ஜீவாவை அவமானப்படுத்தும் முல்லை அம்மா.. நகைக்கடையில் கடன் வைக்கும் ஐஸ்வர்யா.. கண்ணனுக்கு வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவா கார் விஷயமாக கேள்வி கேட்டதை வைத்து மீண்டும் முல்லை அம்மா ஜீவாவை அவமானப்படுத்துகிறார்

முல்லையின் வளைகாப்புக்காக செய்ய வேண்டும் என்று ஐஸ்வர்யா கிரெடிட் கார்டு மூலமாக நகைகளை வாங்குகிறார்.

முல்லையின் வளைகாப்பை நிறுத்தி விடலாம் என கதிர் கூறுகிறார்.

Pandian Store serial 2023 April 13th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏப்ரல் 13ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஜீவா வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று சொன்னதை வீட்டில் அனைவரிடமும் சொல்லிக்கொள்ள, கதிர் சொல்லிக் கொண்டிருக்க, ஜீவா அப்படி எல்லாம் சொல்ல மாட்டானே என்று தனம் சொல்ல, அவன் வேறு கதை சொல்லிக்கிட்டு இருக்கான் என்று கதிர் சொல்ல என்ன கதை என்று தனம் கேட்க கார் வாங்கின விஷயத்தை என்கிட்ட சொல்லல என்று கேட்கிறான் என கதிர் கூறுகிறார்.

அதற்கு முல்லை அம்மா நீங்க கார் வாங்கினது அவரால் சகிச்சுக்க முடியல, பொறாமை என்று திட்ட, அதற்கு முல்லை அவங்களால கார் வாங்க முடியாதுனு இல்லை, அவங்க மாமனாரு வீட்டுல காரை நம்ம வீட்டு வாசலில் கொண்டு விட்டாங்க, நாம தானே வேண்டாம் என்று சொல்லி கொடுக்க சொன்னோம் என்று சொல்ல, அதற்கு அவருடைய அம்மா அது மாமனார் வீட்டு காரு உங்ககிட்ட இருக்கிறது நீங்களே சம்பாதிச்சு வாங்குன காரு.

Pandian Store serial 2023 April 13th promo and Episode Highlights

அதற்கு அப்படியெல்லாம் இல்லை அத்தை நீங்க இப்படி எதையும் சொல்லிவிட்டு இருக்காதிங்க என கதிர் திட்ட, உங்க ஜீவா அண்ணனை எல்லாம் படிக்க வச்சாங்களே உங்களை என்ன படிக்க வச்சாங்க என்று மாமியார் கேள்வி கேட்டு, அதற்கு அண்ணன் என்ன படிக்க வைக்கலைன்னு சொல்லல, நான் தான் போகல என்று கதிர் சொல்ல, நீங்க கேட்கலை உங்க ஜீவா கேட்கிறார் அவ்வளவுதான் என்று பிரச்சனையை பெரிது பண்ண பார்க்கிறார். பிறகு எல்லாரும் அவங்க வீடு அவங்க குழந்தைகள்னு இருக்காங்க நீங்களும் முல்லையும் தான் இப்படி இருக்கீங்க என்று திட்டுகிறார். தனம் இவர்கள் பேசியதை யோசித்துக் கொண்டிருக்கிறார்.

Pandian Store serial 2023 April 13th promo and Episode Highlights

அடுத்ததாக கண்ணன் வீட்டிற்கு கிரெடிட் கார்டு வருகிறது. இது எப்படி வந்துச்சு என்று கண்ணன் கேட்க. உன்கிட்ட ஓடிபி எல்லாம் கேட்டு நான் தான் ஃபில் பண்ணேன் என்று ஐஸ்வர்யா சொல்லி, வா கிளம்பலாம் என்று நகைக்கடைக்கு கூட்டிட்டு போகிறார். முல்லை அக்கா வளைகாப்புக்கு ஏதாவது நாம செய்யணும். அப்பதான் நமக்கு மரியாதையா இருக்கும் என்று சொல்லி, மோதிரத்தை பார்த்துவிட்டு கூடவே தனக்கு ஒரு கம்மலையும் எடுத்துக் கொள்கிறார்.

பில்லை பார்த்து கண்ணன் இப்போதைக்கு உனக்கு கம்மல் வேண்டாம் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல அதுதான் கிரெடிட் கார்டு இருக்கே இஎம்ஐ தானே எப்ப வேணாலும் கட்டிக்கலாம் நீ எனக்கு எடுத்து தர மாட்டியா? என்று கோபப்பட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஐஸ்வர்யா இருக்க, பிறகு ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த கண்ணனும் நகையை வாங்கி கொடுத்து பில்லை பார்த்து கலங்கி நிற்கிறார்.

Pandian Store serial 2023 April 13th promo and Episode Highlights

அடுத்ததாக முல்லையின் வீட்டிற்கு முல்லையின் அப்பா வர வளைகாப்பு நேரத்தில் சாப்பாடு எப்படி வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் அமைதியாக இருக்க ஏன் இப்படி இருக்க என்று எல்லோரும் கேட்க, வளைகாப்பை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். எல்லாரும் வருவாங்களா? இல்லையான்னு? தெரியலையே? என்று சொல்ல எல்லாரும் வருவாங்க என தனம் சமாதானம் படுத்த பார்க்க, அப்போ முல்லையின் அம்மா, எப்ப பார்த்தாலும் உங்க அண்ணன் தம்பிகள் மட்டும் தான் உங்களுக்கு முக்கியமா?

நான் என் பொண்ணுக்கு சந்தோஷமா செய்யணும்னு நினைக்கிறேன். ஏற்கனவே கல்யாணத்தில் நடந்த மாதிரி பிரச்சனையை இப்போதும் இழுத்துகிட்டு வந்துராதீங்க. இத்தனை வருஷமா குழந்தை இல்லாம இருக்கான்னு பேரு எடுத்துட்டு இப்பதான் முல்லை உண்டாகி இருக்கா அதிலும் இப்படி பிரச்சனை பண்ணாதீங்க. நான் பொல்லாதவன் ஆகிடுவேன் என்று கரராக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+