பாண்டியன் ஸ்டோர்ஸ்: சரவணனிடம் தெரிந்த மாற்றம்! பரிதாப நிலையில் மயில்.. பாண்டியன் திடீர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பிப்ரவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில், செந்தில் தன்னுடைய முன்னாள் காதலியுன் பேசுகிறார். அதே நேரத்தில் மீண்டும் பாண்டியன் கோபியை திட்டுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
(Pandian Stores 2 serial Feb 10, 2026)கதிர் - ராஜி ஷாப்பிங் சீன்களுடன் எபிசோட் தொடங்குகிறது. கதிர், ராஜிக்கு புடவை வாங்கிக் கொடுத்துவிட்டு, "ஒரு புடவை போதாது, இன்னும் நிறைய எடுத்துக்கோ" என்று சொல்லுகிறார். அதற்கு ராஜி, "எனக்கு ஒன்னே போதும்" என்று மறுக்கிறார். தொடர்ந்து கோமதி மற்றும் அரசிக்கும் ட்ரெஸ் வாங்கப்படுகிறது.

இதற்கிடையில் ராஜி, கதிரைப் பார்த்து, "உனக்கு ஒரு ட்ரெஸ்ஸும் எடுக்கலையா?" என்று கேட்கிறார். அதற்கு கதிர், வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ராஜி, "அதெல்லாம் கிடையாது, நான் ஷர்ட் வாங்கித் தர்றேன்" என்று சொல்லி தானாகவே ஒரு ஷர்ட் எடுத்துக் கொடுத்து வாங்கிக் கொடுக்கிறார்.
இதற்குப் பிறகு அஞ்சலி, சரவணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பேசத் தொடங்குகிறார். அதன்பின் இருவரும் மாறி மாறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் கோமதி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பழனி, சரவணனைப் பார்த்து, "கடையில வேலை எல்லாம் எப்படிப் போகுது?" என்று கேட்கிறார்.
அதனைத் தொடர்ந்து கோமதி, பழனியைப் பார்த்து மச்சான் உன்கூட பேசிட்டாரா? என்று கேட்க, "இனிமேல் நான் அவரை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்" என்று கோமதி சொல்லுகிறார். மேலும், "எனக்கும் அவருக்கும் வேற எதுவும் இல்ல. ஒரே வீட்டில் இருப்போம், அவ்வளவுதான்" என்று கோமதி கூறுகிறார்.
பிறகு பாண்டியன் வந்ததும் கதிர் போர் பண்ணுனானா? என்று சரவணனிடம் கேட்க அதற்கு கோமதி பதில் சொல்லி கொண்டே இருக்கிறார். இதனால் பாண்டியன் கடுப்பாகி திட்ட, இதைக் கேட்ட பழனி, பாண்டியனைப் பார்த்து, "அக்கா பாவம் மச்சான், அவங்களோட கதையும் அப்படிதான்" என்று சொல்லுகிறார். அதற்கு பாண்டியன், "இவள் பாவம் மாதிரி நடிச்சு குடும்பத்தையே ஏமாத்தி இருக்கா. இவள் பாவமா?" என்று கோபமாக கேள்வி கேட்கிறார்.
மறுபக்கத்தில் மயில் சாப்பிடாமல் இருக்க, அவரை தங்கச்சி சாப்பிட கூப்பிடுகிறார். அதை பார்த்து பாக்கியம், "எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பார்.. இங்க இருக்கவங்களுக்கே சாப்பாடு இல்ல, இவ புருஷன் வீட்டுக்கு போகாமல் இங்கே இருக்கா " என்று புலம்புகிறார். அதைக் கேட்ட மயில் தங்கச்சி, தப்பு பண்ணது நீதான் என்று பாக்கியத்தைப் பார்த்து சொல்கிறார்.
அதற்கு பாக்கியம் கோபமாக, "நான் என்ன செய்தேன்? அவளுக்கு புருஷனை கைக்குள்ள வைத்திருக்க தெரியாது" என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட மயில் அழுது கொண்டே ரூமுக்குள்ள போய்விடுகிறார். இதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications