பாண்டியன் ஸ்டோரில் எதிர்பாராத முடிவு.. கடைசியில் மொத்த குடும்பத்திற்கும் ஐஸ்வர்யாவால் வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் ஐஸ்வர்யா செய்த செயலால் கண்ணனுக்கு மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்திற்கும் பிரச்சனை வருகிறது.

அதே நேரத்தில் மருத்துவமனையில் இருக்கும் முல்லை மற்றும் மீனா, தனத்திற்கும் கதிர் அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கண்ணன் மீது எந்த தப்பும் இல்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த பேங்க் மேனேஜர் தான் என்று கண்ணன் லஞ்சம் வாங்கவில்லை என்றும் வீடியோ ஒன்றை அப்லோடு செய்கிறார். அதை தெரிந்து கொண்ட கண்ணன் ஐஸ்வர்யாவை திட்டுகிறார். சும்மாவே இருக்க மாட்டியா? என்று திட்ட அதற்கு ஐஸ்வர்யா உன்னை பற்றி எல்லோருக்கும் தெரியனும் உன் மேல எந்த தப்பும் இல்லை என்பதற்காகத் தான் நான் இப்படி போட்டேன் என்று விளக்கம் கொடுக்கிறார்.

அதை டெலிட் பண்ணு என்று கண்ணன் எவ்வளவோ கெஞ்சியும் ஐஸ்வர்யா நான் டெலிட் பண்ண மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, கண்ணன் அந்த போனை பிடுங்கி டெலிட் செய்ய போகும்போது வீட்டுக்குள் இரண்டு பேர் அடியாள்கள் போல வந்து ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை திட்டுகின்றனர். யாரு வீடியோ போடுவது என்று கேட்டதும் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா நம்மை பாராட்ட வந்திருக்கிறார்கள் என்பதாக நினைத்து நான் தான் என்று பெருமையாக பேசுகிறார்.
பிறகு அவர்கள் அந்த பேங்க் மேனேஜரில் தம்பிகள் என்றும், எங்க அக்காவை நீ மாட்டி விட்டபோதே உன் கைய கால ஒடச்சி இருக்கணும். அப்ப ஒன்னும் பண்ணாம விட்டது பெரிய தப்பா போச்சு. இப்போ நீ அந்த வீடியோவை டெலிட் பண்ணனும். அது கூடவே நீ எங்க அக்காவை அரெஸ்ட் பண்ண வீடியோவையும் லிங்க் பண்ணி வச்சிருக்க அதையும் டெலிட் பண்ணு, அதோட நீங்க வீட்ல இருக்குற எல்லாரும் சேர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்று போடணும் என்று மிரட்டி இருந்தனர்.

அதற்கு கண்ணன் அவர்களுடைய காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்டு வீடியோவை டெலிட் செய்கிறார். ஆனால் மன்னிப்பு கேட்டு வீடியோ போட முடியாது என்று கூறுகிறார். ஆனால் நாங்கள் கொஞ்ச நேரம் தான் டைம் தருவோம் அதுக்குள்ள முடிவு எடு என்று ரவுடிகள் வீட்டை விட்டு போய் விடுகின்றனர். இதற்கு அடுத்து ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை அதிகமாக திட்டுகிறார். நீங்க செஞ்ச தவறுக்காக வீட்டில் இருக்கவங்களுக்கெல்லாம் அடிக்கடி பிரச்சனை மேல பிரச்சனை குடுத்துகிட்டே இருக்கீங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டிற்கு கதிர் மற்றும் மூர்த்தி வர ஐஸ்வர்யா, கண்ணன் முகம் சரி இல்லாததை வைத்து என்ன ஆச்சு என்று மூர்த்தி கேட்ட, அதற்கு ஐஸ்வர்யாவின் சித்தியா நடந்ததை பற்றி சொல்ல வர ஐஸ்வர்யா சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். பிறகு ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி, ஐஸ்வர்யாவுக்கு வீட்டில் சமைக்க முடியலையாம் அதனால ஹோட்டல்ல சாப்பாடு வாங்கலாமா என்று கேட்டுகிட்டு இருக்கா என்று கதையை மாற்றி சொல்கிறார்.

பிறகு மூர்த்தியும் கதிரும் வீட்டை விட்டு போன பிறகு மீண்டும் அந்த அடியாள்கள் வந்து உங்க வீட்டில இருக்கிறவங்க அண்ணி, குழந்தைகள் வரை எல்லாரும் அந்த வீடியோவில் பேசி மன்னிப்பு கேட்கணும் என்று மீண்டும் மிரட்டி விட்டு நாளை காலை வரைக்கும் தான் உங்களுக்கு டைம் என்று சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகின்றனர். அப்போது வீட்டிற்குள் வரும் கதிர் அவர்களைப் பார்த்து யார் என்று கண்ணனிடம் விசாரிக்க கண்ணன் எனக்கு தெரிஞ்சவங்க என் கூட வேலை பார்த்தவங்க என்று ஏமாற்றுகிறார்.
அதைத் தொடர்ந்து நீங்கள் இப்போதும் உண்மையை சொல்லவில்லையா? என்று கஸ்தூரி, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை திட்டி கொண்டு இருக்க அந்த நேரத்தில் கதிர் முல்லைக்கு போன் பண்ணுகிறார். ஹாஸ்பிடல் இருக்கும் முல்லை போனை எடுத்து தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கும்போது நானும் திருச்சிக்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியான முல்லை ஓடி சென்று தனம் மற்றும் மீனாவிடம் இதை சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications