கண் கூசும் அளவுக்கு ஆபாச மெசேஜ்! 13 வயசு பையன் செய்த காரியம்! நடிகைக்கு தொந்தரவு! விஜே ஐஸ்வர்யா கிரேட்
சென்னை: விஜய் டிவி-யில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த நடிகை விஜே ஐஸ்வர்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஷயம் சமூகத்தில் பெரும் யோசனையை உருவாக்கியுள்ளது. சின்ன பையன்கூட சமூக வலைதளங்களில் எந்த அளவு மோசமாகப் பழகுகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது.

நடுங்கவைத்த 9-ம் வகுப்பு பையன்
நடிகை ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டு இருந்தபோது, ஒரு ஐடி-யிலிருந்து தொடர்ந்து ஆபாசமான செய்திகள் வந்து கொண்டே இருந்துள்ளது. "நான் உனக்கு ரூம் போட்டுத் தருவேன், அப்படி பண்ணுவியா, இப்படி பண்ணுவியா" என்று மிகவும் அநாகரீகமாகச் செய்திகள் வந்ததாம்.
அதிர்ச்சி தகவல்
உடனே அந்த ஐடி பற்றி விவரம் எடுத்தபோது, அந்த ஐடியை வைத்திருந்த பையன் வெறும் ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்புதான் படிப்பான் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. அவ்வளவு சின்னப் பையன் இப்படிப் பேசுவதைப் பார்த்துக் அவருக்கே அதிர்ச்சியாகிவிட்டது.
"ஒரு சின்னப் பையனுக்கு கையில் செல்போன் இருக்கிறது, அவன் இந்த அளவுக்குச் சமூக வலைதளங்களில் ஆபாசமா செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான் என்பது பெற்றோருக்குத் தெரியுமா இல்லையா? அவர்கள் இதையெல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு இருக்கிறார்களா?" என்று யோசிக்கும்போது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது என்று ஐஸ்வர்யா வேதனையோடு சொல்லியிருக்கிறார்.

பையனின் பதற்றம்
உடனே ஐஸ்வர்யா, அந்த பையனுடைய செய்திகள், அவனைப் பின்பற்றுபவர்கள் விவரம் எல்லாவற்றையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிட்டு, "தம்பி, நான் உன்னோட விவரங்களை எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போடவா?" என்று கேட்டிருக்கிறார். உடனே பயந்துபோன அந்தப் பையன், "ஐயோ அப்படி பண்ணிடாதீங்க, இது என்னைோட நண்பனோட ஐடி, அவனுடைய அக்காவுக்கெல்லாம் அனுப்பிடாதீங்க, அவன் கொன்னே போட்டுருவான் என்று பதறிவிட்டு பிறகு என்னை அன்பாலோ பண்ணிட்டு அந்த ஐடியையும் டெலிட் பண்ணி இருக்கான் சொல்லியிருக்கிறார்.
நாளை தலைமுறையை பாதுகாக்க என்ன வழி
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இதுபோல இளைஞர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கும். பெண்களுக்கு மட்டுமல்ல, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் மத்தியில் இந்த மோசமான மனநிலை வளர்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதிகமான வன்முறை மற்றும் ஆபாசமான வீடியோக்கள், திரைப்படங்களை பார்ப்பது, பெற்றோரின் கவனிப்புக் குறைவது, பொழுதுபோக்கிற்காக என்ற பெயரில் ஆபாச பக்கங்களை நாடிச் செல்வது போன்றவை முக்கியக் காரணங்களாக இருக்கிறது.
நாளைத் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டுமானால், பெற்றோர்கள் அவசியம் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். என்னென்ன தளங்களை பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கலாம். சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பிள்ளைகளுக்குச் சரியான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் தங்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பயப்படாமல் பெற்றோரிடம் பேசும் அளவுக்குத் திறந்த மனப்பான்மையுடன் பழக வேண்டும். சின்னப் பையன்கூட இப்படி செய்திருக்கிறார் என்ற விஷயம் உண்மையிலேயே யோசிக்க வைக்கிறது. குழந்தைகள் சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக பயணிக்க பெற்றோரின் கவனம் அவசியம்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications