Pandian Stores: இன்று பாண்டியன் செய்த தரமான சம்பவம்! இது பெற்றோருக்கு பாடம்! குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில், அரசிக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாண்டியன் ஒரு துணிச்சலான செயலைச் செய்துள்ளார். தெருவில் உள்ளவர்கள் தன் மகளை அசிங்கமாகப் பேசியதால், அதைத் தடுக்க வேண்டும் என்று பாண்டியன் முடிவெடுக்கிறார்.

Pandian Stores Vijay TV

பாண்டியனின் அதிரடி செயல்

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாண்டியன், தனது வீட்டு வாசலில் மைக் செட் வைத்த ஆட்டோவை வரவழைக்கிறார். இதைப்பார்த்த கோமதி, "எதற்கு இது?" என்று கேட்க, "என் மகளைத் தப்பாகப் பேசியவர்களுக்குப் பதில் கொடுக்கத்தான்," என்று பாண்டியன் சொல்கிறார். பக்கத்து வீட்டில் உள்ள குமாரவேலின் குடும்பத்தினரை வெளியே வரச் சொல்லி, மைக்கில் பேசத் தொடங்குகிறார். "என்னுடைய மகளைச் சிலர் தப்பாகப் பேசுகிறார்கள். ஆனால், என்னுடைய மகள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒருத்தர் இந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்கணும்னு சொன்னதை நம்பி, என்னுடைய மகள் சரிக்கிவிட்டாரள். ஆனால், அது தவறு என்று அவர் புரிந்து கொண்டுவிட்டார். அதிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். இதில் என் மகளுக்கு எந்தத் தவறும் இல்லையே!

எதற்காக என் மகளிடம் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்? உங்களுக்குத் தைரியம் இருந்தால், தப்பு செஞ்ச குமாரவேலின் அப்பாவிடமும் அவருடைய பெரியப்பாவிடமும் கேட்டுக்கொள்ளுங்கள். அவங்க கிட்ட போயி என்ன வேணாலும் பேசுங்க, என் மகள் கிட்ட இனி யாரும் எதுவும் பேசக்கூடாது,"என் பொண்ணுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறோம், என் பொண்ணுக்கு பிரச்சனை கொடுத்த அந்த குமாரவேலுவை இனி ஜெயிலை விட்டு வெளியே வரவே விடமாட்டேன் என்று தன் வீட்டு முன்பு நின்று தைரியமாகப் பேசுகிறார். இதனால், கோபமான சக்திவேல், பாண்டியனை அடிக்க வருகிறார். ஆனால், அப்பத்தா அவரைத் தடுத்துவிடுகிறார்.

ஊர் முழுக்க பரவிய செய்தி

பாண்டியன், இந்த விஷயத்தை ஊர் முழுக்கச் சொல்லப்போறேன் என்று ஆட்டோவில் மைக்கில் சொல்லிக்கொண்டே போகிறார். இதைத் தங்கமயில் வீடியோ எடுத்து வைக்கிறார். ஊரில் உள்ளவர்கள், அந்த வீடியோவை டிவி சேனலுக்கு அனுப்பி வைக்க, டிவியில் பாண்டியன் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அப்போது கோமதி, "உங்க அப்பா செஞ்சது சரியில்லை. பொம்பள பிள்ளையை கூட்டிட்டு இப்படி ஊரு சுத்த கிளம்பி இருக்காரு," என்று சொல்ல, சரவணன், "அப்பா செஞ்சது சரியா, தப்பா என்று எனக்குத் தெரியவில்லை," என்று சொல்கிறார். சரவணன் சொன்னதைப் போலவே, தங்கமயிலும் பேச, அந்த நேரத்தில் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். அவரிடம், "டிவியில் உங்கள் செய்திதான் ஓடிக்கிட்டு இருக்கு," என்று சொல்ல, "எல்லாவற்றையும் நானே பார்த்தேன். ஆனால், நான் செஞ்சது சரியா, தப்பா என்று எனக்குக் குழப்பமா இருக்கு," என்று பாண்டியன் சொல்கிறார்.

அரசியின் ஆதரவு

பாண்டியன் பேசியதை கேட்டு கோமதி கோபத்தில் பாண்டியனை திட்டுகிறார் ஆனால் அரசி நான் பாதிக்கப்பட்ட பொன்னாக சொல்கிறேன் அப்பா நீங்க எனக்காக செய்த இந்த செயல் எனக்கு ஆறுதலா இருந்தது என்று சொன்னதும், பாண்டியன், "என்னுடைய மகளே சொல்லிட்டா, இதுக்கு மேல பேச்சே இல்லை," என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

Pandian Stores Vijay TV

பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பலர் வெளியே சொல்வதற்குப் பயந்து போய் மறைத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு பெண் பிள்ளைக்குப் பிரச்சனை என்றால், அதை மறைத்து வைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மொத்த குடும்பமும் ஆறுதலாக நிற்க வேண்டும் என்று 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஒரு முக்கியமான செய்தியைக் காட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+