பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகருக்கு ரெட் கார்டா? இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க! கோபத்தில் அவர் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் இன்னும் சின்னதிரை நடிகர் சங்கத்தில் சேரவில்லை என்று அவரிடம் அவருடைய நண்பர் ஒருவர் மிரட்டியதாக ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் ரவிச்சந்திரன் தான். ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாமல் வேறு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் இன்னும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சேரவில்லையாம் அது குறித்துதான் ரவிச்சந்திரன் கோபத்தில் பேசி இருக்கிறார்.
பொதுவாக சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் டப்பிங் பேசுபவர்கள் எல்லோருமே அதற்கான சங்கங்களில் சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது சங்கத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும் என்பதற்காகவே இது போன்ற சங்கங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகர்கள் சங்கங்கள் மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியால் அதில் சேராமல் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ரவிச்சந்திரன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்
இவர் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். நான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் உட்பட பல சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் இன்னும் நடிகர் சங்கத்தில் சேரவில்லையாம். இது குறித்து செய்தி தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சீரியல் நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட் கார்டு வாங்கிய நடிகை
ரவீனா விஜய் டிவியில் சிந்து பைரவி சீரியலில் கமிட் ஆகி இருந்தார். அந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகி விட்டார். இதனால் அவர் மீது புகார் கொடுத்திருந்ததால் சின்னத்திரை நடிகர் சங்கத்திலிருந்து ரவீனாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், சரவணன் மீனாட்சி போன்ற பல சீரியல்களில் நடித்த பிரபலமடைந்த நடிகர் ரவிச்சந்திரன் விஷயத்திலும் இந்த ரெட் கார்ட் பிரச்சனை ரவிச்சந்திரனை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சீரியல் நடிகர் ரவிச்சந்திரன்
இது பற்றி ரவிச்சந்திரன் பேசுகையில், ரவிச்சந்திரன் நண்பர் ஒருவர் போன் செய்து நீங்க சீனியர் நடிகராக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் இருக்கிறீர்கள், சீக்கிரமாக சங்கத்தில் சேருங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ரவிசந்திரன் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு நிறைய பிரச்சனை இருக்குது. ஆனால் அந்த சங்கங்களில் இருந்து கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாவது உருப்படியா செஞ்சிருக்காங்களா? எனக்கு அவங்க மேல நம்பிக்கை இல்ல.
ரெட் கார்டு பிரச்சனை
சீரியலில் ஹீரோவாக நடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அண்ணன், அப்பா கேரக்டருக்கு கூட உள்ளூர் ஆர்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு தராமல் பக்கத்து மாநிலங்களில் இருந்து நடிகர்கள் நடிகைகளை கூட்டிட்டு வர்றாங்க. இந்த நிலைமையை மாற்ற சங்கங்களில் இருந்து ஏதாவது செய்யட்டும் அப்புறம் நான் உறுப்பினராவது பற்றி யோசிக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு அவருடைய நண்பர், "நீங்க இந்த மாதிரி பேசிட்டு இருந்தா ரெட் கார்ட் கொடுத்துடுவாங்க... தேவையில்லாமல் சிக்கலில் சிக்காதீங்க" என்று சொல்லி இருந்தாராம்.
ரவிச்சந்திரன் ஆதங்கம்
உடனே ரவிச்சந்திரன், "நீங்க ரெட் கார்டு தானே தாராளமா தாங்க. நான் சட்ட நடவடிக்கை மூலமாக அதை பார்த்துக்கிறேன். உங்களுக்கு ஒரு சட்டம் இருக்கும்போது அது என்னை கட்டுப்படுத்தாது இந்திய குடிமகனா எனக்கு பிடிச்ச எந்த ஒரு வேலையும் செய்ய உரிமை இருக்கு"ன்னு பேசினாராம். உடனே எதிர் பக்கத்தில் அவருடைய நண்பர் போனை கட் பண்ணி விட்டாராம். இது பற்றி ரவிச்சந்திரன் நடிகர் சங்கத்தில் சேரவில்லை என்றால் ரெட் கார்டுங்குறது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications