பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய பிறகு வசந்த் வசி வெளியிட்ட போஸ்ட்..புது செந்தில் செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிகர் வசந்த் வசி நடித்து வந்தார். அவர் கடந்த வாரத்தோடு இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதற்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியதல்ல. திரைப்படங்களைப் போல அல்லாமல் சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சிலருக்கு அடுத்த வாய்ப்பு இதைவிட பெஸ்ட் ஆக வரும்போது சீரியலை விட்டு விலகி விடுகிறார்கள். ஒரு சிலர் உடல் நிலை பிரச்சனை அல்லது சீரியல் தரப்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விலகி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் இருந்து நடிகர் வசந்த் வசி விலகி விட்டதாக செய்திகள் பரவி வந்தது.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் சீசனின் அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் உடனே தொடங்கப்பட்டது.
அதிலும் இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் கதையை மையப்படுத்தி இருந்து வருகிறது. கூட்டு குடும்பம் மற்றும் அதில் வரும் பிரச்சனைகள், காதல், மோதல் என்று இந்த சீரியலில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பது ரசிகர்களை இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அதனாலயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வசந்த் வசி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருடைய கேரக்டரில் செந்தில் ஆக நடிகர் வெங்கட் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்திருந்தார். மீனா மற்றும் ஜீவாவிற்கு அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் உண்டு. அதனால் இணையத்தில் இவர்கள் இருவருக்கும் பேன்ஸ் பேஜ் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் மீனாவாக ஹேமா நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் அதே பழைய வெங்கட் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருடைய காம்போவால் இனி டிஆர்பி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு பிறகு வெங்கட் விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் வெங்கட் இந்த சீரியலில் செந்தில் ஆக அறிமுகமானதும் கதையும் மாறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு வசந்த் வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அதிலும் அவருடைய புகைப்படத்திற்கு நடிகர் வெங்கட் ரங்கநாதனும் லைக் கொடுத்து இருக்கிறார். அந்த போஸ்டில் கூட அதிகமான ரசிகர்கள் உங்களை நாங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிஸ் பண்ணுகிறோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications