Pandian Stores: உனக்கு வெட்கமே இருக்காதாடி! மயிலை அடிக்க பாய்ந்த சரவணன்- பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 5ஆம் தேதி எபிசோடில் சரவணன் மற்றும் மயிலுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை வீட்டில் உள்ளவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மயிலின் தொடர்ச்சியான நாடகங்களால் வேதனை தாங்க முடியாமல் சரவணன் தன் குடும்பத்தினரிடம் உச்சக்கட்ட கோபத்தை வெளியிட்டிருக்கிறார்.
மயிலை பற்றிய உண்மைகள் தெரிந்ததில் இருந்து சரவணன் மனதுக்குள் புழுங்கி அலைகிறார். இந்த விஷயம் தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் மயிலுக்கு ஆதரவாக பேசுவது சரவணனுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சரவணனின் தவிப்பு
பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் தொடர்ந்து இதுபற்றி கேள்வி கேட்கும்போதும் சரவணனால் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், சரவணன் அப்பாவிடம் நான் கல்யாணமே வேண்டாம், சாமியாராகப் போறேன்னு தான் சொன்னேன் -நீங்க எதுக்காக எனக்குக் கல்யாணம் வைச்சீங்கனு கடுமையாகக் கேட்டுவிடுகிறான். எப்போதும் இதுபோலப் பேசாத மகன் இப்படிச் சொன்னதால் பாண்டியன் கடுமையாக அதிர்ச்சி அடைகிறார்.
இதற்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடும் போதும் சரவணன் மயிலின் முகத்தைக்கூட பார்க்காமல் கோபத்துடன் இருக்கிறான். மயில் அழுது கொண்டே சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாள். மறுபடியும் கோமதி கேட்கும்போது சரவணன், இப்போ நான் மயில் கூடச் சண்டைப் போடுறது தான் உங்களுக்குப் பிரச்சனை - நான் இனிமேல் உங்க யார் முன்னாலயும் சண்டைப் போடலைஎன்கிறார்.
உடனே பாண்டியன் கோபமாகி, கல்யாணம் பண்ண பொண்ணை வச்சு நிம்மதியா வாழ மாட்டியா என்று திட்டுகிறார். இதனால் தன்னுடைய பொறுமையை இழந்த சரவணன் எழுந்து, இனிமே மயில் அழுகவே மாட்டாப்பா. எல்லாப் பிரச்சனையையும் என் மனசுலயே வச்சுப் புழுங்கிட்டு எங்கயாவது போயிறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க என்று சொல்கிறான்.
இதைக்கேட்டு கதிர் உள்ளிட்ட அனைவரும் பதறிப்போய் அவனைச் சுற்றி நின்று சமாதானம் செய்கின்றனர். சரவணன் அப்பாவைக் கட்டிப்பிடித்து கதறி அழுகிறான். சரவணன் அழுவதைப் பார்த்த கோமதி அதிர்ச்சியாகி மயிலிடம் போய் நீயாவது என்னன்னு சொல்லு எனக் கேட்கிறாள்.
மயில் நல்லவளைப் போல் நாங்களே இந்த பிரச்சனையை பேசிக்கிறோம் அத்தை என்கிறாள். தொடர்ந்து சரவணன் பக்கத்திலும் வந்து உங்களுக்கு என்னை பிடிக்கலை மாமா. இந்தக் குடும்பத்துக்காக நான் எவ்வளவு கஷ்டத்தை வேணாலும் தாங்கிக்கிறேன் என நடிக்கிறாள்.
இதனால் உச்சக்கட்ட கோபம் அடையும் சரவணன், பக்கத்தில் இருக்கும் பூத்தொட்டியை ஒன்றை எடுத்து அவளை அடிக்க பாய்கிறார். - மொத்தக் குடும்பமும் இதனால் திகைத்து போகிறது. உனக்கு வெட்கமே இருக்காதாடி? இப்பவும் நடிச்சுட்டுத் திரியுற எனக் கேட்கிறான் சரவணன். இதனைத் தொடர்ந்து சரவணன் வீட்டில் உள்ளவர்களிடம் மயில் பற்றிய உண்மையை சொல்வாரா? என்பதை நாளைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் எபிசோடில் பார்க்கலாம்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications