பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: உதவி செய்த மீனாவை போட்டு கொடுத்த மயில்.. கதிர் கொடுத்த அதிர்ச்சி! கோபத்தில் பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் நான்காம் தேதிக்கான எபிசோடு பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. #PandianStores2 #PS2Serial #PandianStores2TodayEpisode என்ற ட்ரெண்டிங் ஹாஷ்டேக்குகளுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த எபிசோடை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இப்போது தங்கமயிலின் கர்ப்பத்தை பற்றி கேள்விப்பட்ட சரவணன் கோவப்பட்டு திட்டுகிறார்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு (Pandian Stores 2 serial March 4 Episode) மீனா மற்றும் செந்தில் காட்சிகளோடு தொடங்குகிறது. அந்த நேரத்தில் தங்கமயிலிடமிருந்து போன் வர, மீனா சிறிது பதற்றமடைகிறார். ஆனால் தங்கமயிலின் நம்பரை "ஷியாமளா அக்கா" என்று சேவ் பண்ணி வைத்திருந்ததால் செந்திலிடம் சிக்காமல் தப்பிக்கிறார். #Meena #Senthil #Thangamayil

மீண்டும் ஏமாற்றம்

தங்கமயில், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து சரவணன் மாமாவிடம் சொல்ல வேண்டும், அதற்கு மீனாவே உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். சரவணனை அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு வரச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று மீனா, சரவணனுக்கு போன் செய்து தனியாக பேச வேண்டும் என்று கோயிலுக்கு வர சொல்கிறார். செந்தில் மீண்டும் ஏதாவது பிரச்சனை செய்தானா என்று சரவணன் கேட்க, ஆமாம் அதைப் பற்றிதான் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதோடு தான் கூப்பிட்டத பற்றி பாண்டியனிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். #Saravanan #PandianStores2Latest

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

மறுபக்கத்தில் கோமதி தன்னுடைய அம்மாவை குழந்தை போல பார்த்துக் கொள்கிறார். அப்போது பாண்டியன் வந்து காந்திமதியிடம் மருந்து சாப்பிட்டீங்களா என்று விசாரித்துவிட்டு கடைக்கு கிளம்புகிறார். அந்த நேரத்தில் கோமதியிடம் எதுவும் பேசாமல் அரசியிடமே எல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறார். இதையெல்லாம் பார்த்த காந்திமதி பாண்டியன் போனதும் நீங்க இன்னும் பேசலையா என்று கோமதியிடம் கேட்க, அதற்கு கோமதி நடந்த விஷயத்தை சொன்னதும் காந்திமதி கோமதிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

சரவணனுக்கு அதிர்ச்சி

சொன்னபடி தங்கமயில் கோயிலுக்கு வந்து காத்திருக்கிறார். சரவணன் வந்ததும், அவரிடம் போய் பேச போகிறார். அதற்கு சரவணன் நான் உன்னை பார்க்க வரல மீனா பேசணும்னு சொன்னா அதற்காகத்தான் வந்தேன் என்று சொன்னதும், எனக்காக தான் மீனா அப்படி உங்களிடம் பொய் சொன்னா.. நான் தான் உங்களிடம் பேச வேண்டும் என்று அவகிட்ட கேட்டேன் அதற்காகத்தான் இப்படி பண்ணுனா என்று மயில் மீனா பற்றி போட்டு கொடுக்கிறார்.

மேலும் தனது நம்பரை பிளாக் செய்ததால் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்று சொல்ல, உடனே சரவணன், "மீனாவையும் உன் பக்கம் இழுத்துட்டியா?" என்று சந்தேகமாக கேட்கிறார். #PandianStores2Update பின்னர் தங்கமயில் Pregnancy Report கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் சரவணன் வாங்க மறுக்கிறார். "நான் மாசமாக இருக்கிறேன்" என்று தங்கமயில் சொன்னதும், சரவணன் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார். ஏற்கனவே இதே மாதிரி டிராமா செய்து வீட்டுக்குள் வந்ததை நினைத்து பார்த்து, மீண்டும் பழைய நாடகம் ஆரம்பித்துவிட்டாயா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். #PandianStores2Twist #ThangamayilPregnant

சரவணன் கேட்ட கேள்வி

இதற்கு தங்கமயில், "இந்த முறை உண்மையிலேயே மாசமாக இருக்கிறேன். டாக்டரை பார்த்து உறுதி செய்த பிறகுதான் சொல்றேன்" என்று சத்தியம் செய்கிறார். கோயிலில் சாமி மீது சத்தியம் செய்தாலும் சரவணன் நம்ப மறுக்கிறார். "நான் உன்னிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். அப்புறம் எப்படி மாசமாக இருக்கிறாய்?" என்று கேட்கிறார். #SaravananVsThangamayil

"நாம் அப்பா அம்மாவாக போகிறோம். உங்களது குழந்தை என் வயிற்றில்" என்று தங்கமயில் சொல்ல, சரவணன் ரொம்பவே கோபப்படுகிறார். "அது என் குழந்தை கிடையாது. வேற எவனோட குழந்தை" என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டு தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார். ஒருவேளை நீ மாசமாக இருந்தாலும் அந்த குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று சரவணன் தெளிவாக கூறுகிறார். இனிமேல் என்னை பார்க்க வராதே என்று கையெடுத்து கும்பிட்டு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். #PandianStores2Drama #TamilSerialUpdate இப்படியாக இன்றைய எபிசோடு #PandianStores2Episode731முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+