Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க.. நம்ம மீனாவா இப்படி பண்ணப் போறாங்க... வாவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப் படுத்துவதிலும் சரி இப்ப இருக்கிற இளைஞர்கள் மத்தியில் என்ன தேவை என்பதை நன்றாகவே புரிந்து தங்களது டிஆர்பியை கூட்டி கொள்வதில் கவனமாக இருக்கிறது விஜய் டிவி.

தற்போது கையில் எடுத்திருக்கும் வழிமுறையும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர்கள் ஒரு புது முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

இதுவரையிலும் யாரும் செய்யாததை இவர்கள் முதலில் செய்வதால் அனைத்து ரசிகர்களும் இது எப்படி சாத்தியம் என்று இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சன்னை முந்திய விஜய்

சன்னை முந்திய விஜய்

சீரியல்களில் டி ஆர் பில் எப்போதுமே சன் டிவி தான் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் . தற்போது அதை அடித்து தள்ளி விட்டு விஜய் டிவியில் சீரியல் எல்லாமே போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்ட அனைவருமே ரசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கிராமப்புறப் பகுதியில் மட்டும் அல்லாமல் நகரப் பகுதிகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நன்றாகவே பதிந்து விட்டார்கள். எல்லா டிவி சேனல்களிலும் டிஆர்பியை கூட்டுவதில் கவனமாக இருக்கிறது. ஆனால் அதில் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கும் விஜய் டிவி தற்போது ரசிகர்களின் மனநிலையை புரிந்து அதற்கு ஏற்ப போல கதையை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மீனாவின் வளைகாப்பு

மீனாவின் வளைகாப்பு

பாண்டியன் ஸ்டோர் சீரியல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மீனாவின் வளைகாப்புவை தடபுடலாக நடத்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அதுபோல அந்த சீரியலில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பது போல காட்டியிருக்கிறார்கள். உண்மையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால் பிறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

ரீ என்ட்ரி தரும்

ரீ என்ட்ரி தரும்

பல ரசிகர்களும் மீனா எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியலில் முதலில் கொஞ்சம் கோவக்கார வில்லியாக காட்டப்பட்ட மீனா தற்போது ரசிகர்களின் மனதில் பாசக்கார செல்ல மருமகளாக மாறிவிட்டார். தொடர்ந்து இவர் நடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இவர் இந்த சீரியலில் காணாது அவருடைய ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள்.

புத்தம் புதுசு

புத்தம் புதுசு

அதனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் அவரை நடிக்க வைக்கலாம் என்று விஜய் டிவியிலிருந்து ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்கள். எல்லோரும் இந்த லாக் டவுன் காலங்களில் வொர்க் பிரம் ஹோம் வேலை பார்த்தது போலவே இவரும் வீட்டிலிருந்தே நடிக்கப்போகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். இவருடைய போஸ்டை பார்த்ததும் பல ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

குட்டிப் பையன் நல்லாருக்கானா

குட்டிப் பையன் நல்லாருக்கானா

குழந்தை பிறப்பதற்கு முன்பு இவரிடம் பலரும் இந்த சீரியலில் தொடர்ந்து நீங்கள் நடிப்பீர்களா என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். இப்போது இவர் தொடர்ந்து நடிப்பதற்காக எந்த சூழ்நிலையில் இருந்தாலும் வேலையை நேசிக்கும் ஒருவரால் வேலை செய்ய முடியும் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறதாம் .பையன் எப்படி இருக்கிறான் என்று பாசமாக கேட்டுக் கொண்டிருந்தாலும் சிலர் திரைக்கு எப்போது வருவீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செல்லச் சண்டை தொடரும்

செல்லச் சண்டை தொடரும்

யாரு என்ன சொன்னாலும் சீரியல் படப்பிடிப்பையே வொர்க் பிரம் ஹோம்மாக மாற்றியிருப்பது விஜய் டிவியின் புது முயற்சி என பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள் .இனி மீனா ஜீவா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும் இவர்களின் செல்லச் சண்டையை இனி பார்க்கலாம் .இந்த சீரியலில் கதிர் முல்லை இருக்கும் ரசிகர்களைப் போலவே ஜீவா மீனாவுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இந்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+