நடிகர் சிம்பு உறவினர் வீட்டில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம்.. இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது மூன்றாவது வீடு மாறியிருக்கின்றனர். அது நடிகர் சிம்புவின் உறவினர் வீடு என்று இந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா தெரிவித்திருக்கிறார்.
சீரியல் பற்றி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை ஹேமா தற்போது யாருக்கும் தெரியாத பல ரகசியங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஹேமா வெளியிட்ட வீடியோவில் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் வீடு கூட ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆரம்பத்தில் இருந்த சீரியலில் பெரிய தூண்கள், திண்ணை உடன் கூடிய வாசல் வீட்டிற்கு நெடுவில் முற்றம் வெளியே தோட்டம் என பார்ப்பதற்கு அந்த கால பாரம்பரிய செட்டிநாடு வீட்டை போல இருக்கும்.
பிறகு பாண்டியன் ஸ்டோர் குடும்பம் தாங்கள் தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். கதிர் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மொத்த குடும்பமும் குடி பெயர்ந்து இருந்தனர்.இப்போது மீண்டும் அந்த வீட்டில் இருந்து புது வீட்டிற்கு புதுமனை விழா கொண்டாடி குடி பெயர்ந்து இருக்கின்றனர். அந்த வீடு இசிஆரில் உள்ளதாம். அந்தப் புது வீடு பற்றியும் அங்கு நடக்கும் சூட்டிங் பற்றியும், அந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நான் இன்னைக்கு உங்க எல்லாரையும் பாண்டியன் ஸ்டோர் செட்டுக்கு கூட்டிட்டு போறேன். இதோட நம்ம மூணாவது வீடு மாற்றி இருக்கிறோம். சீரியல் ஆரம்பிக்கும்போது செட்டிநாடு வீடு இருந்தது. அப்புறம் வேறொரு வீட்டுக்கு போனோம். இப்போ புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணிட்டு வந்திருக்கோம். இந்த வீடு ஈசிஆர் ல இருக்கு ரொம்ப தூரம் தினமும் ஏதோ ஒரு ஊரை விட்டு போயிட்டு வர மாதிரி இருக்கு.
அங்கு வீடு எப்படி இருக்குன்னு நீங்க எபிசோட்ல பார்த்திருப்பீங்க. முதல் நாள் அங்க போகும்போது என்னடா இது பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும் இந்த வீட்டுக்கும் செட்டாகாத மாதிரி இருக்குணு நான் யோசித்தேன். நான்கு தூணுக்குள் உட்கார்ந்து தான் நம்ம கதையே பண்ணுவோம். இங்க எல்லாம் பெருசா இருந்தது.
ஆனா போக போக சரியாயிடும் என்று நினைக்கிறேன். அதுபோல இது சிம்பு அம்மாவோட தங்கச்சி லொகேஷன். அவங்களோட சூட்டிங் ஹவுஸ்தானாம் என்றுதான் சொன்னாங்க வெளில. ஒருத்தங்க சிம்பு அம்மா மாதிரியே இருந்தாங்க. எனக்கு சரியா தெரியல இங்க தானே இருக்க போறோம் போக போக பார்த்துக்கலாம் என்று பல தகவல்களை அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications