மீனா வீட்டை விட்டு போக முடிவெடுத்த ஜீவா..கோபத்தில் மூர்த்தி கேட்ட கேள்வி..கதறி அழுத தனம்
சென்னை: கண்ணன் கதிரிடம் பணம் வாங்கியதற்காக மூர்த்தியின் நடு தெருவில் வைத்து கண்ணனை திட்டுகிறார்.
கயல் பெயரை மாற்றி வைக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் குடும்பத்தினர் கூறியதால் ஜீவா கோபமாகி திட்டுகிறார்.
முல்லையின் அம்மா தனத்தை திட்டியதால் வீட்டை விட்டு போக முடிவெடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 15 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் தெருவில் கண்ணனை பார்த்த மூர்த்தி கண்ணனை நிற்க சொல்லி, கதிர் தான் உன்னை சின்ன வயசுல இருந்து படிக்க வச்சான். இப்ப கல்யாணம் பண்ணிட்டு அவன்கிட்டயே காசுக்கு போய் நிக்கிற, வீட்டை விட்டு வரும்போது நீ கவர்மெண்ட் வேலை பார்க்கிற திமிர்ல தான வந்த.
உங்களுக்கு சம்பளம் வருகிற மெதப்புல வீட்டை விட்டு வந்துட்டு இப்போ செலவுக்கு பணம் இல்லைன்னு மீண்டும் கதிர் கிட்ட போய் நிக்கிற? உனக்கு பணம் அதிகமா வேணும் என்றால் இன்னொரு வேலைக்கு போ, இன்னொருத்தருடைய குடும்பத்தை அழிக்காத, இதுக்கு மேல கதிர்கிட்ட போய் பணம் கேட்டா நல்லா இருக்காது என்று சொல்லித் திட்ட கண்ணன் மன்னிப்பு கேட்டு விட்டு கிளம்புகிறார்.
அதைத் தொடர்ந்து தனமும் முல்லையும் ஒரே ரூம்பில் படுப்பதை பற்றி முல்லை கூறியதை கேட்டு கோபமான முல்லையின் அம்மா மாப்பிள்ளை ரூமுக்குள் படுகிறது இல்லையா நீ எதுக்கு இவ கூட தனியா படுக்கணும் என்று கேட்க முல்லை அக்கா இங்கே தான் படுப்பாங்க நீ சும்மா இரு என்று சொல்லி திட்டுகிறார்.
அடுத்ததாக ஜீவா வீட்டில் எல்லோரும் கயலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கயல் பாப்பா பெயரை சொல்ல சொல்லி அனைவரும் சொல்லிக் கொடுக்க கயல் எதுவும் பேசாமல் இருக்கிறார். அப்போது கயல் என்கிற பெயர் பழைய பெயராக இருக்கிறது. அதை மாத்திடலாம் என்று மீனாவின் அப்பா சொல்ல மீனாவும் அதற்கு ஓகே சொல்கிறார். இதனால் கோபம் அடைந்து ஜீவா இதெல்லாம் வேண்டாம்.

குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து யோசித்து எடுத்து வைத்த பெயர் இது கயல் என்கிற பெயரே நல்லா தான் இருக்கு அதை யாரும் மாற்ற வேண்டாம் என்று கோபமாக பேசிவிட்டு போகிறார். பிறகு இது சும்மா பேசியதற்காக இப்படியாக கோபப்படனும் என்று மீனாட்சி ஜீவாவை சமாளிக்கிறார். மீனா இங்க வந்ததுக்கு நம்ம வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா? என்று கேட்க ஆமா இப்ப அப்படித்தான் தோணுது. எனக்கு இங்க வரதுக்கே பிடிக்கல. இதுக்கு அந்த வீடு எவ்வளவோ பரவாயில்லை என்று ஜீவா கோபத்தில் திட்டுகிறார்.
பிறகு தனம் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க முல்லை அம்மா வந்து இது முல்லையோட வீடு தானே நீ அவ ரூம்ல எதுக்கு இருக்குற. ஒரு வீட்டில் ரெண்டு பிள்ளைத்தாச்சி பொண்ணுங்க இருக்க கூடாது. நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிடு என்று திட்டுகிறார். இதனால் முல்லை அழுது கொண்டிருக்கிறார். பிறகு எல்லோரும் மூர்த்திக்காக காத்துக் கொண்டிருக்கும் போது தனம், கதிரையும் முல்லையையும் உள்ளே போய் படுக்க சொல்கிறார். இதனால் கதிரும் முல்லையும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications