பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : மீனா விட்ட வார்த்தை, சக்திவேல் அறைந்த அறை! பழனியின் முடிவால் அதிர்ந்த சகோதரர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது கடுமையான சண்டைகள் மற்றும் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசலால் விறுவிறுப்படைந்துள்ளது. பழனி புதியதாகக் கடை திறந்தது சகோதரர்கள் மத்தியில் பெரிய பிரச்சனைகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சமாதானம் செய்த சரவணன்
பழனி கடை திறந்ததில் நடந்த பிரச்சனைகளை அறிந்து செந்தில் கடும் அதிர்ச்சி அடைகிறான். ஆபீஸ் போயிருந்த செந்திலிடம், சரவணன் வீட்டில் நடந்த விஷயங்களைச் சொல்லிவிட, செந்தில் மாமா மீது கோபம் அடைகிறான். கல்யாணம் முடிந்ததும் கூட வீட்டுக்குக் கூப்பிட்ட சமயத்தில், இங்கேதான் இருப்பேன்னு சொன்ன மாமா இப்படித் துரோகம் செய்துவிட்டார் என்று கேட்கிறார்.
உடனே செந்தில், நேரில் போய்க் கேட்டுட்டு வருவோம் என்று சரவணனை அழைத்துக் கொண்டு போகிறார். பிரச்சனை வேண்டாம் என்று சரவணன் தடுத்தாலும், செந்தில் விடாமல், வா என்று கூப்பிடுகிறான். கடைசியில், பிரச்சனை வேண்டாம் என்று சொல்லி சமாதானப்படுத்திய சரவணன், கடை எங்கே இருக்கு என்று மட்டும் பார்த்து வரலாம் என்று அழைத்துக் கொண்டு போகிறான்.
பழனியின் முடிவு
பழனியின் கடைக்கு சென்ற செந்திலைப் பார்த்ததும் பழனி சந்தோஷமாக அழைக்கிறான். ஆனால், செந்தில் எடுத்ததும் பழனியின் சட்டையைப் பிடித்து, "இவ்வளவு பெரிய துரோகம் பண்றதுக்கு உனக்கு எப்படிய்யா மனசு வந்தது" என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறான்.
இதனால் அங்கிருக்கும் சக்திவேல், குமார் ஆகியோர் சண்டைக்கு வருகின்றனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வெடித்து, செந்திலை பளாரென அறைகிறார் சக்திவேல். உடனே சரவணன் கோபத்தில், "என் தம்பி மேல கை வைக்குறீயா" எனக் கொந்தளிக்க, குமார் மீண்டும் சண்டைக்கு வருகிறான். இதையெல்லாம் பார்த்து கோபமாக கத்திய பழனி, "என்னால எந்த பிரச்சனையும் இங்க வேண்டாம்" என்று சொல்லி நிறுத்துகிறார்.
அதுமட்டுமில்லாமல், "உன் அப்பா கடை இருக்கிற அதே ரோட்ல என் கடை வைச்சதுல எனக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லைடா! பிளான் பண்ணிதான் இதெல்லாம் பண்ணேன்" என்று கோபத்தில் விளாசுகிறான். இதனால் சரவணன், செந்தில் இருவரும் அதிர்ச்சியாகி அங்கிருந்து கிளம்பிப் போகிறார்கள்.
இதனிடையில் காந்திமதி, வடிவு, மாரி மூவரும் வீட்டுக்கு வர, அவர்களுடைய கார் சத்தம் கேட்டதும் கோமதி ஆவேசமாக வெளியில் வருகிறாள். காந்திமதியைப் பார்த்து நிறுத்தி, "நீயெல்லாம் ஒரு நல்ல அம்மாவா" என்று கண்டமேனிக்குப் பேசுகிறாள். இதனால் வடிவு கோபமாகி, பதிலுக்கு அத்தையைப் பார்த்து, உன்னை நல்ல மகளான்னு கேட்டால் சும்மா இருப்பியா என்கிறாள்.
மீனாவின் தாக்குதல்
அப்போது மீனா தனது மாமியாருக்கு சப்போர்ட் பண்ணிப் பதிலடி கொடுக்க ஆரம்பிக்கிறாள். எப்பவோ நடந்த விஷயங்களை எல்லாம் இப்போ எதுக்காகப் பேசுறீங்க! நீங்க மொத நல்ல அம்மாவா, நல்ல பொம்பளையா என்றெல்லாம் வார்த்தையை விடுகிறாள். இதனால் வடிவு எதுவும் பேச முடியாமல் போய்விடுகிறாள். காந்திமதியும் நடந்த பிரச்சனைகளால் இடிந்து போகிறாள்.
மொத்தத்தில், பழனியின் உண்மை மனம் அறிந்து சகோதரர்கள் அதிர்ச்சி அடையவும், மீனாவின் பேச்சால் வீட்டில் புதிய பிரச்சனை வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து நடக்கப்போகும் பிரச்சனைகள் என்ன என்பதை நாளைய எபிசோட்டில் காணலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications