கு நடந்ததை நினைத்து வேதனையாக உள்ளது. அவள் நம்மிடம் பேச வேண்டிய விஷயத்தைக்கூட பேச முடியாமல் தாலிக் கட்டிக்கொண்டு அவனுடன் வாழப் போய் கஷ்டப்படுகிறாள். நம்ம திட்டியிருக்காவிட்டால் நம்மளிடம் சொல்லி இருப்பாள்" என்கிறார்.
கோமதி அட்வைஸ்
"நான் நல்ல அப்பாவாக இல்லையே என்று செந்தில் சொன்னது எனக்கு நினைவில் வருகிறது. அரசிக்கு நான் நல்ல அப்பாவாக இருந்திருந்தால், அவள் என்னிடம் சொல்லியிருப்பாள்" என்று பாண்டியன் வருத்தப்படுகிறார். குமார் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து அரசியை மிரட்டியிருக்கிறான். நான் நல்ல அப்பாவாக இருந்திருந்தால் அவள் சொல்லியிருப்பாள் என்று பாண்டியன் கூறுகிறார். அதற்கு கோமதி, அரசி என்னிடமே சொல்லவில்லை. நீங்க ஏன் உங்களையே குறை சொல்லிக்கிறீங்க எனக் கேட்கிறார். அரசியின் விஷயத்தில் பாண்டியன் மனம் உடைந்து பேசுகிறார்.
பழனி கொடுத்த அதிர்ச்சி
சுகன்யா கோபமாக அறையில் இருக்க, பழனி அமைதியாக வந்து படுக்கிறார். அதற்கு சுகன்யா, "உங்க அக்கா என்ன கேள்வி கேட்டாலும் நீங்க சும்மாவே இருக்கீங்க" என்று கேட்கிறார். அதற்கு பழனி, "அப்போ நான் நாலு கேள்வி கேட்டு அடிச்சிருக்கணுமா?" என்கிறார். "உங்களால எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை" என்கிறாள் சுகன்யா. "உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு பின்னாடியே அலைஞ்சியே, அப்போ தெரியலையா? கல்யாணம் ஆன பிறகு தெரிஞ்சதுக்கப்புறம் ஏன் இங்க இருக்க கிளம்பி போ" என்று பழனி சொல்கிறார்.
ஏமாற்றத்தில் சுகன்யா
இவ்வளவு பண்ணிட்டு தெனாவெட்டா பேசுறியா? வேற யாரா இருந்திருந்தாலும் இந்நேரம் கிளம்பி போயிருப்பா. நீ இங்க இருக்க காரணம்? மறுபடியும் ஏதாவது செய்யலாம்னுதான். அந்த நினைப்பு இருந்தா சும்மா இரு எனத் திட்டிவிட்டு படுக்கிறார். மறுநாள் காலை பாண்டியனும் கோமதியும் சுகன்யாவை அழைத்து பேசலாம் என்கிறார்கள். கோமதி, "குடும்பத்தை கெடுக்க நினைச்சவளை எதுக்கு உட்கார வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க" எனக் கேட்கிறார்.
பாண்டியன் அட்வைஸ்
பழனி அவரை சமாதானம் செய்ய, சுகன்யாவை உட்கார வைத்துப் பேசுகிறார் பாண்டியன். "நீ இப்படி பண்ணது சரியே இல்ல" என்கிறார் பாண்டியன். கோமதி குத்தலாக சுகன்யாவைப் பேச, "இவ திருந்த மாட்டான்னு நான் சொன்னேன்" என்கிறார் கோமதி. "நீ இங்க இருக்கிறது பிரச்சனை இல்ல. ஆனா இனிமேல் எதுவும் செய்யாமல் இருக்கணும்" என்று பாண்டியன் கூற, "நான் இனிமே அமைதியா இருப்பேன்" என்கிறாள் சுகன்யா. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications