லஞ்சம் வாங்கியதை சொன்ன கண்ணன்.. மூர்த்தியின் கட்டளை.. அடங்கிய குடும்பம்.. முடிவுக்கு வந்த பிரச்சனை
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் தான் இரண்டு மூன்று முறை லஞ்சம் வாங்கி இருக்கிறேன் என்று கதிரிடம் ஒத்துக் கொள்கிறார்.
கண்ணனை ஜெயிலில் அடைத்ததால் மூர்த்தி கோபத்தில் திட்ட அப்போது ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி வந்து ஹாஸ்பிடலில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில் கண்ணனுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று மூர்த்தி திட்ட வட்டமாக கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூலை 14ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் கண்ணன் பற்றிய செய்தி கேட்டதும் பேங்குக்கு கதிர் சென்று கண்ணனிடம் விசாரிக்க, நான் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை லஞ்சம் வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த முறை நான் வாங்கவில்லை என்று கண்ணன் கதறி அழுகிறார்.
இதைக் கேட்டு கதிர் அதிர்ச்சியாகி நிற்க, அந்த நேரத்தில் போலீஸ் உள்ளே வந்து நாங்கள் விசாரிக்கணும் என்று கண்ணனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கைது செய்து கூட்டிக்கொண்டு போகின்றனர். இந்த நிலையில் மீனாவின் வீட்டிற்கு அவருடைய அப்பா வருகிறார். அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. ஃபோனை எடுத்து பேசியதும் நியூஸ் பாருங்கள் என்று சொல்கிறார்கள். இவரும் போனில் நியூஸ் பார்க்கிறார்.
அப்போது கண்ணனை கைது செய்து கூட்டிட்டு போவது செய்தியில் இருக்கிறது. அதை பார்த்து கோபமான ஜனார்த்தனன் திட்ட, பக்கத்திலிருந்து மீனா இதை பார்த்து கண்ணன் இப்படி எல்லாம் பண்ணியிருக்க மாட்டான் என்று சொல்லிக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் வரும் ஜீவாவும் இதை பார்த்து நேரடியாக நாங்க வீட்டுக்கு போய் விசாரித்துக் கொள்கிறோம் என்று கிளம்புகின்றனர்.
அவர்கள் இருவரும் போனதும் ஜனார்த்தனன் அன்னைக்கே சொன்னேன் அவனுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருது, இவ்வளவு ஆடம்பரம் தேவையானு கேட்கும்போது மாப்பிள்ளை தன்னுடைய தம்பிக்காக துள்ளிக்கிட்டு வந்தாரு. ஆனா தம்பி என்ன வேலை பண்ணி வச்சிருக்கான்? சத்தியம் தான் முக்கியம்னு பேசுற சத்திய மூர்த்தி தம்பி இன்னைக்கு லஞ்சம் வாங்கி மாட்டிருக்கான். நல்ல குடும்பம் என்று அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கதிர் வீட்டிற்கு வர அங்க மொத்த குடும்பமும் கதிர்காக காத்திருக்கின்றனர். கதிரை பார்த்ததும் ஐஸ்வர்யா கண்ணனை எங்கே என்று கதறி அழ, போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்க என்று சொல்ல, கண்டிப்பாக கண்ணன் லஞ்சம் வாங்கி இருக்க மாட்டான் என்று தனம் சொல்ல மூர்த்தி அனைவரையும் திட்டுகிறார். அந்த நேரத்தில் ஆதாரப்பூர்வமாக தான் போலீஸ் அவனை கைது பண்ணி இருப்பதாக சொல்றாங்க என்று கதிர் சொல்கிறார்.
பிறகு ஐஸ்வர்யாவும் ஆமா அவன் கிட்ட கொஞ்சம் பணம் இருந்தது. நான் எப்படி வந்ததுன்னு கேட்கும்போது ஒரு வேலை முடிச்சு கொடுத்ததுக்காக கமிஷன் கிடைச்சதுன்னு சொன்னான் என்று சொல்ல, அவனை நீ எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அவனால எல்லாரும் நிம்மதியும் போயிரும் என்று கதிரை மூர்த்தி திட்ட ,அப்போதும் தனம் கண்ணன் லஞ்சம் வாங்கி இருக்க மாட்டான் அவன் எல்லாத்தையும் நிரூபித்து வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார.

அந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி வந்துவிடுகிறது. அவரை அவசர அவசரமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் சேர்க்கின்றனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த விஷயத்தை மீனா முல்லைக்கு போன் பண்ணி சொல்ல, முல்லை சந்தோஷப்படுகிறார். பிறகு முல்லை கதிரிடம் நீங்க கண்ணன் விஷயத்தில் என்ன செய்ய போறீங்க என்று கேட்க, மூர்த்தி யாரும் அவனை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என்ற கட்டளை போடும் விதமாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications