பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.. இதை கவனிச்சீங்களா? இப்படி ஆகிட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவரும் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த புது வீட்டிற்கு குடிப்பெயரும் காட்சிகள் விரைவில் வர இருக்கிறது.
அதே நேரத்தில் எதிர்பார்த்த பல மாற்றங்கள் நடக்காமல் எதிர்பாராத திருப்பங்கள் வந்து இருக்கிறது.

அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றும் காத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியலாக இருக்கிறது. ஆரம்பக் காலகட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அதிகமான ரசிகர்களால் கவரப்பட்ட நிலையில் இப்போது சில எபிசோடுகளாகவே தனத்தில் கேன்சர் குறித்த காட்சிகள் அதிகமாக இடம்பெற்று கொண்டிருப்பதும் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதும் பலருக்கும் சளிப்படைய வைத்திருந்தது.

அதே நேரத்தில் கதையில் அழுத்தம் இல்லாமல் கதை போய்க்கொண்டிருந்ததால் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலுக்கு எதிராக கருத்து கூறி வந்தனர் இப்படியாக இருக்கும் நிலையில் ஒரு வழியாக தனத்தின் ஆப்ரேஷன் முடிவடைந்து இருக்கிறது. அது குறித்த உண்மையும் இன்றைய எபிசொட்டில் கதிருக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை குறித்து மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்று கூறப்பட்டு வந்தது. அதே நேரத்தில் இந்த சீரியலில் புதியதாக கட்டப்பட்டிருக்கும் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் வைத்திருக்கின்றனர். அதில் தனலட்சுமியின் பெயரில் வீட்டிற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. புது வீட்டில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மொத்த நடிகர்களும் புகைப்படமும் எடுத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் சீரியல் முடிவடைய போகிறதா என்று இந்த சீரியலில் இயக்குனர்களில் ஒருவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்த நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் பதில் கொடுத்திருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றார்கள். அதே நேரத்தில் சீரியலின் ரசிகர்கள் இது நல்ல முடிவு தான். ஆனால் கதிர் மற்றும் முல்லையின் எபிசோடுகள் கொஞ்சம் அதிகமாக கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். ஆனாலும் கதை என்ன மாதிரி இனி பயணிக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications