ஜனார்த்தனனால் வீட்டு வாசலில் நிற்கும் மூர்த்தி..ஃபீல் பண்ணும் தனம்..ஐஸ்வர்யாவிற்கு விழுந்த அடி
சென்னை: மூர்த்தியை கோபப்படுத்துவதற்காக ஜனார்த்தனன் செய்த செயல் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.
கதிர் வீட்டுக்கு சென்ற ஜீவா வீட்டிற்குள் செல்லாமல் வாசலிலே நிற்கிறார்.
Youtube வீடியோ எடுக்கும் போது ஐஸ்வர்யாவிற்கு வயிற்றில் அடிபட்டு விடுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜீவா அனுப்பி வைத்த ஆளை மூர்த்தி வேலைக்கு எடுக்காததால் அவர் ஜனார்த்தனன் முன்பு வந்து உங்கள் பெயரை சொன்னதும் நம்ம கடையை மூட வைப்பதற்காக ஆள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூர்த்தி திட்டி விட்டார் என்று கூறுகிறார்.
அதை கேட்ட ஜனார்த்தனன் ஜீவாவை ஏற்றி விடுகிறார். ஆனால் மீனா மூர்த்தி மாமா எப்படி பேசுவார் என்பது தான் உனக்கு தெரியுமே என்று ஜீவாவை சமாதானம் செய்கிறார். பிறகு ஜீவாவும் மீனாவும் கிளம்பி சென்ற பிறகு அந்த நபருக்கு ஜனார்த்தனன் பனத்தை கொடுத்து நான் சொன்னபடியே நீ அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பேசிட்ட என்றும் இது யாருக்கும் தெரியக்கூடாது என்றும் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இந்த பக்கம் தனமும் முல்லையும் சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா வீட்டு வாசலில் நின்ன படி மிமிக்கிரி செய்து கணக்கெடுக்க வந்திருப்பதாக கூறுகிறார். வெளியே வந்து பார்த்து முல்லை சந்தோஷம் அடைந்து மீனாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல தனமும் மீனாவை பார்த்ததும் சந்தோஷப்படுகிறார். மீனா குழந்தையோடு கொஞ்சி விட்டு பின்பு தான் சர்டிபிகேட் எடுக்க வந்திருப்பதாக கூறி சர்டிபிகேட்டை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்.
நீ மட்டும் தனியாவா வந்த மீனா என்று கேட்க இல்லை ஜீவாவும் வந்திருக்கிறார். உள்ளே வரலைன்னு சொல்லி வெளியே நிற்கிறார் என்று சொல்ல, தனம் வெளியே வந்து பார்த்து ஜீவா கார் பக்கத்தில் நிற்பதை பார்த்து ஃபீல் ஆகிறார். பிறகு ஜீவா எதுவும் சொல்லாமல் மீனாவை ஏற்றிக்கொண்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக ஐஸ்வர்யாவும், கண்ணனும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வளைகாப்பு சிறப்பாக பண்ணனும் அதற்கு முன்பு நிறைய வீடியோ பண்ணி போட ஆரம்பித்தால்தான் சரியா வரும் என்று சொல்ல, கண்ணனும் சரி என்று சொல்கிறார். பிறகு விடிஞ்சதும் ஐஸ்வர்யா போனையே பார்த்துக் கொண்டு இருக்க இருவரும் டான்ஸ் ஆடி போடலாம் அப்போ நிறைய பேரு ரசிப்பாங்க. அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது டான்ஸ் ஆடினால் பலர் பாராட்டுவாங்க என்றெல்லாம் பேசுகிறார்.

பிறகு இருவரும் ஒரு லொகேஷனுக்கு வருகிறார்கள். அங்கே டான்ஸ் பிராக்டீஸ் பண்ணி பார்த்துவிட்டு ஆடிக் கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா கீழே விழுந்து விடுகிறார். பின்னர் அவரை கண்ணன் தூக்கி விட எனக்கு ஒன்றும் இல்லை நல்லாத்தான் இருக்கிறேன் என்று கூறுகிறார். அதோடு மீண்டும் டான்ஸ் ஆடி வீடியோவை இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளை வரும் எபிசோடில் ஐஸ்வர்யா வயிற்று வலியால் துடிக்கிறார். கண்ணன் அவரை ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேர்க்கிறார். கையில் பணம் இல்லாமல் கண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications