பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனாவிடம் நறுக்குன்னு பாண்டியன் கேட்ட கேள்வி! ஆடிப்போன செந்தில்.. உடையும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜூலை 7ஆம் தேதிக்கான எபிசோடில், செந்தில் லஞ்சம் கொடுத்து தான் வேலை வாங்கினார் என்ற உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது? அதனால் பாண்டியன் செந்திலிடம் கேட்ட கேள்வியை பார்த்து மீனா அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores Vijay TV

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு இனிமேல் சரவணன் தான் கடைக்கு போக போறாரு போலாமா என்று சொல்ல, அது நல்ல முடிவுதான். நீ இனிமே அந்த கடையை உங்களுக்கு எழுதி வாங்கிக்கனும் என்று அம்மா திரி கொடுக்க, என்னம்மா சொல்ற? என்று தங்கமயில் கேக்க,

அதற்கு மாப்பிள்ளை கடைக்கு போய் அங்க உன்னுடைய மாமனாரை நம்பிக்கை சம்பாதிச்சி அவரை வீட்டில் உட்கார வைக்கணும். அதுவும் இல்லாம நீ வீட்டில் நடந்திருக்கிறதை பார்த்து உனக்கு வீட்டையும் உங்க மாமா எடுத்து தரணும். அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க என்று சொல்லிக் கொடுக்கிறார். அதற்கு தங்கமயில் என்னம்மா நீ பேசுற, இந்த வீடு கடை எல்லாமே அஞ்சு பேருக்கு உரிமை உள்ளது என்று சொல்கிறார்.

பெரிய செலவு செய்து கட்டிக் கொடுத்த பொண்ணுக்கும், ஓடிப்போன பொண்ணுக்கும் சொத்து கொடுக்கணுமா? என்று கேட்க, அதற்கு தங்கமயில் அப்படி பார்த்தாலும் மூணு பேருக்கு உரிமை இருக்கே என்று கேட்க அதான் செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருக்கு, கதிர் கடைக்கு வரது கிடையாது அப்புறம் உன் மாப்பிள்ளை மட்டும் தானே கடையில் வேலை பார்க்கிறார் அதனால அவருக்கு தான் கொடுக்கணும் என்று ஏத்தி விடுகிறார்.

அதற்கு தங்கமயில் சும்மா இருமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சரவணன் வந்ததும் போனை வைத்து விடுகிறார். அப்போது சரவணன் என்ன செய்ற என்று தங்கமயில் இடம் கேட்க நான் தான் கஷ்டப்பட்டு சமைச்சேன் என்று தங்கமயில் பீல் பண்ணி சொல்கிறார். ஆனால் சரவணன் பெருசாக தங்கமயிலிடம் பேசாமல் அங்கிருந்து போய் விடுகிறார். அடுத்த நாள் காலையில் செந்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியன் வேலைக்கே போகல அதுக்கு முன்பு இந்த கனவு தேவையா என்று திட்டுகிறார்.

அப்போது மீனாவின் அப்பா வந்ததும் அவரை வரவேற்று வீட்டில் உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாண்டியன் செந்திலுக்கு வேலை வாங்கி கொடுத்ததற்காக நன்றி சொல்கிறார். அதற்கு மீனாவின் அப்பா நான் வேலை வாங்கி கொடுத்தது கூட பிரச்சனை இல்லை, நீங்க பத்து லட்சம் வரை தேற்றி கொடுக்கும் வர அந்த வேலையை தக்க வைப்பது தான் பிரச்சனையா போச்சு. நல்லவேளை நீங்க ரெடி பண்ணி கொடுத்துட்டீங்க. இல்லனா நான் தான் கொடுத்து இருப்பேன் என்று சொன்னதும் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர்.

பிறகு மீனாவின் அப்பா அங்கிருந்து போனதும், பாண்டியனை செந்தில் திட்டி திட்டுகிறார். பிறகு 10 லட்சம் பணம் எப்படி வந்துச்சு வீட்டு பத்திரத்தை அடகு வச்சியா? என்று கேட்க, அதற்கு செந்தில் உண்மையை சொல்ல வரும்போது மீனா 10 லட்சம் பணத்திற்கு நான் தான் ஆபீஸில் லோன் போட்டுக் கொடுத்தேன் என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான பாண்டியன் நீங்களே இவ்வளவு பெரிய முடிவுகளை எடுக்கும்போது அப்ப நாங்க எதுக்கு இருக்கோம் என்று திட்டி விட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். மீனா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+