பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிரின் பிடிவாதம்! வீட்டை விட்டு கிளம்பும் ராஜி! கடும் கோபத்தில் பாண்டியன்! கோமதி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடில், ராஜியின் டான்ஸ் கனவு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல், மற்றும் பாண்டியனின் கோபம் எனப் பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறின. இதுவரைக்கும் ராஜிக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருந்த கதிர் இப்போது ராஜி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

ராஜியின் கனவும், பாண்டியனின் கண்டிப்பும்
எபிசோடின் தொடக்கத்தில், ராஜி டான்ஸ் போட்டி விஷயத்தைப் பாண்டியனிடம் பேச வருகிறார். அப்போது கதிர் ராஜியை தடுக்க முயற்சி செய்ய, நான் உங்ககிட்ட பேசல மாமா கிட்ட தான் பேசணும் என்று சொல்கிறார். அதைக் கேட்டு குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாண்டியன், "இந்த விஷயத்தைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் என்னிடம் பேசு" என்று கண்டிப்புடன் கூறுகிறார். ஆனால் ராஜி, "அந்த விஷயத்தைப் பற்றித்தான் பேச வேண்டும்" என்று பிடிவாதமாகச் சொல்கிறார்.
இதனைக் கேட்ட பாண்டியன், "நீ யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. கிளம்பிப் போகிறதாக இருந்தால் போ" என்று கோபமாகச் சொல்கிறார். அதைக் கேட்ட ராஜி, "நான் போயிட்டு வருகிறேன்" என்று சொல்ல, வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். பிறகு பாண்டியன் கோமதியிடம், "அந்தப் பிள்ளையின் இஷ்டப்படி போகட்டும். இனி இந்த விஷயம் குறித்து என்னிடம் யாரும் பேச வேண்டாம்" என்று கோபமாகச் சொல்லிவிடுகிறார். அதோடு அந்த பிள்ளை விஷயமா இனி அவளுடைய புருஷனே எந்த முடிவும் எடுக்கட்டும் என்று சொல்கிறார்.
கதிரும், ராஜியும் வாக்குவாதம்
இதன் பின்னர், ராஜி கதிரிடம் சென்று, "என்னைத் தவறாக நினைக்காதே. நான் கிளம்புகிறேன். நிறைய விஷயங்களில் எனக்கு நீ ஆதரவாக இருந்திருக்கிறாய். இந்த விஷயத்திலும் ஆதரவு கொடுப்பாயா?" என்று கேட்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் ராஜி கேட்காமல் பெட்டியை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வருகிறார். அப்போது எல்லோரும் நீ கிளம்பிட்டியா? கதிர் என்ன சொன்னான் என்று கேட்க, ராஜி எதுவும் பேசாமல் நிற்கும் போது கதிர் அங்கு வந்து கிளம்புவோமா என்று கேட்க அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
பிறகு ராஜி, கதிர் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்கின்றனர். அதைப் பார்த்த கோமதி, "என்ன செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு பாண்டியன் கோமதியை அமைதியாக இருக்க சொல்லிவிடுகிறார். ரோட்டில் சிறிது தூரம் சென்றதும், கதிர் ராஜியிடம் சண்டை போட்டு, "நான் வரல, நீ மட்டும் போ" என்று சொல்லிவிட்டுத் திரும்பி வீட்டிற்கு வந்துவிடுகிறார். கதிர் திரும்பி வந்த பிறகும், கோமதி அவரைத் திட்டுகிறார்.
சென்னைக்கு சென்ற ராஜி
இதற்கிடையில், ராஜி தனியாகச் சென்னைக்கு வருகிறார். அங்கே, டான்ஸ் போட்டி நடக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மீனா ராஜியை போனில் அழைத்து, "உன்னிடம் பணம் எல்லாம் இருக்கிறதா?" என்று கேட்கிறார். ராஜி, தனக்கு எல்லாம் இருப்பதாகச் சொல்லி, டான்ஸ் போட்டி நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். அதோடு தான் எப்படியாவது பரிசை வெற்றி பெற்று கதிர் உடைய பிசினஸுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கனவு அதற்காக குடும்பத்தினர் எல்லாரும் என்னை திட்டினாலும் பரவாயில்லை. நான் வெற்றி பெற்ற அந்த பணத்தை கொடுத்து கதிர் பிசினஸ் தொடங்கியதும் எல்லோரும் என்ன மன்னிச்சிடுவாங்க என்று சொல்லி கொண்டிருக்கிறார். பிறகு டான்ஸ் நடக்கும் இடத்திற்கு ராஜி தனியாக சென்று இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ராஜியின் கனவு, குடும்பத்தில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகச் சென்னைக்குச் சென்றுள்ள ராஜி, தனது டான்ஸ் கனவை எப்படி நிறைவேற்றப் போகிறார்? என்பதையும், பாண்டியன் குடும்பம் இனி என்ன செய்யப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications