Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: சுகன்யா பார்த்த நாரதர் வேலை, ராஜி போனில் பார்த்த காட்சி, கதறி அழுத மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 குடும்பத்தில், மீண்டும் ஒரு சண்டை சம்பவம் அரங்கேறி உள்ளது. மாமா பழனியின் புதிய கடைக்குச் சென்ற கதிரை, குமார் அவமானப்படுத்தி அடித்ததால், ஆவேசமடைந்த ராஜி தன்னுடைய புருஷனுக்காக அண்ணனின் சட்டையை பிடித்து சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pandian Stores serial vijay tv

பழனியின் கடைக்கு கதிர்

குடும்பத்தில் பழனி மீது அனைவரும் கோபமாக இருந்தாலும், கதிர் மாமாவின் புதிய கடைக்கு சென்று வாழ்த்து சொல்கிறான். பழனியும், உனக்கு எப்போ எது வேண்டுமானாலும் கடைக்கு வந்து எடுத்துக்கோ, பணமெல்லாம் கேட்க மாட்டேன் என்று பாசத்துடன் பேசுகிறான்.

அப்போது அங்கு வரும் குமார், "துரைக்கு இங்க என்ன வேலை" எனக் கேட்கிறான். காலையில் கடை ஆரம்பித்தபோது வராதவன், இப்போது எதற்காக வந்தான் என்று கேட்டு கதிருடன் வாக்குவாதம் செய்கிறான்.

குமாரின் தாக்குதல்

குமார் வம்புக்கு இழுத்தாலும், புதிய கடைக்கு முன்பாக பிரச்சனை வேண்டாம் என்று கதிர் அமைதியாக நிற்கிறான். ஆனாலும் குமார், "இங்க எதுக்குடா வந்து பிரச்சனை பண்றீங்க" என்று சட்டையை பிடித்து கதிரை அறைந்து விடுகிறான். இந்தச் சம்பவத்தை பழனியின் மனைவி சுகன்யா அப்படியே போனில் வீடியோ எடுத்து, "கதிரை இனிமேல் கடைக்கு வர வேண்டாம் சொல்லு" என்று சொல்லி ராஜிக்கு அனுப்புகிறார்.

கோபத்தின் உச்சத்தில் ராஜி

குமார் கதிரை அடித்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடையும் ராஜி, வீட்டின் வாசலில் குமாருக்காகக் காத்திருந்து, அவன் வந்ததும் கடும் கோபத்துடன் சட்டையைப் பிடித்து வாக்குவாதம் செய்கிறாள். இதனைப் பார்த்த மயில் அவசரமாகக் கோமதியை அழைத்து வருகிறாள்.

அப்போது அங்கு வரும் வடிவு, "அதான் பழனிக்கும் உங்களுக்கும் எதுவும் இல்லைன்னு ஆகிடுச்சுல்ல, அப்புறம் எதுக்காக அவனோட கடைக்கு போகணும்" என்கிறார். இதைக் கேட்ட ராஜி, நீயும் எப்பம்மா இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்ச என்று கேட்கிறாள். கதிரை முன்னால் நிற்க வைத்து, இப்போ கை வைடா பாப்போம் என்று சவால் விடவும் ஆரம்பிக்கிறாள்.

மீனாவிடம் மன்னிப்பு

சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்குள் வந்ததும், தன்னுடைய கோபத்தால் மீனாவிடம் பேசியதற்காக அவரை அழைத்து "சாரிக்கா, நான் கோபத்துல பேசிட்டேன்" எனப் பாசத்துடன் மன்னிப்புக் கேட்கிறாள் ராஜி. இதனால் மீனாவும் உணர்ச்சிப்பூர்வமாகிறாள். இந்த சண்டைகளை பார்த்த காந்திமதி, "இந்தக் குடும்பம் கடைசி வரையும் சேராது" என்று அழுது புலம்ப ஆரம்பிக்கிறாள். அதேபோல், கோமதியும் "பழனியை விட்டு நம்ம விலகியே இருப்போம், அதுதான் பழனிக்கு நல்லது" என்று சொல்கிறாள்.

இப்படியாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்பத்தில் அண்ணன் தங்கை சண்டையையும், ராஜி குமாரின் சட்டையை பிடித்துச் சவால் விடுவதையும் காட்டி இன்றைய எபிசோடு முடிகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+