Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷ்ணுகாந்த்-சம்யுக்தா பிரச்சனைக்கு காரணம் பாண்டியன் ஸ்டோர் நடிகையா..?வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்கின்றனர்.

இதற்கு காரணம் பெண் நடிகை ஒருவர்தான் என்று விஷ்ணுகாந்த் குற்றசாட்டு வைத்திருந்தார்.

அது பாண்டியன் ஸ்டோர் நடிகை தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Pandian Stores actress lavanya the cause of Vishnukanth-Samyukta problem?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது சுமார் ஏழு மாதங்களாக காதலித்து வந்த நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் முடிந்து அடைந்தது. திருமணம் முடிந்து15 நாட்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடால் அடிக்கடி பிரச்சினைகளும் சண்டைகளும் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது இந்த சின்னத்திரை தம்பதிகளில் குடும்ப பிரச்சனை தான் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தன்னை விட்டு கடைசியாக சம்யுக்தா விலகிப் போனதற்கு காரணம் அவரோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகையோடு நான் பேசக்கூடாது என்று சொன்னேன் அதுதான் என்று விஷ்ணுகாந்த் ஆரம்பத்தில் கூறியிருந்தார். எங்களுடைய திருமணத்திற்கு முன்பு அந்த நடிகை சம்யுக்தாவிடம் அதிகமாக உரிமை எடுத்து பழகுவது குறித்து சம்யுக்தாவே அவர் ஒரு ஆண் மாதிரி என்னிடம் கிஸ் பண்ணுகிறீர்கள் கட்டிப்பிடிக்கிறார் என்று கூறி இருக்கிறார் என விஷ்ணுகாந்த் கூறியிருந்தார்.

பிறகு சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருக்கும் நிலையிலும் அந்த நடிகை தான் தலையிட்டு பிரச்சனையை பெரிது பண்ணிவிட்டார். அதனால் அந்த நடிகையோடு பேசக்கூடாது என்று நான் கூறினேன். ஆனால் சம்யுக்தா கேட்கவில்லை இறுதியாக நான் வேணுமா அந்த நடிகை வேணுமா என்று நான் கேட்கும் போது எனக்கு அவர்தான் வேண்டும் என்று கூறிவிட்டார். இதை எப்படி ஒரு கணவரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று விஷ்ணுகாந்த் அப்போது கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கொடுத்திருந்த சம்யுக்தா அவர் என்னுடைய தோழி. எல்லா பெண்களிடமும் எப்படி பழகுவாரா அப்படித்தான் என்னிடமும் பழகினார். நான் எந்த தப்பான எண்ணத்திலும் அவரிடம் சொல்லிக் கொடுக்கவில்லை. அதுபோல அந்த நடிகையின் பெயரை சொல்லி இருந்தால் வேற மாதிரி பிரச்சனை போயிருக்கும். அவருக்கு இருக்கிற ரசிகர்களின் பற்றி இவருக்கு தெரியாது. அவர் எவ்வளவு பிரபலம் என்பது இவருக்கு தெரியாது என்றெல்லாம் லைவில் கூறியிருந்தார்.

Pandian Stores actress lavanya the cause of Vishnukanth-Samyukta problem?

இந்த நிலையில் சம்யுக்தா விஷ்ணுகாந்த் உடன் பேசிக் கொண்டிருக்கும்போது கூட வேற நபரிடமும் பேசி இருந்தார் என்று சில ஆடியோக்களையும் விஷ்ணுகாந்த் தொடர்ச்சியாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இவர்களின் பிரச்சினைக்கு காரணமாக இருந்த அந்த நடிகை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்கும் லாவண்யா தானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காரணம் சிற்பிக்குள் முத்து சீரியலில் லாவண்யாவும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனால் அவராகத்தான் இருக்குமோ என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் லாவண்யா ஒரு போல்டான பெண் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அவருடைய இன்டர்வியூல் கூட அவர் துணிச்சலாக தனக்கு எதிராக நடந்த பல மிஸ் பிஹேவியர்கள் பற்றி கூறியிருந்தார். அதனால் இந்த மாதிரி யாராவது வதந்திகளை பரப்பி விடுவார்கள் என்று லாவண்யாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+