விசுக்குன்னு கிளம்பிருச்சே.. இந்த மீனாவை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடியலையே.. !
சென்னை: இந்த பாண்டியன் ஸ்டோர் மீனாவே கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடியலையே திடீரென இப்படி மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் புலம்புகிறார்களாம்.
விஜய் டிவியில் புதுசு புதுசாக எத்தனை சீரியல்களை அறிமுகப்படுத்தினாலும் பாண்டியன் ஸ்டோர் க்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன.
இந்த சீரியலில் திடீரென்று முறையாக நடித்த சித்ரா இறந்துவிட்டதால் அவரது கேரக்டரில் இனி யார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முல்லையாக மாறிய காவ்யா
பிறகு இந்த சீரியலில் காவியா, முல்லையாக ஒரு அறிமுகம் ஆனார். இதையடுத்து அந்த செய்தி அப்படியே அடங்கி விட்டது. ஆனால் இப்போது தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தி. இதை வைத்தே ஒரு மாசம் போட்டு விட்டாலும் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீட்டில் இருப்பவர்களுக்கு தனத்தின் கர்ப்பம் தெரிந்துவிட்டது.

மீனாவின் மாற்றம்
ஆனால் அதை மீனா எப்படி ஏற்றுக் கொள்வார் என்று தான் பல்வேறு ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று வெளியிட்டிருக்கும் ப்ரமோவில் மீனா இப்படி மாறுவார் என்று எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

குடும்பக் கதை
இந்த சீரியல் பல சீரியல்களில் திரைப்படம் போல வழக்கமான குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுத்திருந்தாலும் இதில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருக்கிறது. அந்த வீட்டின் மூத்த மருமகளாக தனம் கேரக்டரில் நடிக்கும் சுசித்ராவின் நடிப்பு அனைவருக்குமே பிடித்தது தான்.

அனுபவம் வாய்ந்த தனம்
ஏனென்றால் இவர் சின்னத்திரையில் இளவரசியாக பலகாலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார். மூன்றாவது மருமகளாக மீனாவின் கர்ப்பமாக இருக்கிறார் என்னும் செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து அவரை முழுமையாக கவனித்துக் கொண்டு அவரது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மாசமாக இருக்கும் தனம்
தற்போது இந்த சீரியலில் தனம் மாசமாக இருக்கும் சீனிலும் செமையாக எக்ஸ்பிரஷன் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார் .இவர் மாசமாக இருப்பதை யாருக்கும் சொல்லாமல் இவர் தனியாகவே மனதிற்குள் போட்டு கவலையும் சந்தோஷமும் பட்டு கொண்டிருந்ததால் மீனா அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போய்விட்டார்.

குழந்தைப் பேறு
மீனா இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகுதான் தனம் தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லி இருக்கிறார். தற்போது இந்த சீரியலின் சுவாரசியமே இவரின் நீண்ட நாளுக்கு பிறகு இவர் மாசமாக இருப்பதுதான். இது சீரியலாக இருந்தாலும் பல பெண்கள் மற்றும் பெரும் ரசிகர்கள் இணையதளங்களில் இவர் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வார் என்று தான் கமெண்டுகளை போட்டு வந்தனர் .

கர்ப்ப செய்தி
தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் செய்தி இப்ப தான் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இந்த செய்தியை கேட்டு அண்ணன் தம்பிகள் அனைவரும் சந்தோஷமடைந்தாளும் இந்த சந்தோசமான விஷயத்தை மீனாவிடம் சொல்வதற்காக கண்ணன் மீனாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை கொஞ்சி உனக்கு ஒரு குட்டி பாப்பா விளையாட வரப்போகிறது என்று மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

முல்லை
அப்போது கூட மீனா கோபத்தோடு தான் என்ன முல்லை மாசமாக இருக்கிறாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு இல்லை தனம் அண்ணி கர்ப்பமாக இருக்கிறார் என்று கண்ணன் சொன்னதும் உண்மையான சந்தோஷத்தோடு மீனா தனத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு கண்ணனுடன் பைக்கில் வந்துவிட்டார் .அதுவும் பைக்கை மீனாவே ஓட்டிவிட்டு கொண்டு வந்திருக்கிறார் .

பைக்கை எடுத்த மீனா
இதை பார்த்த தனம் முதல் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கின்றனர் .இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது இதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த மீனாவின் கேரக்டரை கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முடியவில்லை .

நல்லா இருக்கார்.. !
ஒருநாள் நல்லவராக இருக்கிறார் ஒருநாள் அப்படியே வில்லியாக மாறிவிடுகிறார். பிரச்சினை என்று வந்ததும் வரிந்துகட்டிக்கொண்டு நல்லவராகவும் வந்துவிடுகிறார் வில்ல தனமும் பண்ணுகிறார். அன்னியன் விக்ரமை மிஞ்சி விடுவார் போல என்று இவருக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications