Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores Serial: என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. அண்ணன் தம்பியை மறந்துட்டானா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Pandian Stores Today full episode | Kathir Mulla Romantic Song

    சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாமனார் வீட்டுக்கு போன ஜீவா அண்ணன் மூர்த்திக்கு போன் பண்ணவே இல்லையாம். ஜீவா நம்மை எல்லாம் மறந்துட்டாண்டான்னு சொல்லி கண் கலங்கறார். கதிர்தான் அண்ணனை கட்டிப்பிடிச்சு ஆதரவு சொல்றான்.

    தனமும் என்ன முல்லை மாமனார் வீட்டுக்கு போன ஜீவா நம் எல்லாரையும் மறந்துட்டான் போலன்னு சொல்லி வருத்தப்படறா. அக்கா வந்துருவாக அக்கா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதியன்னு முல்லை ஆறுதல் சொல்றா.

    கடைக்குட்டி கண்ணன் அண்ணி தனத்திடம் எக்குத்தப்பா சொல்லி, மாட்டிக்கறான். கன்னத்தில் செல்லமா அடி கூட வாங்கிக்கறான். இவ்வளவு ஏன்.. உனக்கு கல்யாணமே கிடையாதுடான்னு அண்ணி தனம் வாயால் வார்த்தை வாங்கி நொந்து போறான்.

     ஜீவா மீனா

    ஜீவா மீனா

    காதல் கல்யாணம் செய்துக்கொண்டதில் மகளைப் பிடிக்காமல் இருந்த ஜனார்த்தனன், மகள் உண்டாகி இருக்கிறாள் என்றவுடன் மனம் மாறி பெண்ணை பார்க்க வருகிறார். வந்தவர் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்துப் போகிறார். முதலில் போக மனம் இல்லாமல் இருந்த ஜீவாவை கட்டாயப்படுத்தி, ரெண்டு நாள் தானேடான்னு சொல்லி அண்ணனும், அண்ணியும் அனுப்பி வைக்கறாங்க. மீனா சந்தோஷமாக ஜீவாவுடன் கிளம்புகிறாள்.

     போன ஜீவா

    போன ஜீவா

    என்ன முல்லை... ரெண்டு நாளாச்சு.. ஜீவா ஒரு போன் கூட பண்ணலைன்னு தனம் வருத்தமாக பேச, என்னக்கா நீங்க.. இந்தா இருக்கற வீட்டுக்குத்தானே போயிருக்காக... வந்துருவாக அக்கா.. போன் பேசலைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதியன்னு ஆறுதல் சொல்றா முல்லை. அண்ணி ஜீவா அண்ணன் வீட்டோட மாப்பிள்ளையா அங்கேயே இருந்துட்டா என்ன செய்வீங்க அண்ணின்னு கேட்கறான் கடைக்குட்டி கண்ணன்.

     கண்ணா கிட்டே வாடா

    கண்ணா கிட்டே வாடா

    ம்ம்ம் கண்ணா கிட்டே வாயேன்னு தனம் கூப்பிட, என்ன அண்ணி.. செல்லமா கொஞ்ச போறீங்களான்னு கேட்டுகிட்டே கிட்டே வர்றான். கன்னத்தில் ஒரு அடி விட்டு, இனொரு தடவை இப்படி பேசினே..இன்னும் வேகமா அடி வாங்குவேன்னு தனம் சொல்றா. அடி கேட்டு வாங்கறான் பாருங்கக்கா என்று முல்லை சொல்ல, கன்னத்தை தடவியபடியே தள்ளி உட்கார்ந்துக்கறான் கண்ணன்.

     கிடையாது கல்யாணம்

    கிடையாது கல்யாணம்

    ஏன்.. அண்ணி, நான் கல்யாணம் செய்துகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டா என்ன பண்ணுவீங்கன்னு மறுபடியும் ஒரு கேள்வி கேட்கறான். ஓ.. அப்படியா? உனக்கு கல்யாணமே கிடையாதுன்னு சொல்லிட்டு எழுந்து போயிடறா முல்லை. அண்ணி.. அண்ணி என்று கண்ணன் அழைக்க தேவையாடா உனக்கு என்று சொல்கிறாள் முல்லை.

     மரியாதை பரிவட்டம்

    மரியாதை பரிவட்டம்


    மூர்த்தியும், என்னடா ஜீவா போயி ஒரு போன் கூட பண்ணலை. நம்மை எல்லாம் மறந்துட்டான் போல இருக்குடா என்று கண் கலங்க.. அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காதுண்ணே என்று கதிர் ஆறுதல் சொல்றான். மீனா அப்பாவோ, மாப்பிள்ளை, பெண்ணை கோயிலுக்கு அழைச்சுட்டு போறார். அங்கு தனக்கு ஐயர் கட்ட வந்த பரிவட்ட மரியாதையை மாப்பிள்ளைக்கு செய்ங்க என்று சொல்லி, இனிமே இவர்தான் என் மூத்த பிள்ளை என்றும் சொல்கிறார்.

    இப்படி பாசக் கூட்டுக்குள் சில நிதர்சனங்கள் புகுந்து விளையாட்டு காட்டுவதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையாக சென்றுக்கொண்டு இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+