பாண்டியன் ஸ்டோர்ஸ்: அஞ்சலி பற்றி மீனாவிடம் ஓபனாக பேசிய சரவணன்.. பாண்டியன் வீட்டில் அடுத்த பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2026 பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில் அஞ்சலிக்கும் தனக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்று சரவணன் மீனாவிடம் ஓபனாக பேசுகிறார். அதே நேரத்தில் குமாரின் நிச்சயதார்த்தமும் நின்று போகிறது. இதை நினைத்து அரசி சந்தோஷப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores serial Pandian Stores 2 serial vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் (Pandian Stores 2 serial Feb 26, 2026 Episode ) இன்றைய எபிசோடில், வழக்கம்போல் கோமதி பாண்டியனை வம்பிழுக்கிறார். வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் சென்று உங்களுக்கு காஃபி வேணுமா என கேட்கும் கோமதி, அவர்கள் வேண்டாம் என சொன்னாலும் வாண்டடாக கொடுத்துவிட்டு போகிறார். ஆனால் காஃபிக்காக காத்திருக்கும் பாண்டியனிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் இருக்கிறார். இதனால் பாண்டியன் பயங்கர கடுப்பில் இருக்கிறார். அந்த நேரம் பார்த்து பழனிவேல் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் என்னடா அண்ணன் வீட்டுல எதாச்சும் விசேஷமா என கோமதி விசாரிக்கிறார்.

பழனி கேட்ட கேள்வி

என்ன அக்கா எப்ப பார்த்தாலும் அண்ணன் வீட்டுலயே ஒரு கண்ணு விச்சிட்டு இருக்கியா என பழனிவேல் கேட்கிறார். இல்லடா நிறைய பேர் வந்தாங்க அதான் கேட்டேன் என சொல்கிறார் கோமதி. உடனே பழனிவேல், குமரவேலுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் விஷயத்தை பற்றி கூறுகிறார். அதைக்கேட்ட அரசி ஷாக் ஆகிறார். அவரின் முகமே வாடிப்போகிறது. இதையெல்லாம் பழனிவேல் நோட் பண்ணுகிறார். பின்னர் அரசி எழுந்து உள்ளே போகிறார். அப்போது கோமதி என் பொண்ணு வாழ்க்கை கெடுத்தவங்க நல்லாவே இருக்க கூடாது. ஆனால் அவங்களுக்கு தான் நல்லது மேல நல்லது நடக்கு என்று சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

நின்று போன நிச்சயதார்த்தம்

மறுபுறம் குமரவேல் வீட்டில் அவரின் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து பெண் வீட்டில் இருந்து ஒரு நபர் வந்து இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என சொல்கிறார். அவரிடம் என்னங்க ஆச்சு என வேல் பிரதர்ஸ் கேட்க, அதற்கு அந்த நபர், நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க, உங்க பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை எங்ககிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்க, அதனால எங்க பொண்ணை உங்க பையனுக்கு தரமாட்டோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதிர்ச்சியில் குமார் குடும்பம்

இந்த விஷயம் தான் ஊர் உலகத்துக்கே தெரியுமே என சொல்லிப்பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணுவீட்டில் இருந்த வந்தவர், அதெல்லாம் முடியவே முடியாது என ஒரேபோடாக போடுகிறார். நிச்சயதார்த்தம் நின்றதை அடுத்து மறுபடியும் பாண்டியன் வீட்டுக்கு செல்லும் பழனி, குமரவேலுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது என கூறுகிறார்.

பழனி கேட்ட கேள்வி

இதைக்கேட்டதும் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார் அரசி. இதை நோட் பண்ணும் பழனி, அரசியிடம், உனக்கு குமரவேல் மீது இஷ்டமா என கேட்க, அதற்கு அரசி பதில் சொல்லாமல் ரூமுக்குள் சென்றுவிடுகிறார். இதையடுத்து சரவணன் கடைக்கு கிளம்புவதற்காக வண்டியை எடுக்க, அந்த நேரம் பார்த்து மீனா வீட்டுக்கு வருகிறார். அவர் வாசலில் நிற்கும் சரவணனை அழைத்து பேசுகிறார்.

சரவணன் கொடுத்த பதில்

கோவிலில் உங்களை ஒரு பொண்ணோட பார்த்தேன். யார் அது என கேட்கிறார். அவ என்னோட பழைய ஃபிரெண்டு, அதனால தான் பார்த்து பேசிக்கிட்டு இருந்தோம், அவகிட்ட என்னோட சோகக் கதையை சொல்லிகிட்டு இருந்தேன். அவ்வளவுதான் என சரவணன் சொல்ல, உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே வேற எதுவும் இல்லதான என மீனா கேட்கிறார்.

அப்படியெல்லாம் எதுவும் இல்ல, அதான் ஏற்கனவே என்னோட வாழ்க்கை முடிஞ்சு போச்சுல்ல.. ஆனா நான் எனக்காக இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக் கூடாதா? என்று சரவணன் கேட்க, மீனா அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+