Pandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோரோனோவைரஸ் பீதி...ரொமான்ஸ் இல்லாம வறண்டு போயி கிடக்குது. ரசிகர்கள் ஹாட் ஸ்டாரில் பழைய ரொமான்ஸ் காட்சியை தேடித் தேடி பார்த்து ஓய்ஞ்சு போயிட்டாங்க.
அதுக்குன்னு இப்படியா? ரொமான்ஸ்தான் இல்லேன்னாலும்... பீதியை வேற கிளப்பிவிட்டாங்கய்யா...
முல்லைக்கு ஒன்னும் இருக்க கூடாதுன்னு குன்னக்குடி முருகன் கிட்டே வேண்டிக்கிட்டு இருக்காங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் தீவிர ரசிகர்கள்.

காரைக்குடி ஷூட்டிங்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் காரைக்குடிதான். இந்த சீரியலின் ஹைலைட் முல்லை கதிர் ரொமான்ஸ்தான். கொஞ்ச நாளாவே சீரியலில் அது மிஸ்ஸிங். சரி.. அதிருக்கட்டும்னு இருந்த வேளையில், முல்லையும் கதிரும் சென்னைக்கு போறதா இருந்துச்சு. சரி.. ரொமான்ஸுக்கு பஞ்சம் இருக்காதுன்னு ரசிகர்கள் குஷியில் இருந்தாங்க.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பயத்துல ஊரடங்கு உத்தரவு போட்டதில் சென்னை ட்ரிப் சீரியலிலும் கேன்சல் ஆயிருச்சு. ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஒரு வழியா ரசிகர்கள் சமாதானம் ஆகி இருந்தாலும் முல்லைக்கு தும்மல் வந்ததும் ரசிகர்கள் பக்குன்னு ஆயிட்டாங்க.

குன்னக்குடி முருகன்
முல்லைக்கு தும்மல் வந்துருச்சு.. அவ தும்மல் போட்டதும் பயந்து தானே தன்னை தனிமைப் படுத்துகிட்டு பெட் ரூமில் உட்கார்ந்துட்டா. விவரம் கேட்ட கதிர் கொஞ்சம் பயந்து போயிட்டான். இதை விட ரசிகர்கள் முல்லைக்கு கொரோனாவைரஸ் வந்துட கூடாதுன்னு குன்னக்குடி முருகனுக்கு வேண்டுதல் வைக்கிறாங்களாம்.

கதிர் முல்லை ரொமான்ஸ்
சும்மா சொல்லலை.. கதிர் முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள். ஆன்னா ஊன்னா ஹாட் ஸ்டாரின் இவங்க ரொமான்ஸ் காட்சியை பார்த்துதான் ரசிக்கிறார்கள். முதலுக்கே மோசம் வந்துடப் போகுதுன்னு கதைப்படி கூட முல்லைக்கு கோரோனோவைரஸ் தாக்க கூடாதுன்னு வேண்டிக்கறாங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications