பாண்டியன் ஸ்டோர்ஸ்: "உன் மேல சந்தேகம்! துரோகியான மயில்! மிரட்டிய சரவணன்! இன்று நடந்த பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், தங்கமயில் தனது படிப்பு குறித்து பொய் சொன்னது சரவணனுக்கு ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது அவள் தன் உண்மையான வயதை கூட மறைத்திருக்கிறாளோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. தீபாவளி நாளில் நடந்த சலசலப்புகளுக்கு மத்தியில், சரவணன் மயிலிடம் ஆதார் கார்டை கேட்டு மிரட்ட, அவள் பதறியடித்து எஸ்கேப் ஆன பரபரப்பான திருப்பங்கள் இன்றைய எபிசோடில் அரங்கேறின.

செந்திலுக்கு அப்செட்
தீபாவளிக்காக மொத்த குடும்பமும் மீனா வற்புறுத்தலால் மாமனார் வீட்டிற்கு கூடி விடுகின்றனர். அங்கு பாண்டியன் நடந்துக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் செந்திலுக்கு அப்செட்டாக அமைகிறது. தீபாவளி ட்ரெஸ் வாங்கிக் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்கும் போதும் கூட, மீனா பெயரை மட்டும் சொல்லி பாண்டியன் ஆசிர்வாதம் வழங்குகிறான்.
உணவை ஒதுக்கிய சரவணன்
தீபாவளி விருந்தாக அமர்க்களமாக சாப்பாடு ரெடி செய்யப்பட, அனைவரும் உட்கார்ந்துச் சாப்பிட ஆரம்பித்தனர். அனைவரும் ஜோடியாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, மயில், "இது நான் செஞ்சது மாமா. நல்லா சாப்பிடுங்க" என்கிறாள். அதுவரை நல்லாச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சரவணன், மயில் சொன்னதும் அதை மட்டும் எடுத்து தனியாக வைத்து விடுகிறான். இதனால் அவள் பயங்கரமாக அதிர்ச்சியடைந்தாலும், எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறாள்.
தீபாவளியன்றும் வேலை
சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டுக்கு வெளியில் வைத்து வெடி வைக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது பழனி, சுகன்யாவிடம் சீர் வைக்கும்போது, "என் வீட்ல உள்ளவங்க சொன்னதை மறந்துட்டீங்களா?" என்று கேட்கிறான். பழனி உள்ளே போகும் போது, "உன்னைத்தான் கூப்பிடணும்னு இருந்தேன். நம்ம கடைக்கு ரொம்ப நாளா பணம் கொடுக்க வேண்டியது பக்கத்துல இருக்கு. நீ போய் பணத்தை வாங்கிட்டு வாடா" என்றுப் பாண்டியன் அவனை வேலைக்கு அனுப்புகிறான்.
பழனி முடிவு
இதனால் அதிர்ச்சியாகும் பழனி, சொல்ல வந்ததை பற்றிச் சொல்லாமல், பணம் வாங்குவதற்கு புறப்படுகிறான். அவன் போனதும் சுகன்யா, "தீபாவளி அன்னைக்கு கூட அவனை வேலைக்கு அனுப்புவீங்களா?" என்று பாண்டியனிடம் கேட்கிறாள். பின்னர், சுகன்யா பழனியிடம், "இந்த வீட்டிலயே நீங்கதான் இளிச்சவாயனா இருக்கீங்க" என்றுத் திட்டுகிறாள். இதனிடையில், ரூமில் இருக்கும் சரவணனிடம் மயில் வருகிறாள். இப்போது சரவணன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறான்.
திடீர் கேள்வி
அவளிடம், "உன்னோட ஆதார் கார்டு எங்க? கொஞ்சம் கொடு" என கேட்கிறான். இதனால் அதிர்ச்சியாகும் மயில், "எதுக்கு மாமா திடீர்ன்னு கேக்குறீங்க?" என்றுப் பதறுகிறாள். "நீ கிச்சன்ல பேசிட்டு இருக்கிறதைக் கேட்டேன். எனக்கு உன் வயசு மேல சந்தேகம் வந்திருக்கு. அதனால உன் ஆதார் கார்டைக் கொடு. என் சந்தேகத்தைத் தீர்த்துக்கிறேன்" என்கிறான். இதனால் அதிர்ச்சியாகும் மயில், "எங்க வெச்சேன் தெரியலை மாமா. எடுத்துத் தர்றேன். எனக்குப் பல வேலை கிடக்கு" என்று சொல்லி ரூமில் இருந்து எஸ்கேப் ஆகிறாள்.
இப்படி படிப்பு, இப்போது வயது என பொய் பேசுபவள் தனக்கு பொண்டாட்டியா வந்திருக்காளே என்று சரவணனின் சந்தேகம் மேலும் வலுவடைவதுடன், பயங்கரமாக நொந்து கொள்கிறான். கிச்சனுக்குள் வரும் மயில், "மாமாவுக்குச் சந்தேகம் வந்துருச்சே. எனக்கு மட்டும் பிரச்சனைக்கு மேல பிரச்சனை வருதே" என்றுப் புலம்புகிறாள்.
மாமனாரின் அழைப்பு
மற்றொரு பக்கம் செந்திலுக்குப் போன் பண்ணி அவனுடைய மாமனார், "என்ன மாப்பிள்ளை விருந்துக்கு வரச் சொன்னேன். நீங்க வரலை" என்று கேட்கிறார். "வீட்டில் எல்லாரும் இருக்கிறதால வர முடியலை மாமா" என்று செந்தில் சொல்ல, மாமனார் இப்போதும் கிளம்பி வரச் சொல்கிறார். செந்திலும், "சரி மாமா. அவ்வளவு தான. மீனாவை அழைச்சுட்டு வரேன்" எனச் சொல்லி உள்ளே வந்து அவளைத் தேடுகிறான்.
ஆனால், அங்கு கோமதி, ராஜியுடன் படுத்து மீனா தூங்கிக் கொண்டிருக்கிறாள். இதனால் செந்தில் மாமனார் வீட்டிற்கு போவானா, அல்லது மீனாவை எழுப்பி அழைத்து போவாரா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications