பாண்டியன் ஸ்டோர்ஸ்:சுகன்யா பற்றி மீனாவுக்கு தெரிந்த உண்மை.. நறுக்குன்னு கேட்ட கேள்வி!கதறி அழுத கதிர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் சுகன்யா பற்றிய உண்மைகள் மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் கதிர் தன்னுடைய தங்கை அரசியை அடித்ததற்காக கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது ராஜி ஆறுதல் சொல்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் ராஜி குமாரவேலை காதலித்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது. அப்போது மொத்த குடும்பத்தினரும் ராஜியை திட்டித்தீர்த்திருந்தனர். பாண்டியன் கோபத்திலும் விரத்தியிலும் வீட்டை விட்டு வெளியே போயிருந்தார். பிறகு மகன்கள் எல்லோரும் சென்று பாண்டியனை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

கல்யாண ஏற்பாடு
அதற்குப் பிறகு அரசி இனி குமாரவேலை காதலிக்க மாட்டேன் அவரிடம் பேசமாட்டேன் என்று பாண்டியன் மீது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் பாண்டியன் அரசிக்கு தன்னுடைய அக்கா மகனை கல்யாணம் பண்ணுவதற்காக பேசி முடித்திருக்கிறார். அடுத்த வாரத்தில் பெண் பார்க்க வரச்சொல்லி இருக்கிறார்.
அரசி செய்த சத்தியம்
இந்த நிலையில் அரசியிடம் நீ குமாரை மறந்து விடாதே எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி அவரை கல்யாணம் பண்ணிக்கணும் என்று சுகன்யா பேசிக் கொண்டிருப்பதை கேட்டு மீனா கோபப்பட்டு சுகன்யாவை திட்டி இருந்தார். பிறகு இங்கே நடக்கும் விஷயங்களை சக்திவேல் வீட்டில் சென்று சுகன்யா பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு சுகன்யாவின் அக்காவும் அதை கேட்டு இருக்கிறார்.
புலம்பும் கோமதி
இதனால் சுகன்யா தான் பாண்டியன் குடும்பத்தை பற்றி இங்கே வந்து எல்லா விஷயங்களும் சொல்வது என்ற ரகசியம் தெரிந்திருக்கிறது. இப்படியான நிலையில் எபிசோடில் அரசி தூங்கிக் கொண்டிருக்கும்போது கோமதி பக்கத்தில் இருந்து அழுது கொண்டிருக்கிறார். நான் ரொம்ப பேசிட்டேன் என்று புலம்பிக்கொண்டிருக்கும்போது கதிர் வருகிறார்.
கதறி அழுத கதிர்
நானும் ராஜியை ரொம்ப அடிச்சிட்டேன். அவ வேற யாரையும் காதலிச்சு இருந்தாலும் பரவாயில்லை அந்த குமாரை காதலிச்சு இருக்கிறா. அவன் எவ்வளவு மோசம்னு தெரிஞ்சு ஏன் இப்படி பண்ணுனா என்று அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் அங்கு வந்ததும் கதிர் அங்கிருந்து கிளம்பி ராஜி ரூமுக்கு போகிறார். அப்போது கதிர் அழுவதை பார்த்ததும் ராஜி பதறிப் போய் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார்.
பீல் பண்ணும் பாண்டியன்
அரசிக்கு இப்போ கல்யாணம் பண்ணனுமா என்று கேட்க, இப்ப கல்யாணம் பண்ணுறது ஒன்னும் தப்பு இல்ல. அவ கல்யாணம் பண்ணிட்டு கூட படிக்கலாம் நான் இப்போ அப்படித்தானே படிச்சிட்டு இருக்கேன் என்று ராஜி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாண்டியனும் கோமதியிடம் அரசி சாப்பிட்டாளா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

நடிக்கும் சுகன்யா
அதுபோல பழனி தன்னுடைய ரூமுக்கு போய் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது குறட்டை சத்தம் அதிகமாகி இருக்கு என்று பழனியை சுகன்யா ரூமை விட்டு வெளியே துரத்த அவர் ஹாலில் படுத்து தூங்குகிறார். காலையில் சுகன்யாவின் அக்கா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு சுகன்யா பழனியை எழுப்பி திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பழனியின் அம்மா வெளியே வந்ததும் சுகன்யா ஒன்றும் நடக்காதது போல நடித்துக் கொண்டிருக்கிறார். இதையும் சுகன்யாவின் அக்கா கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications