ஜீவாவை அவமானப்படுத்தும் மாமனார்.. கடும் கோபத்தில் மீனா எடுத்த முடிவு.. பரபரப்பான திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்திருப்பதால் மூர்த்தி கோயிலுக்கு தேங்காய் உடைத்து தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து ஜீவா ஏழைகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் கொடுப்பதாக வேண்டி இருந்ததாக கூறுகிறார்.

அதைக் கேட்ட ஜனார்த்தனன் ஜீவாவை அவமானப்படுத்த அதனால் மீனா கோபமாகி அப்பாவிடம் சண்டை போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததற்காக மூர்த்தி தேங்காய் உடைத்து கொண்டு இருக்க அதை பார்த்து முல்லையின் அப்பா கண் கலங்குகிறார். பிறகு மூர்த்தியும் தனமும் அவரை சமாதானம் படுத்துகின்றனர்.
அதைத் தொடர்ந்து ஜீவா வீட்டிற்குள் போனில் பேசிய படியே சாப்பாடு செய்ய சொல்லி கூறிக் கொண்டிருக்கிறார். அதைக்கேட்ட மீனாவின் அப்பாவும் அம்மாவும் என்ன என்று விசாரிக்கின்றனர். அப்போது முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துச்சுன்னா ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கிறதா வேண்டிகிட்டேன் என்று சொல்ல அதை ஜனார்த்தனன் நக்கல் செய்கிறார்.
அப்போது நீங்க உங்க தம்பி கடையில ஆர்டர் கொடுத்ததுனால இலவசமா செய்ய சொல்லிட்டீங்களா? என்று விசாரிக்க, இல்ல வெளியே என்ன விலை கொடுக்குறாங்களோ அதே விலைக்கு தான் நான் அங்கேயும் பேசி இருக்கேன் என்று சொல்ல அதைக் கேட்டு மீனாவின் அப்பாவும் அம்மாவும் ஜீவா கிளம்பியதும் திட்டுகின்றனர். ஏற்கனவே ஒரு தம்பி குழந்தை பிறந்ததற்கு அன்னதானம், இனி அடுத்து இன்னொரு தம்பியும் இன்னொரு அண்ணனுக்கும் குழந்தை பிறக்கும் அப்ப என்னவெல்லாம் பண்ண போறாரோ என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைக் கேட்ட மீனா உனக்கு இதை பொறுத்துக்க முடியலன்னா இங்க இவ்வளவு தூண் இருக்கு பாரு இதுல முட்டிக்கோ என்று திட்டிவிட்டு போகிறார். பிறகு மீனா தண்ணி எடுத்துட்டு வரும் வழியில் மீனாவின் அப்பா அவங்க அண்ணன் தம்பிக்கலாம் இந்த மாதிரி வசதி இல்ல ஆனா நம்ம மாப்பிள்ளைக்கு கோடிக்கணக்கா எடுத்து செலவழிக்க பணம் இருக்கு இல்ல அதான் செலவழிக்கிறாரு என்று கூறிக் கொண்டிருக்க அந்த அதைக் கேட்டு மீனா அப்பாவிடம் என்ன சொன்னீங்க என்று கேட்க, அவர் இல்லை நான் ஒன்னும் பேசல என்று சமாளிக்கிறார்.
அதற்கு இல்லையே நீங்க எவன் அப்பா வீட்டு காசு எடுத்து செலவழிக்கிறாருன்னு கேட்டீங்க என்று கோபப்பட்டு 100 பேருக்கு சாப்பாடு போட ஒரு 5000 ரூபாய் ஆகுமா? ஆனா இவன் இங்க எவ்வளவு வேலை பார்க்கிறான் காலையில 8:00 மணியிலிருந்து ராத்திரி வரைக்கும் கடையில தான் இருக்கான். அதுக்கு நீங்க சம்பளமா கொடுக்குறீங்க என்று கேட்க? நான் தான் எடுக்க சொல்றேன் மாப்பிள்ளை எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.
பிறகு இது ஜீவாவிற்கு அவருடைய நண்பர் ஒரு இடத்தை முடிச்சு கொடுத்ததற்காக கொடுத்த பணத்திலிருந்து தான் செய்கிறான். உங்கள் காசுல இருந்து அவன் எதுவும் செய்யல என்று மீனா திட்டி மேலும் அவன் ஒன்னும் அவன் வீட்ல உட்கார்ந்து உங்க சொத்த அபகரிச்சிட்டு இருக்கல. இங்க வந்ததால உங்களுக்கு தான் லாபம் அவன் இங்க அவ்ளோ வேலை பார்க்கிறதால தான் நீங்க இங்க ஜாலியா உக்காந்து இருக்கீங்க. அதை மறந்துட்டு பேசாதீங்க என்று திட்டி விட்டுப் போகிறார்.
அதைத்தொடர்ந்து முல்லை ஹாஸ்பிடலில் இருக்க முல்லைக்கு கதிர் சாப்பாடு ஊட்டி விட்டு மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் எல்லோருக்கும் பார்சல் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்க சாப்பாடு வாங்க வருபவர்கள் பலர் சாப்பாடு வாங்கிவிட்டு இருவரையும் ஆசீர்வாதம் செய்து கொண்டு போகின்றனர்.
அதைத் தொடர்ந்து முல்லை தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று சொல்ல குழந்தை இருக்கும் அறையில் கதிர் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். பின்பு மீண்டும் முல்லையை படுத்து தூங்க வைத்து கதிர் அருகிலேயே இருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் முல்லைக்கு தலை சீவி விடுகிறார் கதிர் . அதே நேரத்தில் ஹாஸ்பிடலில் மொத்த குடும்பமும் காத்திருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications