முல்லைக்காக மீனாவை திட்டும் பார்வதி..சத்யம் பண்ணும் தனம்.. அவமானத்தில் மூர்த்தி..திடீர் திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை மருத்துவமனையில் இருப்பதால் அவருடைய அம்மா பார்வதி கோவிலில் வைத்து தனத்திடம் அழுது கொண்டிருக்கிறார்.
பார்வதி தன்னுடைய மகளின் வாழ்க்கை இவ்வளவு கஷ்டமாவதற்கு காரணமே மீனாதான் என்று பழி போடுகிறார்.

மூர்த்தியிடமும் என் பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆகுறதுக்கு உங்க வீட்டு ராசி தான் காரணம் என்று பார்வதி திட்டுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பார்வதியும் தனமும் கோவிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்காங்க. அப்போ பார்வதி என் பொண்ணுக்கு மட்டும் வாழ்க்கை ஏன் இப்படி போராட்டம் நிறைந்ததாக இருக்கு, ஊர் உலகத்துல எல்லாரும் கல்யாணம் பண்றாங்க சந்தோஷமா இருக்காங்க என் பொண்ணுக்கு நெனச்ச மாதிரி கல்யாணமும் நடக்கல,
அப்போ இருந்தே தொடங்கிய பிரச்சனை தான் இப்ப வரைக்கும் என் பொண்ணுக்கு அழுகை மட்டும் தான் இருக்குது. ஒவ்வொரு விஷயத்துக்கும் என் பொண்ணு போராடிக் கொண்டுதான் இருக்கா என்று அழுது கொண்டிருக்க, தனம் பார்வதியை சமாதானம் படுத்துகிறார். பாருங்க பெரியம்மா எப்படியும் முல்லையும் கதிரும் குழந்தையோடு சந்தோஷமா வருவாங்க என்று கூறுகிறார். இது கண்டிப்பா நடக்குமா? என்று பார்வதி கேட்க அதற்கு தனம் சத்தியமா நடக்கும் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் கதிர் அழுதுகொண்டு இருக்க ஜீவாவும் மீனாவும் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர். இப்படியே அழுதுகிட்டு இருந்தா எப்படி என்று மீனா கேட்க, எனக்கு முல்லை தான் முக்கியம். நான் அவளுக்காக எதுவும் செய்யல, முல்லை தான் என் வாழ்க்கையே மாற்றினது என்று கதிர் பீல் பண்ணி அழுது கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மூர்த்தி தன்னுடைய அம்மா அப்பா போட்டோ முன்பு நின்னு மனம் உருகி வேண்டிக்கிட்டு இருக்காரு. இந்த வீட்டு கஷ்டத்துக்காக கதிர் படிக்காத வேலை செஞ்சு அவ்வளவு உதவி செஞ்சான். ஆனா அவன் எப்போதும் சந்தோஷமா இருந்ததே இல்ல. அவனுக்கு தான் அடுத்தடுத்து பிரச்சனை வந்துகிட்டு இருக்கு. எப்படியாவது கதிர் அவன் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமா இருக்கணும் என்று கண் கலங்கியபடி வேண்டிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக அங்கு வரும் முல்லையின் அப்பா அம்மாவிற்கு மூர்த்தி ஆறுதல் கூறி கொண்டிருக்கிறார். அப்போ முல்லையின் அம்மா பார்வதி என் பொண்ணுக்கு இப்படி ஆவதற்கு காரணமே உங்க வீட்டு ராசி தான். அதுதான் அவளுக்கும் ஒட்டிக்கிட்டு என்று கூற, மூர்த்தி அவமானத்தில் கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications