பாண்டியன் ஸ்டோர்ஸ்: செந்திலுக்கு அதிர்ச்சி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் பாண்டியன்! சரவணன் கண்ட காட்சி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கூட்டுக்குடும்பத்தின் சிக்கல்களும், பாசப் பிணைப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது. இன்று ஒளிபரப்பான எபிசோடில், குடும்பத்திற்குள் நடக்கும் சின்னச் சின்ன ரகசியங்களும், செந்தில் - மீனா இடையேயான சண்டையும், சரவணனின் கோபமும் எனப் பல திருப்பங்கள் அரங்கேறின.

அரசியின் படிப்பு
இன்றைய எபிசோடில், அரசி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, செந்திலிடம் வந்து, "இந்த புத்தகத்தில கொஞ்சம் டவுட் இருக்கு, சொல்லித்தாறீங்களா?" என்று கேட்கிறார்.
ஆனால், செந்தில் உடனே, "நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். அண்ணி கிட்ட கேளு" என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறார். செந்திலின் இந்தப் பதிலைக் கேட்ட மீனா, உடனே உள்ளே வந்து, "அப்படி என்ன பிஸி? டான்ஸ் வீடியோ ஏதும் பார்த்துக் கொண்டிருக்கீங்களா?" என்று கிண்டலாகக் கேட்கிறார். செந்தில் சமாளித்து, "அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்று மறுக்கிறார். அதற்கு அரசி அண்ணன் ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கிறாரு ஏதோ பொருளை ஆர்டர் போடுறாரு என்று போட்டுக் கொடுக்கிறார். இதற்கு மீனா என்ன பண்ணுற என்று கேட்டுக் கொண்டிருக்க, செந்தில் உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார்
இப்படியிருக்க, அங்கு வந்த பாண்டியன், அரசியைப் பார்த்து, என்னம்மா படிக்கிறியா என்று கேட்டுவிட்டு வந்து பக்கத்தில் அமர்கிறார். பிறகு கோமதியை கூப்பிட ,கோமதி என்ன இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கீங்க என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்
பாண்டியன், கோமதியிடம் உன்கிட்ட, "எவ்வளவு பணம் இருக்கு?" என்று கேட்கிறார். அதற்கு கோமதி, "62,000 ரூபாய் தான் இருக்கு" என்கிறார். அதற்கு பாண்டியன் குடோன் பராமரிப்பு வேலை இருக்கிறது அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவது என்று சொல்கிறார். குடும்பச் செலவுகளுக்குப் பணம் தேவை என்பதை உணர்ந்த மீனா, உடனே தலையிட்டு, "மாமா, நீங்க கொடுத்த 10 லட்சம் அப்படியே தான் இருக்கு. தேவையென்றால் எடுத்துக்கொள்ளுங்க" என்று பாசத்துடன் சொல்கிறார். மீனாவின் இந்த அன்பைக் கேட்டு, பாண்டியன் உருகினாலும், "அதெல்லாம் ஒன்னும் வேணாம்" என்று மறுத்து விடுகிறார்.
மீனாவுக்கு வந்த புதிய சிக்கல்
பாண்டியனிடம் மீனா அப்படிப் பேசியது, செந்திலுக்குப் பிடிக்கவில்லை. அதனால், செந்தில், மீனாவிற்கு பன் செய்து அவரை வெளியே கூப்பிட்டு", எதுக்காக நீ அப்பா கிட்ட இப்படி எல்லாம் சொன்ன?" என்று கோபமாகக் கேட்கிறார். மேலும், "நாம போய் தனியா இருப்போம்" என்ற வாதத்தையும் அவர் மீனாவிடம் வைக்கிறார்.
ஆனால், மீனா இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. "நான் தனியா போய் எல்லாம் இருக்க மாட்டேன். இந்தக் கதையை விடுங்க" என்று சொல்லி செந்திலின் பேச்சை மீனா நிறுத்துகிறார். செந்தில், மீனா இடையேயான இந்த உரையாடல், அவர்களுக்குள் மீண்டும் ஒரு விரிசலை உண்டாக்குமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
சரவணனின் கோபமும், கதிரின் தயக்கமும்
இப்படியிருக்க, மயிலின் அப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்து, அங்கிருந்து தங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை எல்லாம் கணக்கு வைத்துக் கொள்ளாமல் எடுத்துக்கொண்டு போகிறார். இதைத் தற்செயலாகப் பார்த்த சரவணன் கோபப்படுகிறார். மயிலின் அப்பாவின் இந்தச் செயல், சரவணனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மீண்டும் ஒரு சண்டையை உருவாக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இறுதியாக, கதிர், "இன்று இரவு டிரைவர் யாரும் இல்ல" என்று சொல்லிவிட்டு, "நானே கார் ஓட்டிக் கொண்டு போறேன்" என்கிறார். அதற்கு ராஜி, "அப்படி எல்லாம் போக வேணாம்" என்று சொல்லி, கதிருக்கு ஆறுதல் கூறுகிறார். இப்படியாக, இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு முடிவடைகிறது.
-
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications