பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கல்யாணத்தை நிறுத்திய பாட்டி.. மீனா கொடுத்த ஐடியா, மயிலுக்கு இரட்டை சந்தோசம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 26 பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில், குமாரவேலின் கல்யாணத்தை அவருடைய அப்பத்தாவே நிறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் தங்க மயிலுக்கு இரண்டு சந்தோஷம் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் (Pandian Stores 2 serial Feb 24 episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தங்கமயில் தன்னுடைய தங்கச்சிக்கு தோசை சுட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்போது நேற்று மாமாவுக்கு என் ஃபோனில் இருந்து கால் பண்ணுனியா? அவர் பேசினாரா? என்று கேட்க, அதற்கு மயில், கால் பண்ணுனேன் ஆனா அவர் பேசல போனை கட் பண்ணிட்டாரு என்று சொன்னதும் நான் வேணும்னா கடையில் போய் மாமாவிடம் பேசி பார்க்கவா என்று தங்கமயில் தங்கச்சி கேட்க, மயில் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
பாவம் தங்கமயில்
பிறகு தங்கமயில் சாப்பிட போகும்போது அவருடைய அம்மா இங்கே கொஞ்சம் தான் மாவு இருக்கு அதை நீயே சாப்பிட்டு போய்விடாதே என்று திட்டியதும் தங்கமயில் சாப்பாடு வேண்டாம் என்று வேலைக்கு கிளம்புகிறார். மறுபக்கத்தில் மீனா கோமதி வீட்டிற்கு வந்து தோசை சாப்பிட்டுக் கொண்டு பாண்டியனின் நடவடிக்கையை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ராஜி தலையை விரித்து போட்டு வர கோமதி அதற்கு வழக்கம் போல திட்டுகிறார். அப்போது கதிர் நான் தான் இப்படி போட சொன்னேன், எனக்கு புடிச்சிருக்கு என்று கோமதியும் சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு ராஜியும் கதிரும் வெளியே வரும்போது குமார் பாண்டியன் வீட்டை பார்த்தபடியே நிக்கிறார் அதை அவர்கள் பார்த்துவிட்டு கிளம்பி போகின்றனர்.
அப்போது அங்கு வரும் பாட்டி காந்திமதி, "சாப்பிடாம இருக்கனு உங்க அம்மா புலம்பிக்கிட்டே இருக்கா... நீ ஏன் இங்க வந்து நின்னுட்டு இருக்க? போயி சாப்பிடு... நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன்" என்று சொல்லி கிளம்புகிறார். அதற்கு குமரவேல், "நடந்தா போறீங்களே... நான் வேண்டுமானால் பைக்கில் டிராப் பண்ணட்டுமா?" என்று கேட்க, "அதெல்லாம் வேண்டாம் டா... பக்கத்துல தான் கோவில்... நான் நடந்தே போயிக்கிறேன்" என்று கூறி காந்திமதி செல்கிறார்.
பீல் பண்ணும் குமார்
கோவிலுக்கு காந்திமதி தனியாக வந்திருப்பதை பார்த்த பூசாரி, "என்னம்மா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க... கூட யாரும் வரலையா?" என்று கேட்கிறார். அதற்கு காந்திமதி, "நாளைக்கு என்னோட பேரனுக்கு நிச்சயதார்த்தம்... வீட்ல அதற்கான வேலைகள் போயிட்டு இருக்கு... அதான் யாரும் வரல" என்று பதிலளிக்கிறார்.
கோவிலில் நடந்த சம்பவம்
கோவிலுக்கு வரச் சொல்லியிருந்த பெண் வீட்டாரிடம் காந்திமதி பேச ஆரம்பிக்கிறார். "நீங்களும் காலகாலத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறீங்க... நல்ல விஷயம் தான். ஆனா நீங்க பொண்ணு கொடுக்குறதுக்கு முன்னாடி மாப்பிள்ளையை பற்றி வெளிய விசாரிச்சீங்களா?" என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், "விசாரிச்சோம்... எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க" என்று கூறுகிறார்கள்.
அதற்கு காந்திமதி, "நீங்க விசாரிச்சதுல யாருமே குமாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லலையா?" என்று கேட்க, பெண் வீட்டார் அதிர்ச்சி அடைகிறார்கள்.
கல்யாணத்தை நிறுத்திய அப்பத்தா
பின்னர் காந்திமதி உண்மையை கூறுகிறார். "என்னோட மகள் கோமதியின் பொண்ணு அரசியும் குமாரும் காதலிச்சாங்க. அது அவங்க ஃபேமிலிக்கு பிடிக்காம அரசிக்கு வேறொரு பையனுடன் கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்க. ஆனா அந்த கல்யாணத்துக்கு அரசிக்கு விருப்பம் இல்லாததால், கல்யாணத்துக்கு முன்னாடி நாள் குமரவேலோட ஓடிப்போயிட்டா. அதுமட்டுமில்லாம குமார் அவ கழுத்துல தாலியும் கட்டிட்டான்.
அதுக்கப்புறம் அரசி கொஞ்ச நாள் எங்க வீட்ல இருந்தா. பிறகு ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை வந்துச்சு. அதுக்கப்புறம் அவ அவங்க வீட்டுக்கே போயிட்டா. குமார் இன்னும் அந்த பொண்ணு அரசியை தான் நினைச்சிட்டு இருக்கான். இந்த நிலைமையில உங்க பொண்ணுக்கும் குமாருக்கும் கல்யாணம் நடந்தா நல்லா இருக்காது. உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்ல வர்றேன். தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க" என்று கூறிவிட்டு காந்திமதி அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபுறம், மீனாவின் தோழி வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ள தங்கமயில் எல்லா வேலைகளையும் நன்றாக செய்து நல்ல பெயர் வாங்குகிறார். அப்போது மீனாவின் தோழி அவசரமாக வீட்டுக்கு வருகிறார். என்னாச்சு என்று தங்கமயில் கேட்க, சமையல் வேலை பார்த்த பெண் திடீரென வேலைக்கு வராமல் நின்றுவிட்டதாக அவர் கூறுகிறார்.
சந்தோஷத்தில் தங்கமயில்
உடனே தங்கமயில், "நானே இனி சமையல் வேலையும் பார்த்துக்கிறேன்" என்று சொல்ல, மீனாவின் தோழி "அப்போ அதற்கும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரம் சம்பளமா வாங்கிக்கோ" என்று கூறுகிறார். இவ்வளவு சம்பளம் கிடைப்பதை நினைத்து தங்கமயில் மகிழ்ச்சி அடைந்து, உடனே இந்த தகவலை மீனாவுக்கு போன் செய்து சொல்லி சந்தோஷமாக இருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications